தனியாக,
யாருமற்ற அறையில்
ஒரு பெண் பேசும் குரல் கேட்கிறது.
அவள் அழுவது போலுமுள்ளது.

குளித்துக் கொண்டிருக்கும் போது,
அக்குரல் கேட்டு,
ஓடிவந்து பார்க்கின்றேன்.

யாருமில்லை!
எங்கே போனாள்?
என்ன பேசினாள்?

பயம் பிடித்துக் கொண்டது,

அடிக்கடித் தோன்றும் பெண் இவள்.
எனக்கு தெரிந்தவள் போல்தானுள்ளது.

இரவுகளில் அருகே உள்ள அறைகளில்
அரற்றியபடியே, பேசியபடியே,
கேவிக் கேவி அழுதபடியே உள்ளாள் அவள்.

ஒரு நள்ளிரவு பேச்சுச் சத்தம் வந்த அவ்வறையை
மிகுந்த தைரியத்துடன் திறந்து பார்த்தேன்.

என் மனைவி உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவள் முகத்தில்,
பயங்கரங்களை எதிர்கொள்ளும்
பயம் பீடித்திருந்தது.

ம.ஜோசப் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It