‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்’ அகற்றப்படவில்லை
2006 ஆம் ஆண்டு மே மாதம் தமிழக அரசு தமிழகத்தில் உரிய பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் சாதி, சம்பிரதாய வேறுபாடுகள் இன்றி அறநிலையத் துறையின் கீழ் உள்ள 36000 கோயில்களிலும் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டது. மதுரை மீனாட்சி, பழனி முருகன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதன் உட்பட அனைத்து கோயில்களையும் உள்ளடக்கியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தின் 6 பகுதிகளில் அர்ச்சகர் பயிற்சி நிறுவனங்களை தமிழக அரசு நிறுவியது. ஓராண்டுக்கான சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்து அறநிலையத் துறையின் மேற்பார்வையின் கீழ், சைவ வைணவ கோயில் நிர்வாகங்களோடு இந்த பயிற்சி மய்யங்கள் இணைக்கப்பட்டன. பயிற்சி பெறும் மாணவர் களுக்கு மாதம் ரூ.500 உதவித் தொகையாக வழங்கப் படுவதோடு, பயிற்சி முடித்தவுடன் அரசு கட்டுப் பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று அரசு விளம்பரம் செய்தது. 240 பேர் சேர்க்கப்பட்டனர். இதில் 207 பேர் ஓராண்டு பயிற்சியில் தேர்ச்சிப் பெற்றனர். இதில் 3 பேர் மட்டுமே பார்ப்பனர்கள். ஏனையோர், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்.
 
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் - புரட்சி - தமிழகத்தில் நடந்து முடிந்து விட்டதாக திராவிடர் கழகம் அறிவித்து, பெரியார் திடலிலுள்ள பெரியார் நினைவிடத்தில் கலைஞர் கருணாநிதியை மகிழ்விக்க நினைவுக் கல்வெட்டையும் பதித்து விட்டது. உண்மையில், தமிழக அரசின் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி முடித்த எந்த ஒரு பார்ப்பனரல்லாதாரும் எந்த ஒரு கோயிலிலும் அர்ச்சகர் ஆக முடியாத நிலையில் புறக்கணிக்கப் பட்டுள்ளனர். தமிழக அரசும் இது பற்றி ஒரு நடவடிக்கையும் எடுத்திடவில்லை. இது பற்றிய கட்டுரை ஒன்றை ‘டெகல்கா’ வார ஏட்டில் (ஆக. .22) அதன் செய்தியாளர் சஞ்சனா எழுதியுள்ளார்.
இதற்கிடையே - மதுரை மீனாட்சி கோயிலைச் சார்ந்த பார்ப்பனர்கள் ஆதிசிவ - சிவாச்சாரியார் சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் ஆணையை எதிர்த்து வழக்கு தொடர்ந்து ஆணைக்கு தடை வாங்கிவிட்டனர். (தடையை நீக்கும் சட்ட நடவடிக்கைகள் எதையும் தமிழக அரசு மேற்கொள்ளாமல், அர்ச்சகர் பயிற்சி நிறுவனங் களை தொடங்கியது. தமிழக முதல்வர் மிகவும் சாதுர்யமாக செயல்படுவதாக தி.க. தலைவர் கி.வீரமணி பாராட்டினார்) உச்சநீதிமன்றத்தில் அரசு ஆணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்காமல், தி.மு.க. ஆட்சி நிறுத்தி வைத்துள்ளது.
பயிற்சி முடித்த மாணவர்கள் மூன்று ஆண்டுகளாக வேலையின்றி உள்ளனர். பயிற்சியை முடித்த அருண்குமார் என்ற பார்ப்பன மாணவருக்கு மட்டும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பரம்பரை அர்ச்சகர் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் அர்ச்சகர் வேலையை வழங்க யார் பார்ப்பனர் சம்மதித்து விட்டனர். அவருடன் பயிற்சி பெற்ற 36 பேரில் இவர் ஒருவருக்கு மட்டுமே (பார்ப்பனர் என்பதால்) வேலை கிடைத்துள்ளது. இப்போது அவர் மாதம் ரூ.3000 சம்பளம் பெறுகிறார். இது தவிர பக்தர்கள் தரும் காணிக்கைகள் கிடைக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் தடையால் தன்னுடன் படித்த பலர் வேறு வேலைகளைத் தேடி வருவதாக இவர் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் திருமானி எனும் கிராமத்தைச் சேர்ந்த பிரவின் குமார், அர்ச்சகர் பயிற்சியை முடித்து, சான்றிதழ் கிடைக்காமல் உள்ளார். மூப்பன் என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இவர், ஓராண்டை பயிற்சியில் வீணடித்து விட்டு, இப்போது பட்டப்படிப்பில் சேர்ந்து படித்து வருகிறார். ‘மதச் சடங்குகளை செய்வதற்கு எனது மகனை எவரும் அங்கீகரிப்ப தில்லை’ என்று அவரது தாயார் கவலையுடன் கூறினார்.
அதே வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த அர்ச்சகர் பயிற்சி பெற்ற சரவணன் சுப்ரமணியனுக்கு 24 வயது. ‘கருணீகர்’ எனும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். ஏழைக் குடும்பம். பயிற்சி முடித்து, சான்றிதழ் ஏதும் தரப்படாத நிலையில் கிராம கோயில் ஒன்றில் பூசாரி வேலைக்குப் போனார். தனது சாதி அடையாளம் தெரிந்த பிறகு, வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அவர் கூறுகிறார். பயிற்சி பெற்ற 207 மாணவர்களும் அர்ச்சகர் பதவி பெற முடியாமல், சமூக புறக்கணிப்புக்கு உள்ளாகியுள்ள னர். ஒரு பார்ப்பனருக்கு மட்டுமே மதுரை மீனாட்சி கோயில் கதவு திறந்துள்ளது. தமிழக அரசு 6 அர்ச்சகர் பயிற்சி மய்யங்களையும் இழுத்து மூடி விட்டது என்று ‘டெகல்கா’வின் கட்டுரை கூறுகிறது.
பெரியார் நெஞ்சில் தைத்த முள் - இன்னும் எடுக்கப்படவே இல்லை. அண்ணா நூற்றாண்டில் தமிழர் சமுதாயத்தின் மீதான சூத்திர இழிவு தொடருகிறது. ஆனால், பெரியார் ஆட்சி நடப்பதாக கி.வீரமணி தம்பட்டம் அடிக்கிறார். தி.மு.க. ஆட்சி உச்சநீதிமன்றத்தின் தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை.
வழக்கு விசாரணைக்கு எடுத்து, முடிக்கப்பட இன்னும் எத்தனை ஆண்டுகாலம் ஆகுமோ, தெரியாது!
‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்’ அகற்றப்படவில்லை' :
 
