பெண் பத்திரிகையாளர்கள் குறித்து, ‘அவர்கள் ஒழுக்கமற்றவர்கள்’ என்று சுடுசொற்களால் முகநூலில் எழுதிய காமெடி நடிகர் எஸ்.வி. சேகர் தலை மறைவாகிவிட்டாராம்.

“இது நான் போடவில்லை; வேறு ஒருவர் அனுப்பிய பதிவை படிக்காமல் அப்படியே அனுப்பி விட்டேன்” என்கிறார் அந்த காமெடிப் பேர்வழி.

வேதங்களையே கரைத்துக் குடித்து, தன்னை ‘பிராமணனாக்கி’க் கொண்டு, அதன் குறியீடான ‘பூணூலை’ தொலைக்காட்சியில் தோன்றும்போதுகூட வெளியே தெரியும்படி காட்டிக் கொள்ளும் இந்தக் காமெடிப் பேர் வழி படிக்காமல் ஒரு செய்தியைப் பதிவிட்டு விட்டதாம்; நாம் நம்ப வேண்டுமாம்!

‘அட சேகரா? நீ ஒரு சந்தர்ப்பவாதி; செத்துப் போன சங்கராச்சாரிக்காக உளவு பார்த்தவன்; நீ தாவாத கட்சியில்லை; ஜெயலலிதா கட்சிக்குப் போனாய்; சட்டமன்ற உறுப்பினரானாய்; பிறகு அவரால் விரட்டி அடிக்கப்பட்டு, பா.ஜ.க.க.வுக்குத் தாவினாய்; அங்கிருந்து தி.மு.க.வுக்கு தாவினாய்; பிறகு ‘பிராமணருக்கு’ தனிக்கட்சி தொடங்கினாய்; எங்கே இருந்தாலும் ஒரு வெறி பிடித்த ‘பிராமணர்’ என்ற அடையாளத்தை மட்டும் மாற்றாமல் இருந்தாய்; இப்போது பா.ஜ.க.வின் அதிகாரமிருக்கிறது என்ற திமிரில் தடித்த வார்த்தைகளை உளறிக் கொண்டிருக்கிறாய்; உன்னுடைய நாக்கை மட்டுமல்ல பூணூலையும் இழுத்து வைத்து அறுக்கும் நாள் விரைவில் வரும்” என்று ஒரு தன்மானத் தமிழன் இந்த காமெடிக்கு முகநூல் பதிவிட்டிருந்தால் அதையும் படிக்காமல் இந்தப் பூணூல் காமெடி மற்றவர்களுக்கு ‘ஃபார்வர்டு’ செய்யுமா?

வெட்கம், மானம், சூடு சொரணையற்ற இந்த ‘பிராமண ஜந்துக்கள்’ இப்படித்தான் அந்தர்பல்டி அடிக்கும். ‘நான் போடவில்லை அட்மின் தான் போட்டார்’ என்று கூறும். பிறகு கோழைத்தனமாக தலைமறைவாகிப் பதுங்கும் இந்த ஆள் வீட்டுக் கதவில் சில மானமுள்ள பத்திரிகையாளர்கள் கற்களை வீசியிருக்கிறார்கள். சேதமடைந்தது இரும்புக் கதவுதான்; ஆனால் இந்த காமெடியின் ‘சாக்கடை’ப் பதிவால் பத்திரிகையாளர்கள் உள்ளம் எவ்வளவு புண்பட்டிருக்கும்? வடிக்க வார்த்தைகள் இல்லை.

கல்லடிக்காக பத்திரிகையாளர்கள்மீது போட்ட வழக்குகளைத் திரும்ப பெற வேண்டும்; பாலுறவு வன்புணர்ச்சி வன்முறையை விடக் கொடுமையான வார்த்தைகளை பெண் பத்திரிகையாளர்கள் மீது விசிய ‘சொல்லுறவு வன்புணர்ச்சியாளனை’ காவல்துறைப் பிடித்து இழுத்து வந்து கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்; அந்த ‘காமெடி’ப் பேர்வழியை பத்திரிகையாளர்கள் காறி உமிழ வேண்டும்; இதுதான் காமெடிக்குத் தரக்கூடிய சரியான தண்டனை!

Pin It