சமரசம் இல்லா மல் ஜாதி ஒடுக்கு முறை கவுரவக் கொலைகளை சாடு கிறது. ‘மாவீரன் கிட்டு’ திரைப் படம், ‘அழகர்சாமியின் குதிரை’, ‘ஜீவா’ போன்ற சிறப்பான படங்களை இயக்கிய சுசீந்திரன், இத்திரைப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். “தீண்டப்படாத வர்களின்” பிணங்களைக்கூட ஜாதி வெறியர்கள் தங்கள் வீதி களில் எடுத்துச் செல்ல அனுமதிக்காத போக்கு இப்போ தும் தொடருகிறது. அதே காட்சியை முன் வைத்து திரைப் படம் தொடங்குகிறது. சொந்த மகளையே தலித் இளைஞரை திருமணம் செய்த ‘குற்றத்துக் காக’ ஜாதி சமூகத்தின் ஒதுக்க லுக்கு உள்ளாகி விடுவோம் என அஞ்சி, காதல் மணம் முடித்து வந்த மகளையே கொலை செய் கிறார் ஆதிக்க ஜாதி தந்தை.
ஆதிக்க ஜாதியில் பிறந்தாலும், ஜாதி எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக நின்று சொந்த மகளை ‘தலித்’ இளைஞருக்கு திருமணம் செய்ய முன் வரு கிறார் ஒரு ஜாதி எதிர்ப்பாளர். அதன் காரணமாக ஜாதி ஆதிக்க வாதிகள் அவரை கொலை செய்து பழியை தலித் இளைஞர்கள் மீது போடு கிறார்கள். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் மாநிலத் திலேயே முதல் மதிப்பெண் பெற்று மாவட்ட ஆட்சித் தலைவராகும் இலட்சியத் தோடு கல்லூரியில் படிக்கும் ‘தலித்’ இளைஞர் கிட்டுவும் இந்த வழக்கில் சேர்க்கப்படுகிறார். இதற்கு காவல்துறை துணை ஆய்வாளரும் உடந்தை. காவல் நிலையத்தில் கிட்டு மூர்க்கத் தனமாக தாக்கப்பட்ட நிலையில் அவரைப் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இறந்து விட்டாரா என்ற சந்தேகத்தில் மக்கள் அற வழியில் காவல் நிலையத்தை முற்றுகையிடுகின்ற னர். அதற்கு தலைமையேற்று வழி நடத்துகிறார் சின்னராசு.
கிட்டுவின் கதி என்ன?
மக்களின் உரிமைப் போராட்டம் வெற்றி பெற்றதா என்பது மீதிக் கதை.
சின்னராசுவாக நடிக்கும் நடிகர் பார்த்திபன், படம் முழுதும் கருப்புச் சட்டையுடன் வருகிறார். படம் முழுதும் கச்சிதமான நடிப்பால் மனத்தில் இடம் பிடிக்கிறார். ஜாதி வெறிக்கு சாட்டையடி தரும் வசனங்கள், இமான் பின்னணி இசை படத் தின் காட்சிகளுக்கு உயிரூட்டு கிறது.
சர்வதேச கடல் பரப்பில் விடுதலைப் புலி தளபதி கிட்டு, கப்பலில் அய்ரோப்பிய நாட்டி லிருந்து ஈழத்துக்கு சென்றபோது இந்திய இராணுவம் அத்துமீறி சர்வதேச கடல் பரப்பில் கிட்டு வின் கப்பலை சுற்றி வளைக்க, கிட்டு கப்பலுக்கு தீ வைத்துக் கொண்டு தானும் தீயில் வீர மரணத்தை தழுவினார். அதே போல் தலித் இளைஞன் கிட்டு, ஜாதி எதிர்ப்புப் போராட்டத்தை ஏற்றுக் கொண்ட தலைவர் முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக தன்னைத் தானே அழித்துக் கொள்கிறார். எனவே ‘மாவீரன் கிட்டு’ என்று படத்துக்கு இயக்குனர் பெயர் சூட்டியுள்ளார்.
ஜாதி ஆதிக்கவாதிகளின் கோபத்துக்கு உள்ளாகலாம் என்பது குறித்தெல்லாம் கவலைப்படாமல், சமுதாயத் துக்குத் தேவையான கருத்தை துணிவுடன் கூற முன் வந்த இயக்குநர் சுசீந்திரனைப் பாராட்ட வேண்டும்.
ஜாதி எதிர்ப்பு கருத்தியலுக்கு வலிமை சேர்க்கும் திரைப்படம். ஓராயிரம் பொதுக் கூட்ட மேடைகளில் பேசும் கருத்து களைவிட இத்தகைய திரைப் படங்கள் மக்கள் மன்றத்தில் வேகமான மாற்றங்களை உருவாக்கி விடும்.
- கண்டு வந்தவன்