karuppar koottamசில நாட்களாக சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் அதிகம் பேசப்படும் செய்தியாக ஸ்கந்தனும், முருகனும் இருக்கின்றார்கள். கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தின் ஆபாசத்தைப் பற்றி வெளியீட்ட வீடியோவுக்கு எதிர்வினையாக, பிஜேபி உள்ளிட்ட சங்கிகள் கொடுத்த புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதும், மற்றொருவர் சரணடைந்ததும் நடந்துள்ளது.

பிஜேபி ஆளும் மாநிலங்களில் கூட காவல் துறை இவ்வளவு விரைவாக கைது நடவடிக்கையை மேற்கொள்ளுமா என ஆச்சரியப்படும் அளவுக்கு தமிழக காவல்துறை சங்கிகள் கொடுக்கும் புகாருக்கு உடனடியாக நடவடிக்கையை எடுக்கின்றது. சங்கிகள் எப்போதுமே நேர்மையாகத்தான் நடந்து கொள்வார்கள் என தமிழக காவல் துறை உறுதியாக நம்புவதால்தான் தொடர்ச்சியாக சங்கிகளின் நட்பு சக்தியாக அது இருந்து வருகின்றது. அதனால்தான் ‘வேலைக்குப் போகும் பெண்கள் எல்லாம் படுக்கையறைக்கு சென்றுதான் பதவி உயர்வு பெறுகின்றார்கள்’ என்று சொன்னாலும், ‘நீதிமன்றமாவது மயிராவது’ எனச் சொன்னாலும் அதில் இருக்கும் ‘உண்மைத் தன்மையை’ அங்கீகரித்து சங்கிகளுக்குப் பாதுகாப்பு தந்து நீதியின் பக்கம்தான் தாங்கள் இருக்கின்றோம் என்பதை தமிழக காவல் துறை நிரூபித்தது.

நேர்மை, உண்மை, நாணயம், நீதி போன்ற வார்த்தைகளின் மனித உருவாக வாழும் தமிழக காவல் துறை அந்த மகுடத்தில் இருந்து சரிந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தின் வெளிப்பாடாகத்தான் சங்கிகளின் பேச்சுக்கு எந்த மறுப்பும் இன்றி அவர்கள் காலால் இட்ட வேலையை தலையால் செய்து கொண்டு இருக்கின்றது. இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது மேன்மை பொருந்திய நீதிபதிகள் தங்கள் பங்கிற்கு என்ன தீர்ப்பு சொல்வார்கள் என்பதை அறிய ஆவலோடு நாம் காத்துக் கொண்டிருக்கின்றோம்.

இது ஒரு புறம் இருக்க, முற்போக்குவாதிகள் என்று தங்களை சொல்லிக் கொண்டிருக்கும் சிலர், என்ன இருந்தாலும் இவ்வளவு மோசமாக விமர்சனம் செய்திருக்கக் கூடாது என்றும், அவர்கள் நாகரீகம் கடைபிடித்திருக்க வேண்டும் என்றும், தங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும், இப்படி செய்வதால் பிஜேபிக்கே நன்மை என்றும், அவர்கள் பிஜேபியின் ஸ்லீப்பர் செல்களாக இருக்க வாய்ப்பிருப்பதாகவும் தங்களது ஆராய்ச்சியை விரிவுபடுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். இன்னும் சிலர் என்ன நடந்தாலும் கருத்து சொல்லக் கூடாது என்று எருமை மாட்டின் மீது மழை பெய்ந்தது போன்று கமுக்கமாக இருக்கின்றார்கள்.

கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் இதற்கு முன்னாலும் பல இந்துமத புராணப் புரட்டுகளை அம்பலப்படுத்தி வீடியோ வெளியிட்டு இருந்தாலும் இப்போது அது சர்ச்சையாக்கப் படுவதற்குக் காரணம் மக்களை நோயாலும் பட்டினியாலும் கொன்று கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகளின் மீதான மக்களின் கவனத்தை திசை திருப்பத்தான் என்பது அனைவருக்கும் தெரியும். எப்பொழுதெல்லாம் அரசுகளின் மீது மக்களின் கோபம் அதிகரிக்கின்றதோ அப்பொழுதெல்லாம் அதை மடைமாற்ற ஆளும் வர்க்கம் இது போன்ற ஆன்மீகவாதிகள், மதக் காப்பாளர்கள் போன்ற பெயர்களில் இயங்கிக் கொண்டிருக்கும் கார்ப்ரேட் அடிமைகளை களத்தில் இறக்கி விடும். இது போன்று கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்தான் திட்டமிட்டே சாதி, மத வன்முறையைத் தூண்டி விடுபவர்கள்.

