எதிர்காலம் குறித்து நம்பிக்கையூட்டும் மாணவர் போராட்டங்கள் தமிழக அரசியலில் ஆளுமை செலுத்திய இரண்டு மாதங்கள் கழித்து திரும்பவும் சாதி வெறியர்கள் அரசியல் மையத்தைக் கைப்பற்றியுள்ளனர். பாமக-வின் அப்பட்டமான சாதி வெறி, காதல் எதிர்ப்பு, காதலர் கொலை ஆகியவற்றைக் கண்டு தமிழ்நாடே திகைத்துக் கிடக்கிறது. இப்படியெல்லாம் கூட ஒரு அரசியல் கட்சி பேசவும், நடக்கவும் முடியுமா என அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இக்கட்டுரை 'மக்கள் தலித் இயக்கங்களும் - ஃபோர்டு பவுண்டேசன் தலித் இயக்கங்களும்' என்ற எனது கட்டுரையின் தொடர்ச்சியாக பாட்டாளி மக்கள் கட்சியின் தோற்றம், வளர்ச்சி, நோக்கம், பின்னிருந்து இயக்கிய சக்திகள் குறித்து எழுதப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடெங்கும் - குறிப்பாக சென்னையில் பா.ம.கவின் சாதி வெறிக்கு எதிராக பரவலாக கண்டனக் கூட்டங்கள் நடந்தது நினைவிருக்கும். இப்படியான பல கூட்டங்களிலும், ஊடக நிகழ்வுகளிலும் அ.மார்க்ஸ், இரவிக்குமார் போன்றவர்களும் மேடையேறினர்; பா.ம.க-வின் செயலைக் கண்டு நிலைகுலைந்து போய்விட்டதாக நடித்தனர்; கோபமடைவதாக காட்டிக் கொண்டனர்.

anbumani_ramadoss_gkmani_guru

இதே பின்நவீனத்துவ கும்பல்தான் 20 ஆண்டுகளுக்கு முன்பு பாமகவை வளர்த்து விட்டவர்கள்; அதற்கு முற்போக்கு முகமூடியை அணிவித்து தோள்களில் சுமந்து திரிந்தவர்கள்.

‘ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்’ என்ற முழக்கத்தோடு 1989 பாதியில் தோன்றிய பாமக-வை நாடு உடனடியாக நம்பவில்லையாம். துடிதுடித்து போய்விட்டனர் பின்நவீனத்துவவாதிகள். தீண்டாமைக் கொடுமை எதிர்ப்பு, பிற்படுத்தப்பட்ட மக்களிடம் உயர்சாதி உணர்வு எதிர்ப்பு, தலித் முதல்வர் என பாமக புரட்சிகர பாதையைக் கண்டுபிடித்து விட்டது என்று பின்நவீனத்துவவாதிகள் நாடெங்கும் தண்டோரா போட்டனர். இதுகுறித்து விரிவாகவும், ஆதாரங்களோடும் புதிய சனநாயக வெளியீடான “சாதி- ஆதிக்க அரசியலும், அடையாள அரசியலும்” என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. பு.ச - வை பிடிக்காதவர்கள் 15.11.91ல் வெளிவந்த - அ.மார்க்ஸ் & இரவிக்குமார் கும்பலின் - நிறப்பிரிகை 4வது இதழைப் பார்த்துக் கொள்ளலாம். இந்த இதழில் வெளிவந்த ராமதாஸின் பேட்டியையும் கேள்விகளையும் பார்த்தாலே பா.ம.க.வை வளர்த்தெடுக்க இவர்கள் காட்டிய அக்கறை புரியும். நிறப்பிரிகையில் வெளிவந்த ஒரே தமிழக அரசியல் கட்சித் தலைவரின் பேட்டி இதுதான். பா.ம.கவின் சிந்தனையாளர் குழுவில் கல்யாணி, பழமலை, கருணா மனோகரன் போன்ற பின்நவீனத்துவ ஆதரவாளர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்தக் கூட்டணிதான் பா.ம.கவை தமிழகமெங்கும் கொண்டு சென்றது.

