“குடிஅரசு குறிப்பிட்ட கருத்தைப் பிரசுரம் செய்யும் பத்திரிகையே அல்லாமல் வெறும் வர்த்தமானப் பத்திரிகை அல்லவாதலின்... பிரதிவாரமும் ‘குடிஅரசு’ தனது தத்துவத்தை விளக்கும் போது கண்ணீர் கொட்டாமலிருக்க முடியவில்லை!”.

“உண்மையில் ‘குடிஅரசு’க்கு எந்தப் பிராமணனிடத்தும் குரோதமோ வெறுப்போ கிடையாது; ஆனால் பிராமணன் உயர்ந்தவன், மற்றவர்கள் தீண்டாதவர்கள், தெருவில் நடக்கக் கூடாதவர்கள் என்பன போன்ற இழிவாக மிருக உரிமைக்கும் பாத்திரமில்லாதவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் எண்ணத்தினிடத்திலும், தங்கள் வகுப்பார் தான் முன்னணியில் இருக்க வேண்டும், மேன்மையுடன் பிழைக்க வேண்டும், மற்றவர்கள் என்றென்றைக்கும் தங்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அதற்காகச் செய்யும் சூழ்ச்சிகளிடத்திலும் தான் ‘குடிஅரசு’க்குக் குரோதமும் வெறுப்பும் இருப்பதுடன், அவற்றை அடியோடு களைந்தெறிய வேண்டும் என்ற ஆவல் கொண்டு உழைத்து வருகிறது.” 

- பெரியார் - 15.11.1925

தமிழ் மக்களுக்குத் தேவையான சில கருத்துகளைச் சொல்லிப் பதிந்தாக வேண்டும். இன்று ஏற்றுக் கொள்ளா விட்டாலும் நாளை ஒரு நாள் ஏற்றுக் கொள்ளும் நிலை வரும். இக் கருத்துகளை சொல்லும் நிலையில் நான் தான் இருக்கிறேன்.

சொல்ல வேண்டிய கருத்துகளை நானே எழுதி, நானே அச்சுக்கோத்து, நானே அச்சிட்டு, நானே படித்துக் கொள்ளும் நிலைக்குப் போனாலும் குடிஅரசை வெளியிட்டு, என் கருத்துக்களை வரும் தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டியது எனது கடமை

(குடிஅரசு 10.06.1929) தந்தை பெரியார்

Pin It