17.09.2019 தந்தை பெரியார் 141ஆவது பிறந்தநாளில் மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரைப் பயணம் சமத்துவபுரத்தில் காலை 10 மணிக்கு  தொடங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சமத்துவபுரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சார பயணத்தை துவக்கி வைத்தார். பயணம் சமத்துவபுரம், மல்லிகுந்தம், மேச்சேரி, நங்கவள்ளி, குஞ்சாண்டியூர், RC பிளாண்ட், ராமன் நகர், புதுச் சாம்பள்ளி, மேட்டூர்  RS, தேசாய் நகர், சேலம் கேம்ப், தங்கமாபுரி பட்டிணம், காவேரி கிராஸ், மாதையன் குட்டை, புதுக் காலனி, பெரியார் நகர், தூக்கணாம்பட்டி, காவேரி நகர், சின்ன பார்க், பாரதிநகர், குமரன் நகர், பொன்னகர், ஆஸ்பத்திரி காலனி, ஒர்க் ஷாப் கார்னர், பெரியார் பேருந்து நிலையம், மேட்டூர் நகர படிப்பகம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் கொடி யேற்று விழாவாகவும் இரு சக்கர வாகன பேரணியாகவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவினை கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் சிறப்பாக நடத்தினார்கள். கொடியேற்று விழாவின்போது பயணத்தை விளக்கக் கூடிய துண்டறிக்கை பொது மக்கள் மத்தியிலே கொடுக்கப்பட்டது. நிறைவாக மேட்டூரில் அனைத்து தோழர்களுக்கும் மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது.

dravida nadagakalai 300இரண்டாவது நாளாக 18.9.2019 காலை 10 மணிக்கு பிரச்சார பயணம் கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிந்தப்பாடியில் தொடங்கியது. இந்த தொடக்க விழாவில் திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்த இளைஞரணி பொருப்பாளர்  மிதுன் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனுசாமி,  தடா பழனிசாமி கலந்து கொண்டு பிரச்சாரப் பயணத்தை விளக்கிப் பேசினார்கள்.

மதியம் 12 மணிக்கு கருங்கல்லூரில் பிரச்சாரம் நடைபெற்றது. மாலை 3 மணிக்கு தெலுங்கனூரிலும் மாலை 5 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையத்திலும் பிரச்சாரப் பயணம்  நிலையத்தில் நடைபெற்றது. பிரச்சாரப் பயணத்தில் முதல் நிகழ்வாக பறை முழக்கமும் அதனைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சியும் வீதி நாடகமும் சிறப்பாக நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சிகள் பொதுமக்கள் மத்தியிலே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

மூன்றாவது நாள் 19.09.2019 காலை 11 மணிக்கு தர்மபுரி மாவட்டம் தொப்பூர் பேருந்து நிலையத்தில் பயணம் தொடங்கியது. பயணத்தின் நோக்கத்தை விளக்கி துண்ட றிக்கைகள் பொது மக்கள் மத்தியிலும் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவாயிலில் தேர்வு முடிந்து வெளியே வரும் மாணவர்களிடமும் கொடுக்கப்பட்டது. மதியம் 12.30 மணிக்கு தீவட்டிப்பட்டியில் பிரச்சாரம் தொடங்கியது. மதிய உணவு மேச்சேரி சூரியகுமார் ஏற்பாடு செய்தார்கள்.

மாலை 3 மணிக்கு எங்களுடைய பிரச்சார பயணம் சின்னத்திருப்பதியில் தொடங்கியது. சின்ன திருப்பதி பகுதியில் பறை, இசை, வீதி நாடகம் வழியாக பொது மக்களிடத்தில் பிரச்சாரப் பயணத்தின் நோக்கத்தை விளக்கி தோழர்கள் பேசினார்கள். மாலை 4.30 மணிக்கு மேச்சேரி பேருந்து நிலையத்தின் எதிரே நிகழ்ச்சி தொடங்கியது. மேச்சேரி பேருந்து நிலையத்திலே கல்லூரி பள்ளி மாணவர்கள் பொது மக்கள் மத்தியில் பிரச்சார பயணத்தை பற்றி விளக்கக்கூடிய துண்டறிக்கை கள் வழங்கப்பட்டன. மேச்சேரி பேருந்து நிலையத்திலே நடைபெற்ற நிகழ்ச்சி தொடர்ந்து பொதுக் கூட்டம் போல சிறப்பாக நடைபெற்றது.

