போபால் விஷவாயு மீதான தீர்ப்பு போலித்தனமாக நீதியின் மீது கோபத்தையும் போராட்டத்தையும் தூண்டியுள்ளது. யுனியன் கார்பெய்ட் டின் தலைவர் வாரன் ஆண்டர்சன் தப்பி வெளிநாடு சென்றதும், அந்நிறுவனமும் மற்றவர்களும் தப்பியதும் நிறுபிக்கப்பட்ட அட்டூழியமாகும். இந்த வருந்ததக்க 26 ஆண்க்கால போப்பால் சம்பவ தொடர் நிகழ்வு சில வர்க்கம் சார்ந்த உண்மைகளை வெளிக் கொனர்ந்துள்ளது. ஒன்று இன்றைய மத்திய காங்கிரஸ் அரசு பெரு முதலாளிகளுக்கும், அமெரிக்க பெரு நிறுவனத்திற்கும் தனது சேவையையாற்றியுள்ளது, இரண்டாவது வர்க்க நிலையுடன் தொடர்புடைய உண்மையாகும். அதாவது இந்த சம்பவத்தில் இறந்துபோன 20,000 பேரும் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களும் போப்பலில் உள்ள ஏழை மக்களே. மூன்றாவதாக அணு விபத்து பொறுப்பு மசோதவை முன்வைக்கும் ஆளும் மத்திய காங்கிரஸ் அரசின் வர்க்க சார்பில் எந்த மாற்றமும் இல்லை என்பது வெளிப்பட்டுள்ளது.

போபால் சம்பவத்திற்க்கும் வழங்கப்பாட தீர்ப்புக்கும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனு பொறுப்பு மசோதவிற்கும் நேரடியான தொடர்பு உள்ளது. இத்தீர்ப்பு வழங்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு பிறகுதான் அனு பொருப்பு மசோதாவை ஆய்வு செய்வதற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூடியது. அரசுக்குப்பட்டு இம்மசோதா வரைவு செய்யபட்ட போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளிப்படையாக இதை எதிர்த்தது. இந்த மசோதாவானது இந்திய அமெரிக்கா ஒப்பந்தத்தின் போது வழங்கப்பட்ட உத்தரவாதத்தின் அடிப்படையிலே தான் கொண்டுபவரப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக எந்த புதிய ஒப்பந்தங்களும் பெறாத அமெரிக்க அணு தொழிற்சாலைகளிலிருந்து குறைந்தப்பட்டம் 10,000 மெகாவாட் சக்தியை பெருவதர்க்கு இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. அதேபோல் இத்தொழிற்சாலைகள் அமைத்து செயல்படுத்துவதின் மூலம் அதற்கான இழப்பிடுகளையும் ஏற்றுக்கொள்ளும் என்று அமெரிக்காவின் செயலாளர் வில்லியம் ஃபிர்ன்ஸ்க்கு வெளியுறவு செயலாளர் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பதை சுட்டிக்காட்டி அமெரிக்கா இந்திய ஒப்பந்ததத்தில் இந்தயா கையெழுத்து இட வேண்டாம் என்ற 2008 அக்டோபர் 2 அன்றே மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில் சொல்லியிருந்தது.

ரியாக்டர்கள் வழங்கும் அமெரிக்க நிறுவனங்களை பாதுகாக்கும் நோக்குடனே தான் இந்த அணு விபத்து பொருப்பு மசோதா கொண்டுவரப்படுகிறது. அதாவது அணு விபத்து ஏற்பட்டு ஏதேனும் பாதிப்புகள் நேர்ந்தால் அதர்க்கான பொருப்பிலிருந்து இந்நிறுவனங்களை பாதுகாப்பதே இந்த மசோதாவின் நோக்கம். வெஸ்டிங் ஹொஸ் மற்றும் ஜெனரால் எலக்ட்ரிக் போன் நிறுவனங்கள் போபால் யுனியன் கார்பெய்டு ஏற்றுக்கொண்ட குறைந்த பட்ச பொருப்பு நஷ்டஈடு 470 மில்லியன் டாலர். உச்சநீதிமன்ற ஒப்புதல் அழித்தபடி கூட தங்களை சாரக்கூடாது என்று எதிர்பார்க்கின்றனர். மத்திய காங்கிரஸ் அரசு அமெரிக்க பெருநிறுவனங்களுக்கு சாதகமான அதிர்ச்சி தருகின்ற இந்த மசோதாவை அமெரிக்காவுக்கு பணிந்து கொண்டு வந்துள்ளது.