'கம்யூனிஸ்டுகளால் சாதியை ஒழிக்க முடியாது; கம்யூனிஸ்டு மட்டுமல்ல, யாராலும் சாதியை ஒழிக்க முடியாது' என அடையாள அரசியல் பேசிய அ.மார்க்ஸ் வகையறாக்கள்தான் 'பாமக சாதியை ஒழிக்கும்' என ஊரெங்கும் பேசினார்கள்.

இன்று இதே கோஷ்டிகள்தான் கம்யூனிஸ்டுகளின் மேடைகளில் ஏறி பாமக-வை வசைபாடுகிறனர். பாமக-வை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் தங்களுக்கிருந்த பங்கு குறித்தோ, அதன் தவறுகள் குறித்தோ எந்த சுயவிமர்சனமும் இவர்களிடமில்லை; துளியளவு குற்ற உணர்வுமில்லை.

இப்போது நமக்கு முன் இரண்டு கேள்விகள் எழுகின்றன.

1.            பாமக முதலில் சரியாக இருந்து இப்பொழுதுதான் சீரழிந்துவிட்டதா?

2.            பாமகவை மதிப்பிடுவதில் நமது அல்ட்ரா அறிவுஜீவிகள் தவறிழைத்து விட்டார்களா?

3.            இரண்டுக்கும் இல்லை என்பதே பதில் என்னும் பட்சத்தில் எதற்காக இப்படி ஒரு கட்சி வட தமிழகத்தில் உருவானது? இதனால் பலனடைந்தவர்கள் யார்?

பாமக கறந்த பாலல்ல. அது மக்களின் நலனிலிருந்து தோன்றிய கட்சியுமல்ல. அதேபோல், அயோக்கியனை அடையாளம் காண முடியாத அளவுக்கு பின்நவீனத்துவவாதிகள் அப்பாவிகளுமல்ல. அவர்கள்தான் மார்க்சியத்துக்கே மாற்று கண்டுபிடித்தவர்களாயிற்றே!

‘ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்’ எனக் கூச்சலிட்ட பாமக ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவோ, வன்னிய மக்களுக்காகவோ கூட எப்போதும் உருப்படியாய் எதுவும் செய்ததில்லை.

•             நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களுக்கு நிலத்தைக் கொடுத்துவிட்டு இன்றுவரை முறையான இழப்பீடு இல்லாமல் தவிக்கும் மக்கள்

•             வீரப்பன் விவகாரத்தில் சின்னா பின்னமாக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்கள்

•             பிழைப்பு தேடி பெங்களூருக்கும், மும்பைக்கும் சென்று கொத்தடிமைகளானவர்கள்.

•             சுமங்கலி திட்டம் என்ற பெயரில் இன்றைக்கு கோவை திருப்பூர் மில்களில் கொத்தடிமைகளாக உள்ள சிறுமிகள்.

•             வீரப்பன் விவகாரத்தில் தற்போது தூக்கு கயிறுக்கு அருகிலிருக்கும் நான்கு பேர்

•             கொச்சி முதல் பெங்களூரு வரையிலான எரிவாயு குழாய் பதிப்பில் பாதிப்படையும் விவசாயிகள்

•             சென்னை உட்பட வடமாவட்டங்கள் அனைத்திலும், பன்னாட்டு நிறுவனங்களிடமும், அமைச்சர்கள் - அதிகாரிகளிடமும் நிலத்தை பறிகொடுக்கும் மக்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் வன்னியர்கள். இம் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளான மேற்கூறப்பட்டவைகளுக்காக ஒரு கோடி வன்னியர் கூட்டத்தை பாமக எப்போதும் நடத்தியதில்லை; ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட்டதில்லை. சாதிமறுப்புத் திருமணங்களுக்கு எதிராக அது தற்போது எடுத்திருக்கும் ‘விஸ்வரூபத்’தைப் பாருங்கள் - இந்தக் கட்சியின் நோக்கம் உழைக்கும் வன்னிய மக்களுக்காகப் போராடுவது அல்ல என்பது தெளிவாகப் புரியும்.

பாமக ஆரம்பத்திலும் சரியானதாக இருக்கவில்லை. இப்போதும் அது சரியானதற்காக இயங்கவில்லை.

