ஹரித்துவாரில் இந்து வெறியர்கள் ஒன்று திரண்டு முஸ்லீம்களை இனப்படுகொலை செய் வேண்டும் என்று பேசிய வீடியோ பதிவுகள் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ன. ‘பஜ்ரங்தள்’ என்ற இந்து பயங்கரவாதிகள் வடக்கு உத்தரகாண்ட் பகுதியில் கடந்த வாரம் ஒன்று கூடி ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய உறுதி எடுங்கள் என்று பேசியுள்ளனர். இதற்காக சிறை செல்லவும் பயப்பட வேண்டாம் என்று ஒரு தலைவர் பேசியுள்ளார். நம்மில் 100 பேர் துப்பாக்கி ஏந்தினால் 2 மில்லியன் இஸ்லாமியர்களை அழித்து விடலாம் என்றும் அப்போதுதான் சனாதன தர்மத்தைக் காப்பதில் நாம் வெற்றி பெறுவோம் என்றும் ஒரு பெண் பயங்கரவாதி பேசினார். பா.ஜ.க.வைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அதில் பங்கேற்றார். காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு வணக்கம் செலுத்துங்கள் என்றும் இந்துப் பெண் பயங்கரவாதி கூச்சலிட்டுள்ளார்.

பிரபோதனார்ந்தா கிரி என்பவர், “கொலை செய்யத் தயாராகுங்கள்; வீரச் சாவுக்குத் தயாராகுங்கள்” என்று பேசியிருக்கிறார். பா.ஜ.க. தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களோடு இவர் இணைந்து பல புகைப்படங்களில் காட்சி தருபவர்.

மற்றொருவர், “மோடிக்கு முன் பிரதமராக இருந்த சீக்கியரான மன்மோகன்சிங்கை தீர்த்துக் கட்ட நான் விரும்பினேன்” என்று பேசியுள்ளார். உ.பி. மாநில காவல்துறை தலைவர் அசோக் குமார் நடந்த சம்பவத்தை உறுதி செய்ததோடு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஏற்கனவே முஸ்லீமாக இருந்து பிறகு ‘இந்து’வாக மாறிய ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி. ஷியாவக்ப் வாரியத் தலைவராக இருந்த வாசிம் ரவி என்ற இஸ்லாமியர், பிறகு இந்து மதத்துக்கு மாறினார். வெறிப் பேச்சு பேசியவர்களில் அவரும் ஒருவர். இந்து மகாசபையைச் சார்ந்த அன்னபூர்ணா என்பவர் மீது வழக்கு பதிவாகியுள்ளது. ஆனால், பயங்கரவாத தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை. யாதி நரசிங்கநாத் என்ற இந்து பயங்கரவாதி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It