பெரியார் சிலையை உடைத்ததால்
கிளர்ந்தெழுந்த தோழர்களை
தேசிய பாதுகாப்பு சட்டத்தில்
கைது செய்த தமிழக அரசை
வன்மையாக கண்டிக்கிறோம்.

அஞ்சமாட்டோம்! அஞ்ச மாட்டோம்!
அடக்குமுறை சட்டங்களை கண்டு
அஞ்சமாட்டோம்! அஞ்ச மாட்டோம்!
பொடாவை எதிர்த்த கலைஞரே
தடாவை எதிர்த்த கலைஞரே
என்.எஸ்.ஏ. போடுவது நியாயமா! நியாயமா!

எதிர்கட்சியாய் இருந்தபோது
எதிர்த்த ஆள்தூக்கி சட்டங்களை
ஆட்சிக்கு வந்ததும் ஏவுவது
அழகா உமக்கு கலைஞரே.

தேசத்தின் பாதுகாப்பு
50 பைசா பூணூலிலா!
வெட்கக் கேடு! வெட்கக்கேடு!
கலைஞர் அரசே வெட்கக்கேடு!

தலித்தை கொன்றால் வெறும் சட்டம்
சேரியை எரித்தால் வெறும் சட்டம்
பூணூலை அறுத்தால் பாயுது
தேசிய பாதுகாப்பு பெரும் சட்டம்

பூணூலை அறுத்தால் தேசவிரோதம்
புலிகள் என்றால் தேச விராதம்
இந்து ஏடு எழுதுது!
கலைஞர் ஆட்சி செய்யுது.

ஜெயலலிதா போட்டது பொடோ
கலைஞர் போடுவது என்.எஸ்.ஏ.
கொடியில் பெயரில் சிறு மாற்றம்
கொள்கையில் இருவரும் ஒரே மட்டம்.

பார்ப்பன சக்திகளை மகிழ்விக்க
பெரியார் தொண்டர்களை பலியிடுவதுதான்
பெரியார் அண்ணா ஆட்சியா?

பார்ப்பன மிரட்டலுக்கு பயப்படும்
கலைஞர் அரசே! தமிழக அரசே!
பூணூலுக்கு தேசிய அங்கீகாரமா!
வன்மையாக கண்டிக்கிறோம்.

கலைஞர் ஆட்சியில்
இடஒதுக்கீட்டுக்கு போராடுவது
தேச துரோகமா! தேச துரோகமோ!

கலைஞர் ஆட்சியில்
மதவாதத்துக்கு எதிராக
போராட்டங்கள் நடத்துவது
தேச துரோகமா! தேச துரோகமோ!

பார்ப்பனர்கள் மிரட்டலுக்கு
பயப்படும் கலைஞர் அரசே!
பெரியார் அண்ணா ஆட்சி என்று
சொல்லாதே! சொல்லாதே!

போராடுவோம்! போராடுவோம்!
வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!

மேட்டூர் கண்டன ஊர்வலத்தில் தோழர்கள் எழுப்பிய முழக்கங்கள்

Pin It