• மங்களகரமான ‘நல்ல நாளில்’ பத்திரப் பதிவு செய்தால் கூடுதல் கட்டணம். - பத்திரப் பதிவுத் துறை அறிவிப்பு

அரசுக்கு இது நல்ல நாள்; கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் மக்களுக்கு ‘கெட்ட நாள்’, ராகு காலம் எமகண்டத்தில் பத்திரப் பதிவு செய்தால் கட்டணம் இல்லை என்று அறிவித்து விட்டால், பிறகு அவைகளே மக்களுக்கு ‘நல்ல நாளாகி’ விடுமே!

• கொரானா ஆபத்து; ‘கும்பமேளா’வை பாதியில் நிறுத்த மோடி உத்தரவு. - செய்தி

‘பாவம்’ போக்கி, மோட்சம் போக முழுக்குப் போடுவதைத் தடுப்பது ‘மதத் துவேஷம்’ ஜி!

• கிரிஜா வைத்தியநாதனை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக தடை விதித்த உயர்நீதிமன்றம் மேல் முறையீட்டில் நியமிக்கலாம் என்று தீர்ப்பு. - செய்தி

தீர்ப்புகளைப் பெறுவதில் கிரிஜாவிடம் மாபெரும் ‘நிபுணத்துவம்’ இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறோம்.

• கொரானாவை நிறுத்த புரோகிதர்கள் வேத மந்திரம் ஓதி மிளகாய் யாகம். - செய்தி

புரோகிதர்கள் முகமூடி அணிந்து சானிடைசரில் கை கழுவி சமூக இடைவெளி விட்டு ‘மந்திரம்’ ஓதினாளா? ‘மந்திரத்துக்கு’ கொரானா வராம பாத்துக்கோங்க!

- விடுதலை இராசேந்திரன்

Pin It