உழுதுபுரட்ட
மலர்ந்துமணக்கும்
மண்வெட்டிவிழ
மார்புமுட்டலெனநெகிழும்
சாணம்
புழுக்கைகளை
உரமாய்பிரசவிக்கும்
குறுவை
சம்பா
தாளடிகளின்
தாய்மடி
வேரோடுபிடுங்கி
வீசப்படுகிறதுவேளாண்மை
முள்வேலி
கல்நடவு
பணஅறுவடை
தாராளமயம்
தந்ததிருவோட்டோடு
உழவன்நிற்கிறான்
நகரத்துதெருவோரத்தில்.