• வெங்காயத்தை தி.மு.க.வினரும் பா.ஜ.க.வினரும் பதுக்கியதால் தான் விலை உயர்ந்துள்ளது. - ‘தினமலர்’ செய்தி
அப்படியா! அப்ப பெட்ரோல் - டீசலையும் இவுங்கதான் எங்கோ பதுக்கியிருப்பாங்க போல! உடனே கண்டுபிடிக்கனும்.
• இராமன் கோயில் கட்ட இதுவரை 1511 கோடி நிதி வசூல். - அறக்கட்டளைத் தகவல்
நிர்மலா சீத்தாராமனிடம் கேட்டிருக்கக் கூடாதா? உணவு மான்யங்களை நிறுத்திவிட்டு பட்ஜெட்டிலேயே நிதி ஒதுக்கியிருப்பாரே!
• இந்திய நீதிமன்றங்களில் நீதி கிடைப்பது இல்லை.. - ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சன் கோகாய்
நீதி கிடைக்காவிட்டாலும் ஓய்வு பெற்ற பிறகு நீதிபதிகளுக்கு எம்.பி. பதவி கிடைக்கும்.
• சென்னையில் நடந்த திருப்பதி கோயில் விழாவில் காஞ்சி சங்கரச்சாரி, சேகர் ரெட்டி சிறப்பு விருந்தினர்கள். - செய்தி
முன்னாள் கைதிகள் தான்; ஆனாலும் சிறைகளுக்குள்ளும் பக்தியை விட்டு விடாத ‘ஒழுக்கசீலர்கள்’.
• தனித்துப் போட்டியிட்டால் 234 தொகுதிகளும் தே.மு.தி.க. தான் வெற்றி பெறும். - பிரேமலதா
அய்யய்யோ... அப்படி எல்லாம் செஞ்சிடாதீங்க. பாவம் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கும் ஒன்றிரண்டு வெற்றி பெற கருணை காட்டுங்கள்!
• ‘கோ பேக் மோடி’ என்று எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள். - பா.ஜ.க. முருகன்
ஆமாம்! ஆமாம்! இதை டிவிட்டரில் பார்ப்பவர்களும் தேச விரோதிகள் என்று அறிவிச்சிடுங்க. அப்ப தான் தேச விரோதிகள் அடங்குவாங்க!
- விடுதலை இராசேந்திரன்