அப்படியெனில் ஏற்கனவே மக்கள் யுத்தக் கட்சியும், இரண்டு பொதுவுடமைக் கட்சிகளும் வலிமையாக இருந்த வடதமிழகத்தில் ஜாதி வெறியர்களுக்கு முற்போக்கு முகமூடியிட்டு ஏன் பின்நவீனத்துவ வாதிகள் ஆதரிக்க வேண்டும்?

பாமகவை ஆதரிக்க பின்நவீனத்துவவாதிகள் செய்த தகிடுதத்தங்களைப் பார்ப்போம்.

•             தலித் இளைஞர்களை நக்சல்பாரி உட்பட அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்தும் வெளியேறச் சொன்னவர்கள் பின்நவீனத்துவவாதிகள். ‘ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஒரே கட்சி என்பது தவறு’ என வாதிட்டவர்கள் இவர்கள். ‘சாதி என்பது சமூக அடையாளம், எனவே தலித்துகளுக்கு தனி அமைப்பு வேண்டும்’ என்று கூறி தலித்தியத்தை வளர்த்து விட்டவர்கள் இவர்கள். பிறகெப்படி தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் ஒரே பிரிவினர் என ஒத்துக்கொண்டார்கள்? ‘ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்’ எனக் கூச்சலிட்டார்கள்?

•             நக்சல்பாரி இயக்கங்கள் உட்பட அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளைக் காட்டிலும் பாமக அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் என்பதற்கு கொள்கை விளக்கம் ஏதாவது இவர்களிடம் இருந்ததுண்டா?

இவைகளுக்கு எந்தவகையிலும் நாம் நேரடியான பதிலைப் பெறமுடியாது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் வட தமிழ்நாட்டின் சமூக மற்றும் அரசியல் சூழலை உணர்ந்து கொண்டால் இதற்கான பதிலை அடைந்துவிடமுடியும்.

வட தமிழகத்தின் தாது வளங்களும் அரசியல் சூழலும்

1.            இப்பகுதிகள் எங்கும் இயற்கை வளங்கள் நிறைந்து கிடக்கின்றன. நெய்வேலி, ஜெயங்கொண்டம் என அள்ள அள்ளக் குறையாத நிலக்கரி செல்வம்; விலை உயர்ந்த கற்களை கொண்ட மலைகள்; மலையோடு கூடிய வளமிக்க காடுகள்; சேலத்தையொட்டி விரியும் இரும்புத்தாது வளம்; ஆறும்.ஏரிகளுமான நீராதாரம்; இதையொட்டிய ஆற்றுமணல் வளம் என உள்நாட்டு முதலைகள் முதல் பன்னாட்டு முதலைகள் வரை கொள்ளையடிப்பதற்கான வளங்கள் குவிந்த பகுதி வடதமிழ்நாடு. கூடவே குறைந்த கூலிக்கு அதிக உழைப்பைக் கொடுக்கும் நிலையில் உள்ள எளிய மக்களாகிய மனித வளம்.

2.            சாதி சமூகமான தமிழ்நாட்டில் மிகப் பெரும்பான்மை மக்களான ஆதிதிராவிடர்களும், வன்னியரும் தொடர்ச்சியாக வாழும் நிலப்பரப்பு வட தமிழ்நாடு. இரு சமூகங்களும் மேல்-கீழ் சாதிகளாக அறியப்பட்டாலும் மேல்சாதி எனக் கூறிக் கொள்ளும் வன்னியரில் பெரும்பாலானோர் ஏழைகளே. ஆகவே வர்க்க அடிப்படையில் எளிதாக ஒன்றுகூடும் வாய்ப்புடைய மக்களைக் கொண்ட, புரட்சித் தீயை பற்றவைத்து பரவச் செய்யும் வாய்ப்புடைய பகுதி வடதமிழ்நாடு.

3.            ஆகவே இங்கு மனித குலத்தின் விடுதலைக்கான தத்துவமான கம்யூனிசமும், கம்யூனிஸ்ட் கட்சியுமே செல்வாக்கு செலுத்தியது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வளர்ந்த தி.க. –தி.மு.க உட்பட திராவிட இயக்கங்கள் கூட வட தமிழ்நாட்டில் செல்வாக்கு பெறவில்லை.