மூன்றாவது நாள் 20-9-2019 காலை 11 மணிக்கு சேலம் மாவட்டம் முத்து நாயக்கன்பட்டியில் தொடங்கியது. பயணத்தின் முதல் நிகழ்வாக பறை முழக்கமும் இசை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.    முத்து நாயக்கன்பட்டி பொது மக்கள் மத்தியிலே துண்டறிக்கை வழங்கப் பட்டது. மதியம் 12 மணிக்கு ஜல கண்டாபுரம் பேருந்து நிலையத்தில் பரப்புரை தொடங்கியது. ஜலகண்டா புரம் பேருந்து நிலையத்தில் பொது மக்கள் மத்தியிலே துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. அங்கு வீதி நாடகமும் இசை நிகழ்ச்சியும் பறை முழக்கமும் சிறப்பாக நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் திரளாக பொதுமக்கள் பிரச்சாரத்தை கூர்ந்து கவனித்தார்கள்.

nadagakalai 600பொதுமக்கள் நன்கொடை வழங்கினார்கள். மதியம் 2 மணி வரை பிரச்சாரம் நடைபெற்றது. மதிய உணவு எடப்பாடி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது. மதியம் 3 மணிக்கு எடப்பாடி பேருந்து நிலையத் தில் பயணம் தொடங்கியது. எடப்பாடி பேருந்து நிலையத்தில் திரளான பொதுமக்கள் திரண்டிருந்தனர். பறை முழக்கமும் வீதி நாடகமும் இசை நிகழ்ச்சியும் அங்கு நடத்தப்பட்டது. மாலை 5 மணிக்கு பிரச்சார பயணம் பள்ளிபாளையம் நிறைவு விழா மாநாட்டில்  கலந்து கொண்டது.

மாநாட்டில் மேட்டூர் குழுவின் சார்பாக வீதி நாடகமும் இசை நிகழ்ச்சியும் பறை முழக்கமும் கலை நிகழ்ச்சிகளும்  நடைபெற்றன. தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல் அதேபோல தலைமைக் குழு உறுப்பினர்கள் சக்திவேல், காவை ஈஸ்வரன் ஆகியோர் வீதி பிரச்சாரப் பயணத்தை ஒட்டிய கருத்துகளை மக்களிடத்தில் எடுத்துரைத்தார்கள்.

வீதி நாடக குழுவிலே இடம் பெற்ற பரத் பயணத்தை விளக்கி பொது மக்களிடத்திலே உரையாற்றினார். பிரச்சார பயணத்தில் கலந்து கொண்ட தோழர்கள்   சி.கோவிந்தராசு (மாவட்டச் செயலாளர், பயணக் குழு ஒருங்கிணைப்பாளர்), அ.சக்திவேல் (தலைமைக் குழு உறுப்பினர்) காவை ஈஸ்வரன் (தலைமைக் குழு உறுப்பினர்), அ.அண்ணாதுரை, இரா. முத்துக் குமார், சு.குமரப்பா, சீனி வாசன், சர வண பரத், ஐ.காளியப்பன், அ.பிரதாப், அ.திவாகர், அ.அரவிந்த், சு.விஜய், மு.விக்னேஸ்,     சி.செட்டி (எ) பிரசாந்த்,     பழ. சுசீந்திரன், சு.இராமச்சந்திரன், ச.நாகராஜ், சா.பென்னட், பொ. முரளிதரன், சி.தங்கதுரை, கு.விவேக், நா. செல்வராஜ், இரா.முத்துராஜ், மா.சக்திவேல் ஆகிய 25 தோழர்கள் பிரச்சார பயணத்தில் பங்கு பெற்றார்கள். பிரச்சார பயணத்தை விளக்கி   பொது மக்களிடத்தில் 5000 துண்டறிக்கைகள் வினியோகிக்கப் பட்டன.    

Pin It