உலகில் எல்லா வேலைக்கும் ஒரு தகுதி தேவைப்படுகின்றது. பொறியாளராக ஆகவேண்டும் என்றால் பொறியியல் படித்திருக்க வேண்டும்; மருத்துவராக ஆகவேண்டும் என்றால் மருத்துவம் படித்திருக்க வேண்டும். இப்படி ஓவ்வொன்றைப் பற்றியும் படித்தவர்கள் மட்டுமே அது சார்ந்த துறைகளில் மேதமை நிறைந்தவர்களாக வருவதற்கு வாய்ப்பு அதிகம். அதே போலத்தான் சாமியார் வேலைக்கும். நம்மில் சில பேர் சாமியார் வேலை பார்ப்பதற்கு எந்தத் தகுதியும் தேவையில்லை, நாலு மயிரை தலையிலும், முகத்திலும் நீளமாக வளர்த்துக்கொண்டு ஒரு காவி வேட்டியும் ஒரு திருவோடும் இருந்தால் போதும், சாமியாராகி விடலாம் என்று தப்பாக நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இப்படி எல்லாம் இருந்தால் கோயில் வாசலில் பிச்சை எடுக்கும் அன்னக்காவடி பிச்சைக்காரனாகத்தான் ஆகமுடியுமே ஒழிய, ஒரு நித்தியானந்தாகவோ, ஆசாரம்பாபுவாகவோ, சங்கராச்சாரியாராகவோ, இல்லை இப்போது ஹரியானா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களை நெருப்புக்காடாக மாற்றிக் கொண்டிருக்கும் குர்மீத் ராம் ரஹீம் சிங் போன்றோ நிச்சயம் ஆக முடியாது.

Gurmeet Ram Rahim Singh

அதற்கு மேற்குறிப்பட்ட தகுதிகள் மட்டும் போதுமானவை அல்ல. அதற்குக் கொலை, கொள்ளை, மோசடி, யாருக்கும் புரியாமல் பேசும் சாதூர்யம், அப்புறம் இவற்றிக்கு அப்பால் எல்லாவற்றிக்கும் மேல் பெண்களை வலுக்கட்டாயமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்வதில் பல ஆண்டுகள் எடுத்த கடுமையான பயிற்சி, அப்புறம் தம்முடைய ஆசிரமத்தை அரசியல்வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் அந்தப்புரமாக மாற்றத் தெரிந்த கலை இவை எல்லாம் ஒருங்கே எவன் கற்றிருக்கின்றானோ, அவன் தான் பாரத தேசத்தில் இந்து மதத்தின் மகோத்மியங்களை பரப்பப் பிறந்த அவதாரம். அப்படிப்பட்ட அவதாரங்கள் முன்னால் ஒரு உண்மையான இந்து நவதுவாரங்களையும் மூடிக்கொண்டு மண்டியிட வேண்டியது கடமை.

அப்படிப்பட்ட ஒரு நல்ல சாமியாரைக் கடைபிடிக்கும் மானமரியாதை உள்ள அறிவுபெற்ற பக்தர்கள் கூட்டம் என்ன செய்யுமோ, அதைத்தான் இப்போது ஹரியானா, பஞ்சாப், டெல்லி போன்ற இடங்களில் வாழும் பக்தர்கள் கூட்டம் செய்து கொண்டிருக்கின்றார்கள். 32 பேரை பலியாக்கி 250 பேரை காயப்படுத்தி, கோடிக்கணக்கான சொத்துக்களை நாசம் செய்து, தங்களின் ஆன்மீகக் கடமையை ஆற்றியிருக்கின்றார்கள். மதமும், அது சார்ந்த நம்பிக்கையும் ஒருவனை எங்கு கொண்டு நிறுத்தும் என்பதற்கு இதைவிட வேறு சாட்சியங்கள் தேவையில்லை. இரண்டு மாநிலமே ஸ்தம்பித்துக் கிடக்கின்றது, பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது, இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன, பாதுகாப்புக்கு இராணுவம் குவிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு ஜனநாயக நாட்டில் கேவலம் ஒரு பரதேசிப் பயலுக்காக நாடே அஞ்சுகின்றது என்றால் அந்த நாட்டை ஆளும் பிற்போக்குவாதிகள் என்ன நிலைமையில் நாட்டை வைத்திருப்பார்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