4.            1957 வரை கம்யூனிஸ்ட் கட்சி(CPI) தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சியாக விளங்க வட தமிழ்நாடு தான் காரணம். கம்யூனிஸ்ட் கட்சியானது பலவாறாக பிரிந்துவிட்ட இன்றைய நிலையிலும் தேர்தலில் போட்டியிடும் CPI, CPM கட்சிகளுக்கு வட தமிழ்நாடு பலமான பகுதியாக உள்ளது.

5.            1967ல் வசந்தத்தின் இடி முழக்கமென தோன்றிய நக்சல்பாரி இயக்கமும், இங்கே செல்வாக்கோடு வளர்ந்தது. 1980 வரை இயக்கத்தின் செல்வாக்கு குறிப்பாக மக்கள் யுத்தக் கட்சியின் செல்வாக்கு அளவிட முடியாதது. இந்தக் காலகட்டத்தில் மக்கள் யுத்தக் கட்சியின் தலைமையில் நிலப்பிரபுக்கள், கந்துவட்டிக் காரர்கள் உள்ளிட்ட அனைத்து சுரண்டல்காரர்களையும் மக்கள் எதிர்த்துப் போராடி குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டினர். தோழர் பாலன் தலைமையில் வன்னிய இளைஞர்கள் இரட்டைக் குவளைகள் இருந்த தேநீர்க் கடைகளை உடைத்து நொறுக்கினர். உறவினர்களாகவும், நண்பர்களாகவும், அண்டை வீட்டார்களாகவும் இருந்த மக்கள் விரோதிகளை அழித்தொழிப்பதில் புரட்சிகர இயக்கத்தில் இணைந்து கொண்ட வன்னிய இளைஞர்கள், தாழ்த்தப்பட்ட மக்களோடு இணைந்து நின்றனர். அந்த வீரஞ்செறிந்த இளைஞர்களை சாதிப்பெயர் கொண்டு குறிப்பிடுவது மாபெரும் குற்றம் என்றாலும் இன்றுள்ள நிலைமைகளின் காரணமாக இதைச் செய்ய வேண்டியுள்ளது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நாயக்கன் கொட்டாய் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட பத்து தம்பதியர் இருக்கின்றனர் என்றால் இந்த வீரஞ்செறிந்த போராட்டங்களும் ஒரு காரணம்.

6.            புரட்சி இயக்கத்தின் வளர்ச்சியைக் கண்டு நடுங்கித்தான் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர், தேவாரம் என்ற போலீஸ் மிருகத்தை கட்டவிழ்த்து விட்டார். பாலன், கண்ணாமணி என 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கொல்லப்பட்டனர். 1980களில் வட தமிழ்நாடெங்கும் காவல் துறை சாம்ராஜ்யம் நடைபெற்றது. இணைந்து போராடியது போலவே அடக்குமுறைகளையும் சித்திரவதைகளையும் ஆதிதிராவிட மக்களும், வன்னிய மக்களும் இணைந்தே எதிர் கொண்டனர்.

7.            அத்தனை அடக்குமுறைகளையும் தகர்த்தெறிந்துவிட்டு இயக்கம் 1983-84களில் புதுப்பாய்ச்சலை அடைந்தது. இருந்த போதிலும் தொடர்ச்சியான பிளவுகள் மக்கள் இயக்கத்தைச் சிதறடித்தன. முதலில் மக்கள் யுத்தக்குழுவிலிருந்து தோழர் தமிழரசன் வெளியேறி தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி (தமிழ்நாடு விடுதலைப்படை)யை உருவாக்கினார். பின்பு இயக்கம் திரும்பவும் பிளவுண்டு மக்கள் யுத்தக்குழு(போல்சுவிக்) தோன்றியது.