அரசு இச்பொறுப்பு முழப்பும் தரும் வகையில் சில விலக்கங்களை முன்வைக்கிறது. பொருளை விற்பவர்கும் வாங்குபவருக்குமான ஒப்பந்தத்தில் அப்படி ஒரு உடன்பாடு இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டு விற்பனையாலரையும் விபத்துக்கு பொருப்பேற்க்க செய்யலாம் என்கிறது. அதாவது பொதுதுறை நிறுவனமான இந்திய அணு சக்தி கழகம் பொருளை வாங்கி செயல்படுத்துபவராக இருந்தாலும், அமெரிக்க நிறுவனம் விற்பவராக இருந்தாலும் மேற்படி விபத்துக்கு பொருப்பேற்கும் ஒப்பந்தம் இருந்தால் மட்டுமே விற்பவர்க்கு விபத்தின் மீதான இழப்பீட்டு பொருப்பை வழங்க முடியும். இம்மசோதா ரியக்ட்டர் தயாரிப்பில் ஏதேனும் குறைபாடு இருந்து விபத்து ஏற்பட்டால் கூட வாங்கிய வரோ, அல்லது இதனால் பாதிக்கப்பட்டவரோ பெருளை விற்றவரிடமிருந்து எந்த நஷ்ட ஈடும் பெர உரிமையற்றவறாக மாறிவிடுவர்.

அரசு மற்றும் மோர் விளக்கத்தை வழங்குகிறது அதாவது மிகப்பெரிய கவணக்குறைவாலோ அல்லது வேண்டுமென்றோ ஏதேனும் பாதிப்பை விற்பவர் ஏற்படுத்தினால் விற்பவரிடம் இழப்பீடு கோரலாம் என்கிறது. விற்ப்பவர்கள் வெண்டுமென்றோ அல்லது மிகப் பெரிய கவனக்குறைவினால் தான் விபத்து ஏற்படுத்தும் என்று நிறுபிப்பது மிகவும் கடினம். அது முடியாத ஒன்று என்றுதான் கருதவேண்டும்.

விபத்துக்கான இழப்பாடு என்பது குறைதபட்சம் 500 கோடி ரூபாய் என்றும் அதிகபட்சம் 2140 கோடி ரூபாய் என்றும் நிர்ணயித்துள்ளது. இம்மசோதா தனியார் நிறுவனங்களை வரவேற்பதர்க்காதத்தான் 500 கோடி என்று இழப்பீடு அரசின் தலையில் கட்டப்படும் இப்படி அரசு தனியார் நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் மனியம் வழங்கப்போகிறது.

இது பட்டவர்த்தனமாக வர்க்க உணர்வை வெளிப்படுத்துகிறது. அதாவது அணு விபத்தால் ஏற்படும் பாதிப்பிக்கும் தங்கள் உயிருக்கும் உடல் ஆறோக்கியத்துக்கும் தாங்களே உரிமூலம் பணம் செலுத்த வேண்டும். ஆனால், அதே சமயம் இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் இழப்பீட்டு பொறுப்பு என்பது குறைக்கப்படும் போப்பால் விபத்தில் யுனியன் கார்பெய்டு நிறுவனம் 713 கோடி ரூபாய் 470 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கியது. அணு விபத்தின் மூலம் ஏற்படும் விபத்து போபால் விபத்தை பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்த கூடியது. ஆனால், இந்த அணு விபத்து பொறுப்பு மசோதா வெரும் 2140 கோடியைதான் அதிகபட்ச இழப்பீடு தொகையாக நிர்ணயித்துள்ளது.