35க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி, அதுவும் என்ன சொல்லி மிரட்டியிருக்கின்றான் என்றால் “பகவான் கிருஷ்ணருக்கு 360 கோபியர்கள் இருந்தார்கள். அவர்களோடு கிருஷ்ணன் தினமும் காதல் கொண்டார். அவரை கடவுள் என்று மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா?" என்று சொல்லி அழைத்திருக்கின்றான். ஒரு பொறுக்கி தன்னுடைய பொறுக்கித்தனத்தை நியாயப்படுத்த இன்னொரு பெரும் பொறுக்கியை உதாரணமாகக் காட்டியிருக்கின்றான். அப்போதும் வழிக்கு வராத பெண்களை துப்பாக்கி காட்டி மிரட்டி கிருஷ்ணலீலையைக் கற்றுக் கொடுத்திருக்கின்றான். ஆனால் அப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட பொறுக்கிப்பயலை கோடிக்கணக்கான மக்கள் கடவுளுக்கு நிகராக மதிக்கின்றார்கள் என்றால், அவனுக்காக 32 பேரை கொலை செய்யவும் துணிவார்கள் என்றால், அந்த நாட்டை ஆளும் பிரதமர் எப்பேர்பட்ட மதவெறியனாகவும், பிற்போக்குச் சாக்கடையில் படுத்துருளும் பாதகனாகவும் இருக்க முடியும்.

இது போன்ற பொறுக்கி சாமியார்கள் எல்லாம் எங்கிருந்து முளைத்து கிளைத்து வேர்பரப்பி வளர்வதற்கான உயிர்சத்தை பெறுகின்றார்கள் என்றால் அது சங்பரிவார கூட்டத்தில் இருந்தே பெறுகின்றார்கள். சாய்பாபாவையும், பிரேமானந்தாவையும், சங்கராச்சாரியையும், நித்தியானந்தாவையும், ஆசாரம்பாபுவையும் பார்த்து அவர்களின் அடித்தொழுது பின்தொடரும் சாமியார் கூட்டம் அப்படித்தான் உருவாகும், அடுத்த தலைமுறை பொறுக்கி சாமியார்களையும் உருவாக்கும். இவன் 32 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தான் என்றால், அடுத்து மாட்டப்போகும் சாமியார் குறைந்தது 50 பெண்களையாவது பாலியல் பலாத்காரம் செய்தவனாக இருப்பான். இது எல்லாம் பொறுக்கி சாமியார்களிடம் இருக்கும் ஒரு தொழிற்போட்டி. யார் அதிகமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றானோ அவன் தான் இந்து மத தர்மப்படியும், சங்பரிவாரத்தின் தர்மப்படியும் மோடியைக் கட்டிப்பிடித்துப் பாசமழை பொழியத் தகுதியானவர்கள்.

சாமியார்களில் நல்ல சாமியார், கெட்ட சாமியார் என்ற பாகுபாடெல்லாம் எப்போதுமே இருந்ததில்லை, இருக்கவும் முடியாது. மாட்டிக்கொண்டவன், மாட்டாதவன் என்ற வித்தியாசம் மட்டுமே உள்ளது. இன்று இருக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகள் அன்றே இருந்திருந்தால் சங்கரனில் இருந்து ராமானுஜரில் இருந்து அனைத்து முண்டகலப்பை சாமியார்களின் வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளம் ஏறியிருக்கும். தப்பிவிட்டான்கள்!. அவன் எல்லாம் அன்றே மாட்டி செருப்படி வாங்கியிருந்தால் இன்று இவனைப் போன்ற மைனர்குஞ்சுகள் எல்லாம் வெளிப்படையாக கோடிக்கணக்கான மக்களை முட்டாள்கள் ஆக்கி நாட்டை கொளுத்தியிருக்க மாட்டார்கள்.

மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றி முட்டாள்கள் ஆக்குவது என்பதை இன்றைய நவீன சாமியார் பொறுக்கிகள் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றார்கள். நுனி நாக்கு ஆங்கிலமும், நவீன ரக மேற்கத்திய பாணி உடைகளும், குத்து நடனங்களும், பாகுபாடு அற்ற பாலியல் உறவுக்கான உபதேசங்களும் கலந்து அதை ஒரு நவீன ரக அமெரிக்க பாணி சில்லரை கலாச்சாரத்தோடு கலந்து தருகின்றார்கள். அதனால்தான் ஜக்கி வாசுதேவன் போன்ற மாமா பயல்கள் எல்லாம் இன்று பெரும்பான்மை மேட்டுக்குடி கழிசடைகளால் விரும்பப்படுகின்றார்கள். இந்தக் குர்மீத் ராம் ரஹீம் சிங்கும் அப்படிப்பட்ட ஊரை ஏமாற்றும் டேக்குமாறி சாமியார்தான். இவனே இவனைப் பற்றி ஐந்து படங்களை இவனை வைத்தே எடுத்திருக்கின்றான் என்றான் பார்த்துக் கொள்ளுங்கள். நிஜவாழ்க்கையில் இவனைப் பற்றி ஊருக்குள் பரப்பப்பட்டிருக்கும் அற்புதக் கதைகளை எல்லாம் கிராபிக்ஸ் தொழிற்நுட்பத்தோடு உண்மையாக்கி மக்களை நம்ப வைத்திருக்கின்றான். அம்மன் படம் பார்த்துவிட்டு திரையரங்கத்திலேயே குத்தாட்டம் போடும் நம்ம ஊர் மக்களைப் போன்றவர்கள் தான் வட மாநிலங்களில் இருக்கும் மக்களும். ஆனால் என்ன ஒரு வித்தியாசம் என்றால் நம்ம ஊர் மக்களாவது அருள்வந்தால் ஆடையோடு ஆடுவார்கள் என்றால், வடமாநில பக்தர்கள் அம்மணமாகவே ஆடுவார்கள், அந்த அளவிற்கு பிற்போக்குக் கும்பல்.

