இசைப் போர்
விலை ரூ.60

"நான் விவசாயத் தொழிலாளியின் மகன். என் சமூக மனிதர்களின் பாடுகளை இங்கே பாடலாக்கியிருக்கிறேன். களத்தில் என் உடம்பை அசைத்த, உணர்வுகளை உலுக்கிய, கண்களைக் குளமாக்கிய கொடுமையான காட்சிகள் எனக்குள் கோபமாய் இறங்கி வெளிப்பட்ட கலவையே எனது பாடல்கள். போர்ச் சிந்தனையுள்ள ஒரு படைப்பாளி, களத்தில் எதிர்கொள்ளும் பாடுகளைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறான் என்றும் வாழ்வின் வசந்தமான அன்பு, காதல், நேசம், அமைதி என்கிற மறுபகுதி குறித்து அக்கறை கொள்வதில்லை போன்ற குற்றச்சாட்டுகள் தவறானது. போர்ச்சிந்தனையுள்ளவன் எந்திரமல்ல. மக்களிடமிருந்து பிரிக்க முடியாத சக்தியாக இருப்பவன். அவன் வாழ்வின் பன்முகத்தன்மையிலிருந்து விலகிச் செல்வதற்கு ஒரு போதும் வாய்ப்பில்லை.''

ஆசிரியர் : தலித் சுப்பையா
வெளியீடு : தலித் தார மய்யம், 32, பாரதிதாசன் சாலை, அரசரடி, மதுரை - 625 016
பக்கங்கள் : 168

வெளிச்சங்களை புதைத்த குழிகள்
விலை ரூ.35

"இருட்டடிப்புச் செய்வதில் பார்ப்பன ஆட்சியாளர், சூத்திர ஆட்சியாளர் என்று வேறுபாடெல்லாம் கிடையாது. உதாரணத்துக்கு பாஞ்சாலங்குறிச்சியில் 1974 இல் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட கட்டபொம்மன் நினைவுக் கோட்டையில் பொட்டிப் பகடை, முத்தன் பகடை முதலானவர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைச் சொல்லலாம். வெள்ளையத்தேவன், தானாபதிபிள்ளை, ஊமைத்துரை, சுந்தரலிங்கம், சக்கம்மாள் இவர்கள் பெயர்களில் மட்டும் தோரணவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போன்று கோட்டையில் அமைக்கப்பட்டிருக்கிற சிலைகளிலும் பொட்டிப்பகடை, முத்தன் பகடை இவர்களுக்கு இடமில்லை. ஏனென்று கேட்கவும் நாதியில்லை.''

ஆசிரியர் : ம. மதிவண்ணன்
வெளியீடு : கருப்புப் பிரதிகள், 45ஏ, இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் சாலை, சென்னை - 5
பக்கங்கள் : 72

உலகமயமாக்கலும்
பணி அமர்வுத் தரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றமும்
விலை ரூ.10

"மெல்ல, மெல்ல நிரந்தரப் பணி என்பது காலாவதியாகி அந்த இடத்தில் ஒப்பந்த ஊழியர் இட்டு நிரப்பப்படுகின்றனர். உலகமயமாக்கலை உடனடியாகத் தடுத்து நிறுத்த முடியாது என்றாலும், இவ்விஷயங்களை நான் எதிர்க்கிறேன் என்று இதை நினைத்து வருத்தப்படுபவர்கள், பகிரங்க அறிவிப்பை வெளியிடுவதற்கு - களப்பணியாற்றுபவர்கள் முயல வேண்டும்.''

ஆசிரியர் : விஜயராகவன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம் , 2, குயவர் வீதி, கிழக்கு ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை - 15
பக்கங்கள் : 56 

Pin It