2006 ஆம் ஆண்டு மே மாதம் தமிழக அரசு தமிழகத்தில் உரிய பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் சாதி, சம்பிரதாய வேறுபாடுகள் இன்றி அறநிலையத் துறையின் கீழ் உள்ள 36000 கோயில்களிலும் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டது. மதுரை மீனாட்சி, பழனி முருகன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதன் உட்பட அனைத்து கோயில்களையும் உள்ளடக்கியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தின் 6 பகுதிகளில் அர்ச்சகர் பயிற்சி நிறுவனங்களை தமிழக அரசு நிறுவியது. ஓராண்டுக்கான சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்து அறநிலையத் துறையின் மேற்பார்வையின் கீழ், சைவ வைணவ கோயில் நிர்வாகங்களோடு இந்த பயிற்சி மய்யங்கள் இணைக்கப்பட்டன. பயிற்சி பெறும் மாணவர் களுக்கு மாதம் ரூ.500 உதவித் தொகையாக வழங்கப் படுவதோடு, பயிற்சி முடித்தவுடன் அரசு கட்டுப் பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று அரசு விளம்பரம் செய்தது. 240 பேர் சேர்க்கப்பட்டனர். இதில் 207 பேர் ஓராண்டு பயிற்சியில் தேர்ச்சிப் பெற்றனர். இதில் 3 பேர் மட்டுமே பார்ப்பனர்கள். ஏனையோர், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் - புரட்சி - தமிழகத்தில் நடந்து முடிந்து விட்டதாக திராவிடர் கழகம் அறிவித்து, பெரியார் திடலிலுள்ள பெரியார் நினைவிடத்தில் கலைஞர் கருணாநிதியை மகிழ்விக்க நினைவுக் கல்வெட்டையும் பதித்து விட்டது. உண்மையில், தமிழக அரசின் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி முடித்த எந்த ஒரு பார்ப்பனரல்லாதாரும் எந்த ஒரு கோயிலிலும் அர்ச்சகர் ஆக முடியாத நிலையில் புறக்கணிக்கப் பட்டுள்ளனர். தமிழக அரசும் இது பற்றி ஒரு நடவடிக்கையும் எடுத்திடவில்லை. இது பற்றிய கட்டுரை ஒன்றை ‘டெகல்கா’ வார ஏட்டில் (ஆக. .22) அதன் செய்தியாளர் சஞ்சனா எழுதியுள்ளார்.
 
Pin It