பெரியசிலையொன்று
செதுக்கஆசை
சின்னஉளியொன்று
வாங்கிவந்தேன்.
என்னை
செதுக்கல்புலியென்று
எண்ணிக்கொண்டேன்
செதுக்கித்தீர்த்தபோது
சிலையேதும்
அங்குஇல்லை
குவியலாய்
கருங்கல்சிதறல்கள்.
செழியரசுகவிதைகள்
பஞ்சையாகும்தஞ்சை
மூன்றுபக்கமும்
வீழ்த்தநெருங்கும்பகைவரை
எதிர்க்குமொரு
தானைமறவனாய்
முப்புறமும்வீட்டுமனைகள்சூழ
முக்காகாணி
தெளிநெல்விதைபாவுகிறார்
மூக்கையாதாத்தா.
புழுபூச்சி
நண்டுநத்தைதேடி
வெக்குகின்றன
கொக்குகள்
இரசாயனநஞ்சையில்.
மறுக்கப்பட்டபாசனம்
உயர்ந்துவிட்டஉரம்
கழுத்தைநெறிக்கும்தசுகூலி
கொதிக்கும்வெப்பத்தில்
கூடுகளாகிவிட்ட
ஊமச்சிகளாய்
விவசாயிகள்.
புனல்ததும்பிய
எம்நதி
ஓடிக்கொண்டிருக்கிறது
அனல்ததும்பி.
ஒட்டுண்ணி
குள்ளநரிகளில்லா
அலுவலகங்கள்
இருப்பதாகஅறிந்தேனில்லை
அதிகாரத்தின்நிழலில்
அண்டிப்பிழைக்க
அவைகளேஅறிந்திருக்கின்றன
எல்லோரிடமும்பல்லிளிப்பது
துரும்பைப்பூதாகரமாக்குவது
அடுத்தவர்சுயத்தில்
மூக்குநுழைப்பது
அப்பாவியாய்ப்பாவிப்பது
இவையேஅவையின்
பணிக்கப்படாததொழில்
சாதுபோர்த்தித்திரியுமதை
எதுவும்செய்யயியலாது
தலைமையின்
வாகனமாயிருக்கும்வரை.
தொடர் : காட்டுயிர்களின்காலடித்தடங்களைத்தேடி...