கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

kolathurmani 3502017 ஜூன் 4ஆம் தேதி திருவான்மியூரில் கழக மாநாடு நிறைவடைந்தது. அடுத்த நாள் 5ஆம் தேதி சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய அரசு அலவலகங்களில் பெயர்ப் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட் டத்துக்கு தோழர்கள் தயாரானார்கள். வெளியூர்களிலிருந்து மாநாட்டுக்கு வந்த தோழர்கள் மாநாடு முடிந்து மூன்று திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அனைவரும் தனி வாகனங்களில் சாஸ்திரி பவன் எதிரே அழைத்து வரப் பட்டனர். பெண்கள் உள்ளிட்ட 200 தோழர்கள் காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தின் கோரிக்கைகள் அடங்கிய ஏராளமான தட்டிகளை கரங்களில் ஏந்தி இந்திப் பண்பாட்டுத் திணிப்பு மத்திய அரசின் பார்ப்பன ஒற்றைக் கலாச்சாரத் திணிப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

மாநில அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி மற்றும் நாமக்கல், சேலம், விழுப்புரம், திருப்பூர், கன்யாகுமரி, நாகை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட கழகத் தோழர்களும், சென்னை மாவட்ட தோழர்களும் பங்கேற்றனர். போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசினார்.

ஒலி முழக்கங்களுடன் தோழர்கள் சாஸ்திரி பவனை நோக்கிச் சென்ற போது காவல்துறை அனைவரையும் தடுத்தது. அப்போது இந்தியில் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய துணி விளம்பரத்தில் போராட்டத் தலைவர், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தார் கொண்டு இந்தி எழுத்துகளை இந்தி எதிர்ப்பு முழக்கங்களுக்கிடையே அழித்தார்.

அனைவரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தனர். 150 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். பகுதி முழுதும் மின்தடை ஏற்பட்டதால் மண்டபத்திலும் மின் தடை; இரண்டு மணி நேரம் கழித்து மின்சாரம் வந்த பிறகு கழக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு தோழர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள், கழகத் தோழர்கள் கொள்கைப் பாடல் களைப் பாடினர். தொடர்ந்து கழகக் கொள்கைகளுக்கு எதிராக முன் வைக்கப்படும் கேள்விகள் - கழக அமைப்பு ஜாதிப் பிரச்சினை உள்ளிட்ட தோழர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கழகத் தலைவர், பொதுச் செயலாளர் விளக்க மளித்தனர். ஆழமான விவாத அரங்கமாக இது நிகழ்ந்தது. மாலை 6 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.