கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் உள்ளிட்ட தோழர்கள், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தற் கொலை செய்ததாகக் கூறப்பட்ட ஆய்வு மாணவர் முத்துகிருட்டிணனின் இல்லம் சென்று அவரது குடும்பத் தாரை சந்தித்து ஆறுதல் கூறினர். மதுரை மக்கள் கண் காணிப்பகத்தின் செயல் இயக்குநர் ஹென்றி திபேன், அவரது குழுவினருடன் வந்து ஆறுதல் கூறினார்.

ஆய்வு மாணவர் சேலம் முத்து கிருட்டிணனன் உடல் 16-3-2017 அன்று காலை 6.00 மணியளவில் சேலம், அரிசிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு மக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாவட்ட செயலாளர் டேவிட், மாநகரத் தலைவர் பாலு, செயலாளர் பரமேசு, மூணாங்கரடு சரவணன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் திருச்செங்கோடு வைரவேல், ஆத்தூர் மகேந்திரன் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் காலை 8.00 மணிக்கே மாணவர் முத்து கிருட்டிணன் இல்லம் வந்துவிட்டனர்.

மதுரை எவிடென்ஸ் கதிர், மக்கள் கண்காணிப்பகம் ஆசீர், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர் பாளர் வன்னி அரசு, காங்கிரசு தலைவர் தங்கபாலு, செல்வ பெருந்தகை திமுக மாவட்ட செயலாளர்கள் வீரபாண்டி ராஜா, சிவலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு தோழர்கள், காஞ்சி மக்கள் மன்றம் கீதா மற்றும் தோழர்கள், பகுஜன் சமாஜ் கட்சி செய லாளர் வழக்குரைஞர் பார்த்திபன், தலித் விடுதலைக் கட்சித் தலைவர் செங்கோட்டையன், பொது நல மாணவர் இயக்கத் தோழர்கள் வளர்மதி மற்றும் தோழர்கள், வழக்குரைஞர் தமயந்தி, கவின் மலர், எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக பா.ஜ.க.வின் மத்திய துணை அமைச்சர் பொன். இராதா கிருட்டிணன் வந்தபோது கடும் எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பப் பட்டன. அவர்மீது தனது இரண்டு காலணிகளையும் வீசியதாக சாலமன் என்ற தோழர் காவல்துறையால் அப்புறப்படுத்தப்பட்டார். கடும் கொந்தளிப்பைக் கண்ட காவல்துறை யினர் அமைச்சரின் கார் அங்கேயே இருக்க, அவரை மட்டும் பாது காப்பாக அழைத்துச் சென்று பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்தனர்.

இறுதி ஊர்வலம் நண்பகல் 1.00 அளவில் புறப்பட்டு சேலம் செவ்வாய்ப்பேட்டை இடுகாட்டில் 3-00 மணியளவில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அனைத்து அமைப்புகளின் சார்பாக எவிடென்ஸ் கதிர், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் இரங்கலுரை ஆற்றினர்.

farrok 600பாரூக் கொலை - சென்னையில் தோழர்கள் சாலை மறியல்

ஃபாரூக் கொலையுண்டார் என்ற செய்தியறிந்து அடுத்த சில மணி நேரங்களிலே சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அண்ணாசாலையில் சாலை மறியலில் ஈடு பட்டனர். தோழமை அமைப்புகள் மே 17, இளந்தமிழகம், த.பெ.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் விரைந்து வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

“கடவுள் உண்டு என்று கூறும் உரிமை உனக்கு உண்டு என்றால் இல்லை என மறுக்கும் உரிமை எமக்கு உண்டு. கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை” என்று தோழமை அமைப்புகளே உணர்ச்சிகரமாக முழக்கமிட்டனர். பெரியார் சிலை அருகே 30 நிமிடம் சாலைபோக்குவரத்து நின்றது. காவல்துறை 70க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்து இரவு விடுதலை செய்தது. தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் தலைமையில் மாவட்ட செயலாளர் உமாபதி முன்னிலையில் இந்த மறியல் நடந்தது.

Pin It