a_marx_310ஆளும் வர்க்கங்கள் தாங்கள் நக்ஸலைட்டுகளை அடக்க, பட்ட பாட்டிலிருந்து பல பாடங்களைக் கற்றுக் கொண்டன. அவை நக்ஸல்பாரிப் புரட்சியாளர்களை மட்டுமல்லாமல் சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற ஆயுதப் போராட்டத்தைக் கையிலெடுக்காத பொதுவுடமைக் கட்சிகளையும் எதிரியாகவே பார்த்தன. இக்கட்சிகளின் வலிமையான தொழிற்சங்கங்கள், அர்ப்பணிப்புள்ள தோழர்கள் காரணமாக இயற்கை வளங்களையும் மக்களையும் சுரண்ட இடையூறாக இருந்த இந்தக் கட்சிகளும் ஒழித்துக் கட்டப்பட வேண்டிய தொல்லை என்றே ஆளும் வர்க்கங்கள் கருதின. இன்றும் மணல் கொள்ளைகளுக்கும் காவல்துறை பாலியல் பலாத்காரங்களுக்கும் எதிராக முன்னிற்பவர்கள் இந்த இரண்டு கட்சிகளையும் சேர்ந்த தோழர்கள்தான். தவிர நக்ஸலைட்டுகள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை இருதரப்பினரும் (நக்ஸலைட்டுகளும் சிபிஎம்மும்) ஒப்புக் கொள்ள மறுத்தாலும் ஆளும் வர்க்கங்கள் மறக்கவில்லை.

எனவே எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த கம்யூனிஸ்டுகளை வட தமிழகத்திலிருந்து ஒழித்துக் கட்டும் நடவடிக்கையின் இரண்டாவது பாகம் தான் பா.ம. க. மூன்றாவது பாகம் விடுதலைச் சிறுத்தைகள். இதற்கான அரசியல் தத்துவார்த்த அடிப்படையை வழங்கியவர்கள் பின்நவீனத்துவவாதிகள்.

கம்யூனிச எதிர்ப்பு அரசியல் நடவடிக்கை

வட தமிழகத்து மக்களை சாதிரீதியாக பிளவு படுத்துவதுதான் கம்யூனிச அபாயம் திரும்பவும் தலைதூக்காமல் செய்யும் வழி என்பதை ஆளும் வர்க்கங்கள் புரிந்து கொண்டதற்கு அடையாளம்தான் பின்நவீனத்துவ வாதிகள் பாமகவுக்கு கொடுத்த ஆதரவு.

தனி இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்கம் நடத்திய போராட்டம், வன்னியர்களை கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கிலிருந்து பிரிக்க சரியான வழியை ஆளும் வர்க்கங்களுக்குக் காட்டியது. வன்னியர் சங்கம் பாமகவாக மாறியது. அதற்கு முற்போக்கு முகமூடி அணிவிக்கப்பட்டது.

பின்னவீனத்துவ வாதிகளின் வழிகாட்டலில் ‘நானும் ஒரு நக்ஸலைட்தான்’ என்று ராமதாஸ் தொடர் கட்டுரை எழுதினார். தலித் விடுதலைக்காகவே பிறந்து வந்தது போலக் காட்டிக் கொண்டார். பா.ம.க ஆட்சியைப் பிடித்தால் தலித்துதான் அடுத்த முதல்வர் என்று முழங்கினார். தலித் எழில்மலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கினார். வட தமிழ்நாட்டின் பொதுவுடமைப் பாரம்பரியத்திற்கு எதிராகப் போனால், தான் குப்பைக் கூடைக்குள் வீசப்படக்கூடிய ஆபத்து உள்ளது என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார் என்பதை இந்த வீர வசனங்கள் காட்டுகின்றன. இல்லாவிட்டாலும் கற்றுத் தர பின்னவீனத்துவ வாதிகள் இருக்கிறார்கள் அல்லவா?

வன்னிய மக்களில் ஒரு சின்னஞ்சிறிய பிரிவு நடுத்தர வர்க்க மக்களின் பிரதிநிதியாக இருந்த டாக்டர் ‘ஐயா’ இவ்வாறு ‘கோடிக்கணக்கான’ வன்னிய மக்களின் ‘குலதெய்வ’மாக்கப்பட்டு விட்டார்.

நக்சல் வேட்டை என்று வெளிப்படையாக அரசு நடத்திய படுகொலைகள் குறித்து அனைவரும் அறிந்துள்ளோம். ஆனால் கம்யூனிச எதிர்ப்பு நடவடிக்கை என்பது வெறும் மனித வேட்டை மட்டுமல்ல, அது தத்துவ அரசியல் அமைப்பு பணி என்பதையும் உள்ளடக்கியது. அதனை அரசு தீவிரமாக செய்து வந்தது என்பதே நாம் இன்றுவரை கவனத்தில் கொள்ளாத விசயமாகும்.

