கண்ணகியின் காற்சிலம்புகளை விற்கவந்த
நிஜ உருவங்கள்
அவர்களுக்கான நாளில்
ஆங்காங்கு முளைத்திருந்த
பொழுது போகாதவர்கள் - நேற்றிரவு
பரத்தையரிடத்து துகிலுரித்த
நவீன இராமன்கள்
வேண்டப்பட்டவர்கள், வெயிலுக்கு ஒதுங்கியோர்
இல்லறவாழ்வைத் துறந்தோரிடத்து
நிஜங்களைக் கழற்றிவைத்து விட்டு
கூனியின் சாபங்களாய்
நீட்டி முழங்கினார் மேடையில்.....
'பெய்யெனப் பெய்யும் மழைக்கு"
புதிய விளக்கங்களைத் தந்து சென்றனர்
பூக்கள் கொடுத்தவர்களை - இன்று
வாங்கியோர் அடைத்து வைத்திருப்பது
மிருககாட்சிசாலை குரங்குகளின் கூண்டிற்குள்,
சலுகைகளால் சங்கடப்பட்டுப் போனவர்கள்
இன்று
அடிக்கடி சென்று வருவது
காக்கி அட்டை காப்புகளைச் சுமக்க

- பா.குமார்

Pin It