அந்தப் பிற்போக்குதான் இத்தனை உயிர்களை பலிவாங்கியிருக்கின்றது, இன்னும் பலிவாங்கும். இப்படி ஊருக்கு உபதேசம் செய்யும் இந்தக் கழிசடைகள் அதைத் தமது சொந்த வாழ்க்கையில் எப்போதுமே கடைபிடிப்பதில்லை. தன் பெண்ணிற்குத் திருமணம் செய்துவைத்துவிட்டு, ஊரார்வீட்டு பெண்களுக்கு துறவரம் ஏற்க தீட்சை வழங்கும் ஜக்கி வாசுதேவன் ஆகட்டும், இல்லை இப்போது குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டிருக்கும் குர்மீத் ராம் ராஹீம் சிங் ஆகட்டும், எல்லாமே அப்படித்தான். இவனுக்குத் திருமணம் ஆகி ‘ஒரு’ பொண்டாட்டியும் மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளார்களாம். ஆனால் அன்னார் அவர்கள் அவரது ஆசிரமத்திற்கு வந்த 400க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்துள்ளார். காரணம் அவர்கள் பெண்பக்தர்களிடம் தவறாக நடந்துகொள்ளக் கூடாது என்பதற்காகவாம். ஒருவேலை இந்த வேலையை பார்ப்பதற்குத்தான் நாம் இருக்கின்றோம், மற்றவர்கள் யாரும் தனக்குப் போட்டியாக வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் இருக்கலாம். என்ன இருந்தாலும் மைனர்குஞ்சுகளின் மூளையோ மூளைதான்.

இரண்டு மாநிலத்தையே ஸ்தம்பிக்க வைத்து, அஞ்சா நெஞ்சன் இந்து மதத்தை காக்க வந்த புஷ்யமித்ர சுங்கன் மோடியையே கண்டனம் செய்ய வைத்திருக்கின்றான் என்றால் நிலைமை மிக மோசமாக இருக்கின்றது என்றுதான் அர்த்தம். மோடி demonetisation கொண்டு வந்ததற்குப் பதிலாக சாமியார்களுக்கு எல்லாம் ஆண்மைநீக்கம் செய்திருந்தால் மக்களுக்குப் பாதுகாப்பாகவாவது இருந்திருக்கும். குறிப்பாக குழந்தை முதல் முதியவர்கள் வரை உள்ள ஆண்களுக்கும் குழந்தைகள் முதல் முதிர்ந்த கிழவிகள் வரை உள்ள பெண்களுக்கும். அப்படி என்றால் இந்தச் சாமியார் பயல்களால் யாருக்குமே பாதுகாப்பில்லையா என்று நீங்கள் கேட்கலாம். புட்டபர்த்தி சாய்பாபா கதையில் இருந்து சங்கராச்சாரி கதைவரை முன்கதைச் சுருக்கம் தெரிந்தவர்களுக்கு இது எவ்வளவு உண்மை என்று தெரியும். அதனால் வேறு வழியே இல்லை. ஒன்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் மைனர்’குஞ்சை’ சுட வேண்டும், இல்லை ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும். இது மட்டும்தான் பொறுக்கி சாமியார்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற ஒரு தற்காலிகத் தீர்வாக இருக்க முடியும். நிரந்தரத் தீர்வு என்னவென்றால் மதத்தின் பேரைச் சொல்லி கூட்டம் சேர்க்கும் அயோக்கியர்களை மக்கள் தங்களிடம் இருந்து தனிமைப்படுத்துவதும், அவர்களை முளையிலேயே கிள்ளி எறிவதும் தாம். ஆனால் அதற்கு நம் நாட்டு மக்கள் அப்படியான ஒரு உயர்ந்த அறிவு நிலைக்கு வர வேண்டும். இங்கிருக்கும் அனைத்து முற்போக்குச் சக்திகளும் அவர்களை அந்த நிலையை நோக்கி உயர்த்த தொடர்ந்து பாடுபடவேண்டும். பாடுபட்டால் நிச்சயம் ஒரு நாள் மைனர்குஞ்சுகள் ஒழிக்கப்படுவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

- செ.கார்கி