கம்யூனிச எதிர்ப்பு தத்துவ – அரசியல் பணியில் இந்திய அமெரிக்கக் கூட்டும், அதில் ஃபோர்டு பவுண்டேசனின் பாத்திரமும், இவ்வாறான அரசின் நடவடிக்கைகளுக்கு அடியாள் சேவகம் புரிந்த இந்திய அளவிலான குள்ளநரிகளின் பட்டியலும் நாம், நமது முந்தைய கட்டுரையான “மக்கள் தலித் இயக்கங்களும்-ஃபோர்டு பவுண்டேசன் தலித் இயக்கங்களும்” என்ற கட்டுரையில் விளக்கியிருந்தோம். இப்படி அரசின் அடியாள் படைகளில் ஒரு பிரிவு தான் அ.மார்க்ஸ் குழு என்பதையும் உணர்த்தியிருந்தோம்.

இந்த அ.மார்க்ஸ் குழுவினர்தான் தமிழ்நாட்டில் குறிப்பாக வட தமிழ்நாட்டில் நக்சல்பாரி இயக்கங்களை ஒழிப்பதற்கான அரசின் அடியாள் பணியில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள். முதலில் இவர்கள் வர்க்கப் போராட்டம், வர்க்க ஒற்றுமை, வர்க்க அரசியல் ஆகியவற்றின் மீது அவநம்பிக்கையை விதைத்தார்கள். சாதிகளுக்கிடையில் இணக்கம் சாத்தியமில்லை என்று கூச்சலிட்டனர். சாதி என்கிற அடையாளத்தைப் பாதுகாத்தனர். சாதி அடையாள அரசியலைத் திணித்தனர். நக்சல்பாரி அமைப்புகள் கட்டி வைத்திருந்த மக்கள் ஒற்றுமையை சீர்குலைத்தனர். அடையாள அரசியலின் கீழ் மக்களே பிளவுபடுங்கள் என மூலைக்கு மூலை முழங்கினர்.

அதன் தொடர்ச்சியாக நக்சல்பாரி இயக்கங்களில் அணிதிரண்டு வந்த வன்னிய மக்களை திசை திருப்ப பாட்டாளி மக்கள் கட்சியைப் பயன்படுத்தினர். தாழ்த்தப்பட்ட மக்களை திசைதிருப்ப இவர்களுக்கு அம்பேத்கர் எனும் அடையாளம் தேவைப்பட்டது. அது போலவே வன்னிய உழைக்கும் மக்களை – நீண்ட கால கம்யூனிச பாரம்பரியமுடையவர்களை திசை திருப்ப காரல்மார்க்சும், கூடவே பெரியாரும் தேவைப்பட்டனர்.

அதே நேரத்தில் இரண்டு மக்கள் பிரிவினரிடையிலும் நேரெதிரான இரண்டு அரசியல் முழக்கங்களை முன்வைத்தனர். தாழ்த்தப்பட்ட மக்களிடம் “அடையாள அரசியலின் கீழ் மக்களே பிளவுபடுங்கள்” என முழங்கினர். வன்னிய மக்களிடம் “ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்” எனப் பசப்பினர்.

அப்பட்டமான இந்த அரசியல் அயோக்கியத்தனத்தைத்தான் இன்றுவரை இயக்கங்கள் புரிந்து கொள்ளவில்லை. தங்களுக்கு எதிராக திட்டமிடப்பட்டு பாமக வளர்த்து விடப்படுகிறது என்று புரியாத இயக்கங்கள், குறிப்பாக மக்கள் யுத்தக் கட்சியின் RYL, பாமகவோடு சேர்ந்து தொடர் கூட்டு இயக்கங்களை மேற்கொண்டது. புரட்சிகர இயக்கங்களின் பலவீனத்தைப் புரிந்துகொண்ட பின்நவீனத்துவவாதிகள் ‘பகையாளி குடியை உறவாடிக் கெடு’ எனும் பார்ப்பன சூழ்ச்சியோடு கூட இருந்தே குழி பறித்தனர்.

