“குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், தீட்சதர்களைக் கட்டுப்படுத்தாது. அது அவர்களின் இயல்பான வாழ்க்கை முறை. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தில்லை நடராஜன் கோபத்துக்கு உள்ளாக நேரிடும். தீட்சதர்கள் பிடிவாத குணம் கொண்டவர்கள். அவர்களுக்கு எஜமான் நடராஜன் மட்டுமே” என்று ‘தினமலர்’ ஆசிரியருக்கு கடிதம் வழியாக மிரட்டுகிறது.

2022ஆம் ஆண்டிலும் இப்படித் ‘திமிர்’ பிடித்து அலைகிறது ‘தினமலர்’ கும்பல்.

தமிழர்களால் பேரறிஞர் என்று போற்றப்படும் அண்ணாவை ‘இடியட்’ என்று பதிவு போடுகிறார் கிழக்குப் பதிப்பகம் நடத்தும் பத்ரிசேஷாத்ரி எனும் பார்ப்பனர். மாநிலங்களவையில் ‘இந்தி’ பற்றி ஏதும் தெரியாமலேயே அண்ணா பேசினாராம். இந்தப் பேர்வழிக்கு தமிழ் இணையக் கல்விக் கழக ஆலோசனைக் குழுவில் பதவி தந்தது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி. இப்போது பதிவிட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே தி.மு.க. ஆட்சி அப்பதவியிலிருந்து அவரை நீக்கியிருக்கிறது. அண்ணாவின் பெயரிலே கட்சி வைத்திருக்கும் குழுக்கள், அண்ணாவை இழிவுபடுத்திய பார்ப்பனரைக் கண்டித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. பார்ப்பன கொத்தடிமைகளிடமிருந்து இதை எப்படி எதிர்பார்க்க முடியும்?

பூணூல்கள் இப்போது ஒன்றிய ஆட்சி ஆதரவு இருக்கிறது என்பதால் தமிழர்களின் உணர்வுகளுக்கு சவால் விட்டு வருகின்றன.

இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். பார்ப்பனரல்லா ‘சூத்திர’ மக்கள் பார்ப்பனர்கள் ஆதிக்கத் திமிரை புரிந்து கொள்ள வேண்டும்.

போக்குவரத்து விதிகளை மீறினால் பூங்கொத்து: ‘சந்தி சிரிக்கும்குஜராத் மாடல்

விபத்துகளைத் தடுக்க போக்குவரத்து விதிகளை மீறுவோர், குடித்து விட்டு வண்டி ஓட்டுவோர்களுக்கு அபராதத் தொகையைக் கடுமையாக உயர்த்தியிருக்கிறது - தி.மு.க. ஆட்சி; இது திராவிட மாடல் ஆட்சி.

குஜராத்தில் என்ன நடக்கிறது?

போக்குவரத்து விதியை மீறுவோருக்கு போலீசார் அபராதம் விதிக்க மாட்டார்களாம். மாறாக, போலீசார் அவர்களுக்கு பூக்களை வழங்கி பாராட்டுவார்களாம். தீபாவளிக்காக வரும் 27ஆம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும். குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சுங்வி, மாநில முதல்வர் பூபேந்திரபட்டில் வழிகாட்டுதலின்படி இதை அறிவித்துள்ளனர். விபத்துகள் நடந்தாலோ உயிரிழப்புகள் நடந்தாலோ அது பற்றி கவலை இல்லை. கொலை கொள்ளைகளில் ஈடுபடுவோருக்கு தீபாவளி பரிசாக அரசு பணமுடிப்புகூட வழங்கி கவுரவிக்கும் அறிவிப்பு வந்தாலும் வியப்பதற்கு இல்லை.

- இது குஜராத் மாடல்.

தேர்தலில் ஓட்டு வாங்க இவ்வளவு கேவலமான அறிவிப்புகளை குஜராத் ஆட்சி அறிவித்துக் கொண்டிருப்பது வெட்கக் கேடு.

- விடுதலை இராசேந்திரன்

Pin It