பால்யத்தின்பக்கங்களில்

தனித்துவம்பெற்றுவிட்ட

தேன்மிட்டாய்களை

கைநிறையவைத்துக்கொண்டு

தின்பதற்கு

வாயருகேகொண்டுசெல்லும்போது

சிதறிவிழுந்துவிட்டவைகளை

சீக்கிரமாய்எடுத்துத்தின்ன

கரங்கள்நீண்டதுண்டு

கனவென்றும்பாராமல்

அணிலாநாயா

அடித்துஆடும்ஆலமரத்தின்

மடித்தகிளையை

பிடித்துவிட

ஒடிந்தகிளையோடும்

ஓவென்றவாயசைவோடும்

மண்சேர்ந்து

மயக்கமுற்றகனவொன்றால்

வியர்த்துவிறுவிறுக்கும்

விழிதிறந்தால்கிறுகிறுக்கும்

உள்ளத்துநெருக்கமான

உற்றோரெல்லாம்கூடிக்கொண்டு

தணியாததாகத்தோடு

பேசித்தீர்ப்பதுபோல்

ஒலியற்றஊமைப்படமாய்

காட்சியுண்டுகனவினிலே

வணிகத்திரைப்படத்தில்வரும்

உச்சகட்டபரபரப்புபோல

துரத்தும்பாம்புகளின்

தூரம்குறைந்துநெருங்கி

கால்களில்கடிக்கும்போது

உதறியதுண்டுகால்களை

உண்மையென்றுநம்பி

உலகமேவனமாகிவிட்ட

கனவுப்பொழுதொன்றில்

காளைவிரட்டிவர

ஒற்றையாளாய்

மூச்சிரைக்கஓட

முயற்சித்து

கால்கள்அசைவற்று

கணநேரம்பதைத்ததுண்டு

பேய்மழை

பெய்துதீர்க்க

ஊரும்ஆறும்

ஒன்றாகத்தொடங்கிய

ஒருகனவில்

முற்றிலும்நனைந்தவனாய்

பற்கள்தந்தியடிக்க

குளிரில்நடுங்கியபடியே

குந்தியிருப்பதாகநினைத்து

இழுத்துப்போர்த்தியிருக்கிறேன்

இறுக்கிப்போர்வையை

எரியத்தொடங்கும்குடிசையில்

பரவும்நெருப்பைபார்த்தபடியே

பதறிஓடிக்கொண்டு

ஊரைக்கூட்டநினைத்து

ஓவென்றுகத்த

ஓசைஎழாமலேயே

உள்ளுக்குள்அழுததுண்டு

அரும்புமீசைக்காலங்களில்

அரைகுறைஉடைகளோடு

அட்டைப்படங்களை

அலங்கரித்தநடிகைகள்

கடித்ததுண்டுகனவினிலே

வாக்குகேட்டு

வந்தபோதுதந்த

வாக்குறுதிகள்நிறைவேற்றப்படுவதாய்

இன்றுவரைவந்ததில்லை

எந்தவொருகனவினிலும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.