24.12.2010 வெள்ளிக் கிழமை மாலை 6.30 மணியளவில் சென்னை பெரம்பூர், பெர வள்ளூர் சதுக்கம், காமராசர் சிலை அருகில் வடசென்னை மாவட்ட கழகம் சார்பில் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கழக வழக்கறிஞர் சு. குமாரதேவன், தலைமை வகிக்க வி. ஜனார்த்தனன் வரவேற்க மு. சுதாகர், தே. ஜெயவேலு, இரா. பரத் முன்னிலை வகிக்க கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை ஆற்றினார். கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் உரையாற்றிய இக்கூட்டத்தில் எ. கேசவன், மு. வேலவன், பி.சி.ஆர். மனோகரன் (தி.மு.க.) ஆகியோரும் உரையாற்றினர். டி.ஜி. அரசு நன்றி கூறினார். இக்கூட்டத்தில் பாபா நகர் ஜெ.க. ஆதவன், தி.க.விலிருந்து விலகி தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார். அவருக்கு கழகத் தலைவர் கருப்பு சட்டைத் துணியை அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இக்கூட்டத் தில் கழகத் தோழர்கள், பொது மக்கள் நூற்றுக்கணக்கில் கூடியிருந்து கூட்டம் துவங்கிய திலிருந்து முடியும் வரை செவிமடுத்தனர். நிகழ்ச்சித் துவக்கத்தில் தமிழின எழுச்சிப் பாடல்களை சமர்பா குமரன் பாடினார்.

 வடசேரியில்....

தந்தை பெரியார் 132 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கழகத்தின் சார்பாக வடசேரி பேருந்து நிலையத்திலும், வடசேரி குஞ்சிதபாதம் சதுக்கத்திலும், வடசேரி வடக்குத் தெருவிலும் கழகத் தோழர் சிவசுப்பிரமணியன் கடை அருகிலும் பெரியார் படம் வைத்து அலங்கரித்து மாலை அணிவிக்கப்பட்டது.

அன்னதானப்பட்டியில்

18.12.2010 அன்று மாலை 6.30 மணிக்கு சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரில், கழகம் சார்பாக பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அசோகன் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில், முதல் நிகழ்வாக ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியினை, கோகுலகண்ணன் நடத்தினார். தோழர்கள் காமராஜ், இளமாறன் (த.ஒ.வி.இ.), தமிழ்மதி ஆகியோர் உரைகளை தொடர்ந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.

கோவை ஆவாரம்பாளையத்தில்

கோவை ஆவாரம்பாளையத்தில் பெரியார் நினைவு நாளன்று பெரியார் படத்துக்கு மாலை அணிவித்து தோழர்கள் சாதி எதிர்ப்பு உறுதி ஏற்றனர். இந்நிகழ்வில் கழகத் தோழர் களுடன் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தே.மு.தி.க. தோழர்களும் பங்கேற்றனர்.

தஞ்சையில்

24.12.2010 அன்று தஞ்சாவூர் கொடி மரத்து மூளை பகுதியில் பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப் பட்டது. தோழர்கள் அனைவரும் நினைவு நாள் உறுதிமொழி ஏற்றனர். தோழர் இராமர் தலைமை தாங்கினார். 30க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். தோழர்கள் இராவணன், புதியவன் ஆகியோர் கலந்து கொண்டனர். தஞ்சை நகரம் முழுவதும் நினைவு நாள் சுவரொட்டி ஒட்டப்பட்டது.

பெரம்பலூரில்

பெரியாரின் 37 ஆவது நினைவு நாளில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலுள்ள பெரியார் சிலைக்கு பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் துரை. தாமோதரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் கழகத் தோழர்கள் எல்.ஐ.சி. கார்த்தியேன், பேராசிரியர் அம்மணி, ஜெ. ஜெயவர்த்தனா, பெரியார் நேசன், பெரம்பலூர் இராஜேஷ், ரமேஷ், பாடலூர் சுதாகர், அனுக்கூர் மணிவண்ணன், கற்பனை பித்தன் இரவிச்சந்திரன், பூபாலன், திருப்பெயர் பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில்