அவர்களுக்குப் பிரச்சினை செய்ய ஏதாவது காரணம் வேண்டும். அது கந்த சஷ்டி கவசமாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. முதலில் கந்த சஷ்டி கவசத்தை வைத்து பிழைப்பு ஓட்டப் பார்த்தார்கள், ஆனால் பருப்பு வேகாததால் தற்போது கோவை சுந்தராபுரம் பகுதியில் இருக்கும் பெரியார் சிலை மீது காவி சாயத்தைப் பூசி இருக்கின்றார்கள். அதுவும் பலிக்கவில்லை என்றால் அம்பேத்கர் சிலை. அதுவும் பலிக்கவில்லை என்றால் திருப்பூரில் மோடி படத்திற்கு சங்கிகளே செருப்பு மாலை போட்டு கலவரத்தை தூண்டப் பார்த்தது போல ஏதாவது செய்வார்கள்.

எதுவுமே முடியவில்லை என்றால் ஆட்களை செட் செய்து அவர்களது வீட்டில் அவர்களே பெட்ரோல் குண்டு போட்டுக் கொண்டு 'தமிழகத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை' என ஊளையிடுவார்கள். நாம் நினைத்துக் கொண்டிருப்போம், இவை எல்லாம் ஒன்றுகொன்று தொடர்பற்று நடக்கும் நிகழ்ச்சிகள் என்று. ஆனால் சங்கிகளைப் பற்றி குறைந்தபட்ச அறிவு இருப்பவர்கள் கூட இவை எல்லாம் முரட்டு முட்டாள்களின் திட்டம்தான் என்பதை எளிதில் விளங்கிக் கொள்வார்கள்.

மக்களைக் குழப்பவும், அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி அடிமைத்தனத்தை நிலைநாட்டவும் முயலும் இது போன்ற அற்பர்களை சரியாக இணங்கண்டுபிடித்து அம்பலப்படுத்தா விட்டால், சமூக, அரசியல், பொருளாதார நிலைகள் பற்றி ஆழ்ந்த அறிவில்லாத மக்கள் இதைச் சரி என்று நம்ப ஆரம்பித்து விடுவார்கள். அதனால் சமரசவாதிகளையும், மிதவாத வேடமிடும் பார்ப்பனியத்தின் கள்ளக் குழந்தைகளையும் நாம் உடனுக்குடன் அம்பலப்படுத்த எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

நம்மைப் பொருத்தவரை கருப்பர் கூட்டத்தின் செயலைக் கண்டிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஒன்று அவர்கள் சாதியக் கட்டமைப்பு பற்றியோ, இல்லை அது கோடிக்கணக்கான மக்களை இன இழிவு செய்வது பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்படாதவர்கள் என்றும், பொறுக்கித் தின்பதற்காக உத்தமன் வேடமிடும் கபடதாரிகள் என்றும்தான் சொல்வோம். ஆபாசத்தை ஆபாசம் என்று சொல்லும் போது கொதிக்கும் ரத்தங்கள் அப்படி கொதிப்பவனை பார்ப்பானின் வைப்பாட்டி மகன் (சூத்திரன்) என இழிவு செய்யும் போது கொதிக்கவில்லை என்றால், அவனை மலத்தில் நெளியும் இழிந்த புழுவெனவே நாம் கருத வேண்டி உள்ளது.

உழைக்கும் மக்களை சாதியின் பெயரால் இழிவு செய்யும் பார்ப்பனியத்தையும், அதை கருத்தியல் ரீதியாக மக்கள் மீது திணிக்கும் அதன் சனாதன இலக்கியங்களையும், அதை நடைமுறைப் படுத்தும் இடமாக இருக்கும் கோயில்களையும் , அதைக் காப்பாற்றவே இந்த உலகைப் படைத்ததாக சொல்லப்படும் கடவுள்களையும் விமர்சிக்க மறுக்கும் நாக்குகள் இந்த உலகின் கொடிய விஷம் நிறைந்த நயவஞ்சகனின் நாக்குகள் ஆகும்.

