கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

nandhini 400நங்கவள்ளி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக அரியலூர் தலித் சிறுமி நந்தினி மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை கொலையை கண்டித்து நீதிக் கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் நடை பெற்றது. கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன் தலைமை ஏற்க, நங்கவள்ளி அன்பு கண்டன உரையாற்றினார்.

அவரை தொடர்ந்து தலைமை செயற் குழு உறுப்பினர்களான சக்திவேல், விழுப்புரம் அய்யனார் மற்றும் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வைரவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக கழக மாநில பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.

ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து தோழர்கள் வந்திருந்தனர். கண்ணன் நகர செயலாளர் நன்றியுரை கூறினார் .அறுபதுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் . பேருந்து நிலையத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட மக்கள் கவனிக்க ஆர்ப்பாட்டம் சிறப்பாக அமைந்தது.

கா.சு. நாகராசன் மீது, ஜாதி வெறி தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

13-2-2017, திங்கட்கிழமை மாலை 4-00 மணியளவில், கோவை வாட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, ஜாதி மதவாத ஆதிக்க எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில், பொள்ளாச்சி கா.க.புதூரில் ஜாதி, மதவாத ஆதிக்க சக்திகளால், பெரியார் திராவிடர் கழகம், சுயமரியாதை சமதர்ம இயக்கத் தலைவர் கா.சு. நாகராசன் தாக்கப் பட்டதைக் கண்டித்தும், குற்றவாளிகளை பிற்பகல் 3 மணி வரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த ஆனைமலை காவல்துறையினர் தப்ப விட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஆதித் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் நாகராசன், எஸ்.டி.பி.ஐ. அபுகசிர், சமூகநீதிக் கட்சித் தலைவர் வழக்குரைஞர் பன்னீர் செல்வம், சமத்துவ முன்னணி வழக்குரைஞர் கார்க்கி, வழக்குரைஞர் முருகேசன், முருகர் சேனை சிவசாமித் தமிழன், தமிழ்க் கல்வி இயக்கம் சின்னப்பா தமிழர், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, திராவிடர் கழக இளைஞர் அணி சிற்றரசு, புதுவை பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தலைவர் தீனா, கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச் சந்திரன், மாநகரத் தலைவர் நேரு, திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு உள்ளிட்ட 250 பேர் கலந்து கொண்டனர்.

சென்னையில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு விழா

chennai casteism func 400சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் காதலர் தினத்தை யொட்டி ஜாதிமறுப்பு திருமணம் செய்த காதல் இணையர்களுக்கு பாராட்டு விழா 14.02.2017 அன்று மாலை 6 மணியளவில் கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்டச்செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். செந்தில் முன்னிலை வகித்தார். 10 ஜாதி மறுப்பு இணையர்களைப் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அரங்க. குணசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்ட தலைவர் வேழவேந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

ரவிபாரதி, தாஜ் நிஷா ஆகியோர் கவிதை வாசித்தனர். அருள்தாஸ் பாடல்களை பாடினார். இந்நிகழ்வில் 70க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு அளிக்கப்பட்டது. பாராட்டு விழா 9 மணியளவில் நிறை வடைந்தது.

பாராட்டுப் பெற்ற ஜாதிமறுப்பு திருமணம் செய்த காதல் இணையர் ஜெயமாலா-மனோகர்; கௌதமி-சதிஷ்; தரணி-குமரேசன்; ஜெமீன்-ரவி; கோமதி-திவாகர்; கோகிலா-கண்ணதாசன்; புவனேஷ்வரி-பார்த்திபன்; ரேஷ்மா-சார்லஸ்; கார்த்திகா-செல்வன்; சங்கரி-பாலு; லாவண்யா-சுரேஷ்.