தூத்துக்குடி மாவட்ட கழகம் சார்பில் 24.12.2010 அன்று தூத்துக்குடியில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு சாதி ஒழிப்பு முழக்கத்துடன் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்வில் கழக மாவட்டச் செயலாளர் கோ. அ. குமார், மாவட்ட இணைச் செயலாளர் க. மதன், மாநகரத் துணைத் தலைவர் ச. இரவி சங்கர், மாநகரச் செயலாளர் பால். அறிவழகன், சி. அமிர்தராசு, அ. அறிவுப் பித்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூரில்

24.12.2010 அன்று தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக் கூட்டம், திருப்பூர் பூலுவபட்டி, கீதா நகர் பகுதியில் இரா. குமார் தலைமையில் நடந்தது. பிரசாத் வரவேற்புரையாற்றினார். கோபி பேலுச்சாமி, கா.சு. நாகராசு சிறப்புரையாற்றினார். சிற்பி ராசன் மந்திரமா, தந்திரமா நிகழ்ச்சிகளை நடத்தினார். மணிகண்டன் நன்றி கூறினார்.

கோபியில்

24.12.2010 அன்று பெரியார் நினைவு நாள் அன்று மாவட்ட கழகத்தின் சார்பாக கோபி பெரியார் திடலில் அமைந்துள்ள அய்யா சிலைக்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தோழர்கள் செயராமன், குணசேகரன், அர்ச்சுனன், விஜயசங்கர், சுப்பிரமணியம், ஆனந்தராஜ், செகநாதன், நிவாசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோபி நகர கழக கலந்துரையாடல் : 24.12.2010 அன்று பெரியார் நினைவு நாள் அன்று கோபி நகர கழகத்தின் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையேற்க, நகர தலைவர் நாகப்பன் முன்னிலை வகிக்க, நகர தலைவர் இல்லத்தில் கூட்டம் நடைபெற்றது.

சனவரி இறுதியில் கோபி நகரத்தின் சார்பாக குடிஅரசு நூல் விளக்க பொதுக் கூட்டம் நடத்துவது. பெரியார் முழக்கம் ஓர் ஆண்டு சந்தா தற்பொழுது நடைமுறையில் உள்ளது. அதனை இரண்டாண்டு, மூன்றாண்டு, அய்ந்தாண்டு சந்தாவும் நடைமுறைபடுத்த தலைமையை கேட்டுக் கொள்வது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ அரசு வாயிலாக அனைத்து நூலகங்களுக்கும் செல்ல தலைமை நடவடிக்கை எடுக்க விழ செய்ய வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்வில் குணசேசரன், செயராமன், நிவாசு, செகநாதன், ரகுநாதன், விசயசங்கர், சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின்பு நகர தலைவர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது.

கொட்டும் மழையில் ஓட்டேரியில் நடந்த கழகப் பொதுக் கூட்டம்

16.12.2010 வியாழன் மாலை 6 மணியளவில் வட சென்னை, ஓட்டேரி, வெங்கட்டம்மா சமாதி தெருவில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக் கூட்டம் சி. பாசுகர் தலைமையில் வி. ஜனார்தனன் முன்னிலை வகிக்க, ந. தட்சிணாமூர்த்தி வரவேற்க கழகத் தோழர்கள் சி. அருள்தாசு, ந. நாத்திகன், பாவலர் கீர்த்தி ஆகியோர் இன உணர்வு பாடல்கள் பாடினர். தொடர்ந்து மந்திரமல்ல தந்திரமே எனும் அறிவியல் விளக்க நிகழ்ச்சியை சிற்பி இராசன் சுமார் ஒரு மணி நேரம் நடத்தினார். மழைக் குறுக்கிட அரை மணி நேரம் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. மழை விடாமல் தூறிக் கொண்டே இருந்தது. கூட்டத்தை கேட்க கூடி இருந்த பொது மக்கள் கலைந்து செல்லாமல் ஆங்காங்கே ஒதுங்கி இருந்தனர். பொது மக்களின் வற்புறுத்தலின் பேரில் தொடர்ந்து கொட்டும் மழையில் வழக்கறிஞர் சு. குமாரதேவன் உரயாற்றினார். அதனைத் தொடர்ந்து கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் சிறப்புரையாற்றினார். மீண்டும் சிற்பி இராசன் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தினார். தோழர் கே. திலீபன் நன்றி கூற கூட்டம் இரவு 10 மணியளவில் முடிவுற்றது.

Pin It