அணு விபத்து பாதிப்புக்கான துணை இழப்பீட்டு கூடுகையை (கன்வென்ஷன்) முன்வைத்தே அரசு அனைத்து அணு விபத்து பொருப்பு மசோதாவை முன்வைக்கிறது. உண்மையில் இந்த கூடுகை அமெரிக்க சார்புடையது. அணு ரியாக்டர்களைத் விற்பவர்களை முழுமையாக பாதுகாப்பதாகும். இதில் வெரும் 13 நாடுகள் மட்டுமே இணைந்துள்ளன. இதிலும் 4 நாடுகள் மட்டும்தான் இதை உறுதி செய்துள்ளது. ஆனால், அரசு ஏன் அணு விபத்து பொறுப்பு வியன்னா கூடுகையை ஏற்று செயல்பட மறுக்கிறது. இந்த கூடுகை குறைந்த பட்ச பொருப்பு இழப்பீடு எவ்வளவு என்று தீர்மானிக்கவில்லை. அதேபோல் அந்தந்த நாடுகள் பொருப்பு மாற்றி அமைத்துக்கொளளும் சுதந்தரித்தையும் வழங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இந்த அணு விபத்து பொறுப்பு மசோதாவை நிறைவேற்றுவதில் மன்மோகன் அரசு காட்டும் ஆர்வத்திலிருந்தே அது எப்படி அமெரிக்காவுக்கு சார்புடையதாக நடந்து கொள்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இம்மசோதாவை பட்ஜெட் கூட்டத்தொடரின் பாதியில் தாக்கல் செய்யும் போது அனைத்து எதிர் கட்சிகளும் இதை எதிர்த்தன. இதன் பிறகு அரசு ச4மாஜ்வாதி கட்சிமற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி போன்ற வற்றுடன் சில உடன்பாடுகள் செய்து கொண்டு கூட்டத் தொடரின் இறுதியில் இதை அறிமுகபடுத்தியது. பொதுவாக இது போன்ற மசோதா ஒப்புதலுக்காக ஆற்றல் நிலை குழுவுக்கு அனுப்படும். ஆனால் இந்த மசோதா அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான நிலைகுழுவிற்கும் அனுப்பப்பாடு ஓப்புதல் பெறப்பட்டுள்ளது. ஏன்னென்றால் இக்குழு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலைமையில் செயல்படுகிறது. மிகப்பெரி கவனக்குறைவு அல்லது வேண்டுமென்றே தவறு இழைப்பதனால் ஏற்படும் விபத்துக்கு விற்பனையாளரிடம் இழப்பீடு கேட்கும் குறைந்த பட்ச உரிமையை வழங்கும் சரத்தை கூட அரசு நீக்க முயற்சி எடுத்தது. இந்த பலவீனமான சரத்தின் மிது கூட தங்கள் மகிழ்ச்சியின்மையை அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ளது.

மன்மோகன் அரசு மீது கொடுத்த வாக்குரிதியை நிறைவேற்ற வலியுறுத்தி கடுமையாக நிர்பந்த செலுத்தப்பட்டது. அரசியல் நடவடிக்கைகளுக்கான செயலாளர் வில்லிம் ஃபிரன்ஸ் வெளியுறவு மன்றக் கூட்டத்தில் 2010 ஜூன் 2 அன்று பேசும் போது இந்திய அமெரிக்காவுக்டையிலான வாக்குரிதி மற்றும் எழுச்சி என்ற இந்த அணு பொருப்பு மசோதாவையே குறிப்பிடுட்டு பேசினார். மேலும் அவர் பேசுகையில் அமெரிக்கா நிறுவனங்கள் இந்தியாவில் அணு சம்மந்தபட்ட கட்டமைப்பு வசதிகளை வளர்ச்சி பெறவைக்க தயாராக உள்ளன. ஏற்கனவே இரண்டு அணு ரியாக்டர் பூங்காகன் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தியா சுயவிருப்புடான சர்வதேச நிலைக்கு அணு பொருப்பு மசோதாவை கொண்டுவர போவதாக இந்திய பிரதமர் வெளிப்படையாக பேசியுள்ளார் என்றும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து நடந்த இந்திய அமெரிக்க கொள்கை சம்பந்தமாக பேச்சு வார்த்தையில் அணு விபத்து பொருப்பு மசோதா கட்டாயம் சட்டமாக இயற்றபடும் என்று வெளியுறுவு துறை அமைச்சர் அமெரிக்காவிடம் உறுதியளித்துள்ளார்.

போபால் போனற் சம்பவமும், வாரன் ஆண்டர்சன் போன்றோர் தப்பிப்பதும் மீண்டும் நிகக்கூடாது. இதற்கு யுனியன் கார்பய்ட் நிறுவனத்தை வாங்கிய டவ் கெமிகல்ஸ் நிறுவனம் போபால் நிறுவன வளாகம் மற்றும் சுற்றுபுறத்தை சீர்செய்யும் செலவை ஏற்க்க வேண்டும். டவ் கெமிக்கல் இந்த பொறுப்பை ஏற்காமல் பாதுகாக்கும் அமைச்சர்களே இந்த போப்பால் சம்மந்தமான அமைச்சர்களே இந்த போப்பால் சம்மந்தமான அமைச்சர்கள் குழுவில் உள்ளனர். இதுவே அரசின் உள் உணர்வை வெளிப்படுத்துகிறது. போபால் சம்பவத்திலிருந்து அரசு சரியாக பாடம் கற்றுக் கொள்ளுமானால் பொருளாதாரக் இழிப்பிட்டுக்கான பொருப்பு மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் வகையிலும் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். மக்களின் உயிரையும் வாழ்க்கையையும் அடமானம் வைத்து இந்திய பெருமுதலாளிகள் மற்றும் அந்நிய நிறுவனங்களையும் பாதுகாக்கக் கூடாது.

இதன் முதல் நடவடிக்கையாக அணு விபத்து பொருப்பு மசோதாவை நிறைவேற்றக் கூடாது.

நன்றி : PEOPLES DEMOCRACY

- ச.லெனின்

Pin It