புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6இல் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சிலைகளுக்கு மாலை அணிவித்து ஜாதி எதிர்ப்பு சூளுரையை கழகத்தினர் எடுத்தனர்.
சென்னை: திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, காலை 9 மணியளவில், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் மாலை அணி விக்கப்பட்டது. தொடர்ந்து, விசாலாட்சித் தோட்டத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜி மாலை அணிவித்தார்.
அதைத் தொடர்ந்து, இராயப்பேட்டை வி.எம். தெருவில், அம்பேத்கர் உருவப் படத்திற்கு தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் மாலை அணிவித்தார். அம்பேத்கர் மணிமண்டபம், மந்தைவெளி, இராயப் பேட்டை ஆகிய பகுதிகளுக்கு தோழர்கள் கொள்கை முழக்கங்களை எழுப்பி ஊர்வலமாக வந்தனர்.
ஊர்வலத்தைத் தொடர்ந்து, அம்பேத்கர் நினைவு நாள் கருத்தரங்கம், சென்னை, தலைமை அலுவலகத்தில் காலை 11:30 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்விற்கு தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் தலைமை வகித்தார். “அம்பேத்கர் பார்வையில் இன்றைய அரசியல்” என்ற தலைப்பில் கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் , பாசிச பாஜக, இந்துராஷ்டிரத்தை நோக்கி இந்தியாவை நகர்த்தும் முயற்சிகளை விளக்கி உரையாற்றினார்.
திருப்பூர்: திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டம் சார்பாக நினைவேந்தல் நிகழ்வு, ஜாதி ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்வாக 06.12.2020 அன்று காலை 9.00 மணியளவில் மாநகராட்சி எதிரில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் துரைசாமி புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
புரட்சியாளரின் கருத்துக்கள் முழக்கங்களாக எழுப்பப்பட்டன. தேன்மொழி ஜாதி ஒழிப்பு உறுதி மொழி கூற தொடர்ந்து தோழர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவைர் சிவகாமி, மாவட்டத் தலைவர் முகில் ராசு, மாவட்ட செயலாளர் நீதிராசன், இணையதள பொறுப்பாளர் விஜயகுமார் முகநூல் பொறுப்பாளர் பரிமளராஜன், இராமசாமி தெற்குப் பகுதி பொறுப்பாளர், சங்கீதா மாவட்ட அமைப்பாளர், மாதவன் மாநகர செயலாளர், முத்து மாநகர அமைப்பாளர், சண்முகம் ஒன்றிய செயலாளர், பல்லடம், சரசு, அய்யப்பன், விஜய் ,வீரலட்சுமி, மாரிமுத்து, ஸ்ரீஜா, கார்த்திகேயன், பெரியார் பிஞ்சு லவ்லி, பிரசாந்த், நயனா, நஜ்முன்னிசா, கதிர் முகிலன், பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை : திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி தலைமையில் வடகோவை உணவு கிடங்கில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு காலை 9 மணியளவில் மாலை அணி வித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப் பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் இராமச் சந்திரன், தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட மாநகர பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் என 25க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதற்கு முன்பாக அம்பேத்கரின் கொள்கைகளை விளக்கும் வகையில் நினைவுநாள் சுவரொட்டிகள் மாவட்டம் முழுவதும் 300 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
மதுரை : மதுரை மாநகர் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாளவிகா தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலையணி விக்கப்பட்டு கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
புறநகர் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மேலூர் பேருந்து நிலையத்தில் சத்தியமூர்த்தி தலைமையில் அம்பேத்கர் பதாகை அமைக்கப்பட்டு மாலையணிவிக்கப்பட்டது. மாநகர் தலைவர் காமாட்சி பாண்டி, சசிகலா, அழகர், மருது பாண்டி, குமார், மகேசுவரன், இளஞ்செழியன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக சங்கராபுரத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு காலை
10 மணியளவில் மாலை அணி வித்து மரி யாதை செலுத் தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அன்பு ரவி தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் க. ராமர் முழக்கம் எழுப்பினார், நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர்
சி. சாமிதுரை, மாவட்ட துணை செய லாளர் மு.நாக ராஜ், நகர ஒன்றிய அறிவியல் மன்ற அமைப்பாளர் வீ. முருகன், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் பாரதி, ரிஷிவந்தியம் ஒன்றிய அமைப்பாளர் இரா. கார்மேகம்,
கி. ஆனந்தன், மா. தலித்குமார், பாலமுருகன், பெரியார் வெங்கட், சுபாஷ், வல்லரசு, கௌதம், மதிராஜ் உள்ளிட்ட 26 தோழர்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகில் காலை 10 மணியளவில் அம்பேத்கர் உருவ படத்திற்கு மாவட்ட அமைப்பாளர் அ.முத்துப் பாண்டி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் பிரகாஷ் உட்பட நகர கழக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
மேலும், இராசிபுரம், திருச்செங்கோடு, குமார பாளையம் ஆகிய பகுதிகளில் நகர கழகத் தோழர்கள் சார்பில் அம்பேத்கர் சிலை மற்றும் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.
சேலம் : சேலம் கிழக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், சேலம் மாநகரத்தில் அமைந் துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு காலை 10 மணியளவில் மாலை நங்கவள்ளி விஜயலட்சுமி மாலை அணிவித்தார். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், நங்கவள்ளி அன்பு, தேவராஜ், மணியனூர் சரவணன், செல்வ மணி, இளம்பிள்ளை கிருஷ்ணன், சௌந்தர் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேட்டூர் : மேட்டூர் அச்சங்காடு பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு காலை 10 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
- விடுதலை இராசேந்திரன்