அந்த நாக்குகள்தான் இன்று திராவிடம் என்ற கருத்தியலே இப்படித்தான், அது தமிழர்களின் மொழி, பண்பாடு, இலக்கியம் போன்றவற்றை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டது என பார்ப்பனியத்தின் குரலாய் ஒலிக்கின்றது. அந்த நாக்குகள்தான் சாதியைக் காப்பாற்றும் இலக்கியத்தையும், அவை கட்டமைக்கும் சாதியப் பண்பாட்டையும் எந்தவித விமர்சனமும் இன்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது.

சுரணையற்று சூத்திரனாய் இருக்கும் அடிமைகளுக்கு ஆபாசத்தைப் பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கின்றது? சனாதன ஆபாசக் குப்பைகள் மீது வராத கோபம், உன்னை தாழ்த்தப்பட்டவன் எனச் சொல்லி ஊருக்கு வெளியே குடிவைத்து, உன் மீது தீண்டாமையைக் கடைபிடிக்கும் சாதி வெறியர்களுக்கு எதிராக வராத கோபம், உன்னை சூத்திரன் என்று இழிவு செய்யும் பார்ப்பனியத்தின் மீது வராத கோபம், அதை அம்பலப் படுத்துபவர்கள் மீது மட்டும் உனக்கு வருகின்றது என்றால், நீ தின்பது சோறுதான் என்று யார் நம்புவார்கள்?

சாதிக்கு எதிராகப் போராட மாட்டான், தீண்டாமைக்கு எதிராகப் போராட மாட்டான், சூத்திரப் பட்டத்திற்கு எதிராகப் போராட மாட்டான், பெண்ணுரிமைக்கு ஆதரவாக தன் வாழ்நாளில் எப்போதும் குரல் கொடுத்திருக்க மாட்டான், சாதி ஆணவப் படுகொலைகள் நடைபெறும் போது அதைக் கண்டிக்க மாட்டான், இட ஒதுக்கீடு பறிக்கப்படும் போது கள்ள மெளனம் காப்பான், மொத்தத்தில் பார்ப்பனியத்தின் அடிமையாய் வாழ்வான். ஆனால் இதற்கு எதிராக யாராவது போராடினால் அவர்களை இந்துமத விரோதி என்பான், தமிழர் விரோதி என்பான். நாம் கேட்கின்றோம் நாயும் பிழைக்குமா இப்பிழைப்பு?

மருத்துவ மேற்படிப்பில் OBC இட ஒதுக்கீட்டைப் பிடுங்க மத்திய அரசு கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கின்றது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன அடிமைகளோ தங்களின் கோவணம் உருவப்படுவதைப் பற்றி கவலையின்றி மீசை முறுக்கிக் கொண்டு கந்த சஷ்டி கவசத்துக்காக பொங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி உங்களைப் பொங்க வைத்துதான் நீட், ஜிஎஸ்டி, உதய் மின்திட்டம் என அனைத்தையும் திணித்தார்கள்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த திராணி இன்றி ஒட்டுமொத்த தமிழகமும் மரணத்தை எதிர்நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. தினம் தினம் கொத்துக் கொத்தாக மக்கள் பலியாகிக் கொண்டு இருக்கின்றார்கள். லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து ஒரு வேலை சோற்றுக்கே வழியற்று நிர்க்கதியாய் தவிக்கவிடப் பட்டுள்ளார்கள். அவர்களுக்காக குரல் கொடுக்க வராத அயோக்கியர்கள் ஐந்து பைசாவுக்குப் பிரயோசனம் இல்லாத பார்ப்பன ஆபாசக் குப்பைக்கு வக்காலத்து வாங்க வரிசை கட்டி நிற்கின்றார்கள்.

இப்படி எல்லாம் பூச்சாண்டி காட்டி மூடநம்பிக்கைகளுக்கு எதிரான, பார்ப்பனிய சனாதனக் கோட்பாடுகளுக்கு எதிரான பரப்புரையை முடக்கி விடலாம் என சங்கிகளும், சங்கிகளின் அடிமைகளும் நினைத்தால் நிச்சயம் தோற்றுத்தான் போவார்கள். காரணம், நாங்கள் பெரியாரிடம் இருந்து முதலில் கற்றுக் கொண்டது அடக்குமுறைக்கு அடிபணியாத போராட்ட குணத்தைத்தான். இது ஷூ நக்கியின் அரசியல் வாரிசுகளிடம் மருந்தளவுக்குக் கூட இல்லாத ஒன்றாகும். அதனால் அடிமைகளே! உங்களால் தமிழ்நாட்டில் ஒன்றும் …. முடியாது என்பதை மரியாதையோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.

- செ.கார்கி

Pin It