அத்திவரதர் சிலை தரிசனத்துக்கு மக்கள் திரண்டார்கள். ஆனால்  வேதங்களுக்கு விளக்கவுரை வழங்கிய உபநிஷத்துகள் சிலை வணக்கம் மூடர்களுக்கே உரியது என்று கூறுகிறது.

“அக்நி ரதே லோத் துவிஜாதீ நரம் முனி நாம் ஹிருதி தைவதம்: பர்மாஸ்வ பாபுத்தாரம் சர்வத்ர சமதர்கின” - உத்தரகீதை - சுலோகம்.

இதன் பொருள் : துவிஜர்களுக்குத் தெய்வம் நெருப்பில்; முனிவர்களுக்குத் தெய்வம் இருதயத்தில்; புத்தி இல்லாத மூடர்களுக்குத்  தெய்வம் விக்கிரகத்தில்; சமதிர்ஷ்ட்டி உடையவர்களுக்கு தெய்வம் எங்கும்.

“தீர்த்தே தாதையோ எக்ஞே - கார்ஷ்ட்டே பாஷாண கேபதா சிவம்பசிய தீ மூடாத்மா சிலோதெஹெபர் திஷ்டி தர.” - ஸகந்தம் - ஞானயோக காண்டம்

இதன் பொருள் : தீர்த்ததிலும், தானத்திலும், தபசிலும், யக்ஞத்திலும், கட்டையிலும், கல்வியிலும் சிவன் இருப்பதாக மூடர்கள் நினைக்கிறார்கள். சிவன் தனக்குள்ளாகவே இருக்கிறது.

“சிவம் ஆத்ம நிபஸ்யந்தி ப்ரதி மாஸு நயோகிநோ, அக்ஞானம் பாவ நார்த்தாய மரதிம பரிகல்பிதா.”

இதன் பொருள் : யோகிகள் சிவனைத் தமக்குள்ளே காண்பார்களேயன்றி பிரதிமைகளிற் காணார் அக்ஞானிகளுக்குப் பாவனார்த்தம பிரதிமைகள் செய்யப்பட்டிருக்கிறது.

“அபஸுதே லாம நீஷினாம் காஷ்ட லோஷ்ட்டேஷீ மூடாநாம் யுக் தஸ்யாத்ம நிதேலதா.” - சாதாத பலசன சுலோகம்

இதன் பொருள் : சாதாரண மனிதருக்குத் தெய்வம் நீரில், சற்றுத் தெரிந்தவர்களுக்குத் தெய்வம் ஆகாசத்தில், முட்டாள்களுக்குத் தெய்வம் கல்லிலும் கட்டையிலும் யோகிகளுக்குத் தெய்வம் அவர்களுக்குள்ளே.

 “எவம குணா நுஸாரோண ரூபாணி விவிதாநி சகல்பிதாநி ஹிதார்த்தாய பக்தாநி அல்பமே தஸாம்.” - மஹா நிர்வாணத்தில்.

இதன் பொருள் : இவ்வித ஸ்பாவங்களை அனுசரித்துப் பலவித உருவங்கள் அற்பபுத்தி யுடையவர்கள் நிமித்தம் கற்பிக்கப்பட்டன.

Pin It