மருத்துவப் பட்டமேற்படிப்பிற்கான அகில இந்திய NEET PG 2020ஆம் ஆண்டிற்கான தேர்வில், அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு இல்லை...

நாடு முழுவதும் உள்ள சுமார் 30,774 மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான இடங்களுக்கு (MD, MS) அகில இந்திய நீட் பீஜி தேர்வு ஜனவரி மாதம் மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான குறிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிக்கையில் மொத்தமுள்ள 30,774 இடங்களில் 50% அதாவது, 15,387 இடங்களுக்கு மத்திய அரசே கவுன்சிலிங் மூலம் இடத்தை நிரப்பும்.

இந்த 15,387 இடங்களில் இப்போதுள்ள இடஒதுக்கீடு முறையில் 50 சதவீதம் (7,693 இடங்கள்) பொதுப்பிரிவிலும், 22.5 சதவீதம் (3,462 இடங்கள்) தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும், 27 சதவீதம் (4,155 இடங்கள்) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வழங்க வேண்டும்.

ஆனால், இந்த அறிவிக்கையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு OBC மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படும் என்றும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் இருந்து பெறப்படும் இடங்களில் OBC Reservation வழங்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சொற்பமான 300 இடங்கள் மட்டுமே OBC பிரிவினருக்கு கிடைக்கிறது. இந்த நிலை வரும் கல்வியாண்டிலும் தொடர்ந்தால் சுமார் 3,800 இடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்காமல் போகும்.

ஆனால் இதே ஆணையில் பொதுப் பிரிவில் உள்ள உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீதம் EWS Reservation மொத்தமுள்ள 15,387 இடங்களிலும் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 1,758 மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான இடங்களை கொண்டு அதிலும் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக உள்ளது. இதில் 50 சதவீதம் அதாவது, 879 இடங்கள் மத்திய அரசிடம் தரப்படுகின்றன. இந்த 879 இடங்களில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 50 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடும் பின்பற்றப்படுவதில்லை. மத்திய அரசின் 27% ஒதுக்கீடும் தரப்படுவது இல்லை.

தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 1,758 மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான இடங்களை கொண்டு அதிலும் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக உள்ளது. இதில் 50 சதவீதம் அதாவது, 879 இடங்கள் மத்திய அரசிடம் தரப்படுகின்றன. இந்த 879 இடங்களில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 50 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடும் பின்பற்றப்படுவதில்லை. மத்திய அரசின் 27% ஒதுக்கீடும் தரப்படுவது இல்லை.

மருத்துவப் பட்டப் படிப்பில் என்ன நிலை?

நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு பேசியதாவது:

2017-18 ஆம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புக்கான பொதுத் தொகுப்புக்கு9 ஆயிரத்து 966 இடங்களை மாநில அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் அளித்துள்ளது. இவற்றில் அரசியல் சட்டப்படி 2 ஆயிரத்து 689 பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மாநில கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளிலும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 260 மாணவர்கள் மட்டுமே மத்திய அரசு கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே 2 ஆயிரத்து 429  பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரசியல் சட்டப்படியான வாய்ப்புகள் கல்வியில் மறுக்கப்பட்டுள்ளது. மேலும் 2018-19ஆம் கல்வியாண்டிலும் 3 ஆயிரத்து 101 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது.

Pin It