சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வு தமிழ்நாடு அரசு தேர்வாணையத்திற்கு தற்போது பெண்களுக்கான வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில் பின்பற்றப்படும் முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. தற்போது அரசு தேர்வாணையம் பின்பற்றப்படும் நடைமுறை சட்டத்திற்கு புறம்பானது என்றும் அது சுட்டிக்காட்டியிருக்கிறது.

இட ஒதுக்கீட்டில் இரண்டு வகை உண்டு. ஒன்று Horizontal Reservation என்று கூறப்படுகிறது.

Oc, bc, mbc, sc, st இந்தப் பிரிவினர்களுக்கான இட ஒதுக்கீடு தர அடிப்படையிலான இட ஒதுக்கீடு இந்த அடிப்படையில் தான் முதலில் இட ஒதுக்கீடுகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதில், தமிழ்நாட்டில் அமலில் உள்ள பெண்களுக்கான 30% கோட்டா நிரம்பி விட்டால் பிறகு Vertical Reservation என்று சொல்லப்படுகிற பெண்களுக்கான தனி இட ஒதுக்கீட்டில் பெண்களை நிரப்பக் கூடாது என்று உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.

தற்போது தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் 30% பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை பூர்த்தி செய்து விட்டு அதற்குப் பிறகு Oc, Bc, Mbc, Sc, St-க்கான இடங்களை பூர்த்தி செய்து அதில் தகுதி அடிப்படையில் பெண்களை சேர்த்து வருகிறது. இதன் காரணமாக பெண்களின் இட ஒதுக்கீடு எண்ணிக்கை 30% யும் தாண்டி விடுகிறது என்று உயர்நீதிமன்றம் மிகவும் கவலைப்பட்டு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அரசியல் சட்டத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்று எதுவும் கிடையாது என்றும், சொல்லப்போனால் ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடே சட்டத்தின்படி தவறு என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இந்த பாகுபாடு இருக்கிற காரணத்தினால் தான் பெண்களுக்கான இட ஒதுக்கீடுகள் Vertical Reservation என்பவை கொண்டுவரப்பட வேண்டிய அவசியமே எழுந்தது என்பதை நீதிமன்றம் உணரவில்லை. கால்நடை மருத்துவப் படப்பிடிப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 30 சதவீதத்தையும் தாண்டி விட்டது என்றும் நீதிமன்றம் கூறுகிறது.

ஏற்கெனவே இப்படித்தான் இட ஒதுக்கீடு கொள்கையை பார்ப்பனர்களும், உயர்சாதியினரும் எதிர்த்து வந்தார்கள். தகுதி உள்ள நல்ல மதிப்பெண் பெற்ற பார்ப்பன உயர்சாதிக்காரர்கள் புறக்கணிக்கப்பட்டு இட ஒதுக்கீட்டின் காரணமாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் வந்துவிடுகிறார்கள், எனவே இட ஒதுக்கீடு முறையே கூடாது என்று ஒருகாலத்தில் அவர்கள் வாதிட்டு வந்தார்கள். பிறகு நுறுளு உயர்சாதியினருக்கு மட்டும் பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இட ஒதுக்கீடு என்று வந்த பிறகு அந்த வாதத்தை அப்படியே கை விட்டுவிட்டார்கள்.

ஒதுக்கீடு சமூக நீதி என்பது சமத்துவத்தை உள்ளடக்கியது. பெண்கள் இன்றைக்கு 50% மக்கள் தொகை எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு 50% இடங்கள் அனைத்துத் துறைகளிலும் பின்பற்றப்படுகிறதா? நீதி மன்றங்களில் எத்தனைப் பெண்கள் இருக்கிறார்கள்? அமைச்சரவையில் எத்தனைப் பெண்கள் இருக்கிறார்கள்? உயர் அதிகாரங்களில் முடிவெடுக்கும் நிலையில் எத்தனைப் பெண்கள் இருக்கிறார்கள்? பெண்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது அறவே இல்லாத நிலை. எனவே இத்தகைய இட ஒதுக்கீடுகளை பின்பற்றினால் தான் அவர்கள் உயர்ந்த இடத்தை பிடிக்க முடியும் என்கிற போது எண்ணிக்கையை வைத்துக் கொண்டு பெண்கள் 30% ற்கு மேல் போகவே கூடாது என்று பேசுவது சமத்துவத்திற்கு சமூக நீதிக்கு எதிரானது. தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை சரி செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளை ஆழமாக பரிசீலிக்க வேண்டும்.

Pin It