modi at hitler handஇந்தியாவில் மோடி ஆட்சி படு மோசமான சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது என்று சர்வதேச ஆய்வு நிறுவனம் தனது 2024ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஸ்வீடன் நாட்டின் கோதன்பர்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் V-Dem Institute ஆகும்.

உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு வகையான ஜனநாயகங்கள் எப்படி செயல்பட்டு வருகின்றன என்பது குறித்து மிக நுட்பமாக ஆய்வு செய்யும் உலகின் முதன்மையானது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தில் மட்டும் 180 நாடுகளை சேர்ந்த 4080 பேர் பணியாற்றுகின்றனர். 201 நாடுகளை பற்றிய 31 மில்லியன் தரவுகள் இந்த நிறுவனத்திடம் உள்ளது. 1789 முதல் 2023 வரை உள்ள தரவுகள் இதில் அடங்கியுள்ளது.

மிக துல்லியமாக ஒவ்வொரு நாட்டில் உள்ள வெவ்வேறு வகையான ஜனநாயகப் பண்பு குறித்து அறிக்கை தருவது இந்த நிறுவனம். அத்தகைய நிறுவனம் 2024ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் மோடி ஆட்சி மிக மோசமான சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. இங்கு பேச்சுரிமை கிடையாது. எதிர்ப்பவர்கள் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள், அரசு இயந்திரங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மூன்றாவது முறையாக இந்தியாவில் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மிகமிக மோசமான சர்வாதிகாரத்தை நோக்கி செல்லும் ஆபத்து இருக்கிறது. சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் நிச்சயம் இருக்காது என்று எச்சரித்துள்ளது V-Dem நிறுவனம். மோடி ஆட்சிக்கு இதைவிட சரியான சான்றிதழ் கொடுக்கக்கூடிய நிறுவனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It