ஆக அரசின் நோக்கம் நிறைவேறியது. அதுவரை இருந்த தாழ்த்தப்பட்டோர் மற்றும் வன்னிய உழைக்கும் மக்களுக்கிடையிலான ஒற்றுமை தகர்க்கப்பட்டது. அவர்களின் ஒற்றுமையை நிறுவிய பொதுவுடமை இயக்கங்கள் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டன..

மக்களுக்கான போலி இயக்கங்களாக பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் நிறுவப்பட்டுவிட்டன. இன்றுவரை புரட்சிகர இயக்கங்கள் தலை தூக்க முடியாமல் செய்யப்பட்டுவிட்டது. சி.பி.ஐ, சி.பிஎம் கூட பெருமளவு பலவீனப்படுத்தப் பட்டுவிட்டன.

பா.ம.க.வின் பசுமைத் தாயகம்

அரசியல் கட்சிகள் டிரஸ்டுகள் வைத்து உள்நாடு, வெளிநாட்டிலிருந்து பணம் பெறுகின்றன. கட்சி உறுப்பினர்கள் சிலர் என்.ஜி.ஓ நடத்தி பணம் பெறுகின்றனர். வெளிநாட்டு அரசுகள் மற்றும் உளவுத்துறைகளோடு சில கட்சிகள் தொடர்பு கொண்டுள்ளதாக குற்றங்கள் சாட்டப்படுகின்றன. ஆனால் ஒரு என்.ஜி.ஓ வைத்து அப்பட்டமாக கட்சிக்கு இணையான முக்கியத்துவத்தை அதற்குத் தருவது பா.ம.க ஒன்றுதான். எந்த இடத்தில் பா.ம.க முடிந்து பசுமைத் தாயகம் தொடங்குகிறது என்பதே சந்தேகத்திற்கிடமாக உள்ளது.

உதாரணத்திற்கு டாக்டர் ‘ஐயா’வின் சிகரெட் - மது எதிர்ப்பு. இது பசுமைத் தாயகம் என்.ஜி.ஓ.வின் ஒரு புராஜெக்ட். என்.ஜி.ஓக்களின் புராஜெக்டுகள் எப்போதும் இலவசமாகச் செய்யப்படுவதில்லை. ‘ஐயா’ குடும்பத்தின் பசுமைத் தாயகம், பவுண்டேஷன் வோர்ல்ட் லங் பவுண்டேஷன் (World Lung Foundation - WLF) என்ற புகையிலைக்கு எதிரான அமைப்பிலிருந்து நிதியுதவி பெறுகிறது. முக்கியமாக சென்னையில் புகைப்பழக்கத்தை ஒழிக்க இவ்வமைப்பு பசுமைத் தாயகம் பவுண்டேஷனுக்கு நிதியுதவி அளித்து வருவதாக WLF வெப்சைட் கூறுகிறது. இந்த WLF, அமெரிக்காவின் 7வது பெரும் பணக்காரரும், நியூயார்க்கின் மேயராக இருந்தவருமான மைக்கேல் பொளூம்பெர்க்கின் தொண்டு நிறுவனத்திலிருந்தும், பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனிலிருந்தும் நிதியுதவி பெறுகிறது. இத்தனைக்கும் இளைய ‘ஐயா’ மத்திய சுகாதார அமைச்சராக எல்லாம் இருந்தார். மக்கள் நலத்தைப் பேண அரசு அமைப்புகளை வலிமைப்படுத்துவதை விட்டுவிட்டு சந்தேகத்திற்குரிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பின் ஓடுவது இந்தியர்களின், தமிழர்களின், வன்னியர்களின் நலனுக்கு உகந்ததா? நாட்டின் ஜனநாயக அமைப்புகளுக்கு சட்டதிட்டங்களுக்கு வெளியே இயங்கும் இத்தகைய என்.ஜி.ஓக்களை ஊட்டி வளர்ப்பது நல்லதா என்று ‘ஐயா’தான் விளக்க வேண்டும்! இத்தகைய தொடர்புகள் உள்ளவர்கள் தனியார்மயத்திற்கு எத்தகைய சேவை செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள் என்பதை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம் அல்லவா?

ரஜினி, பாபா படம் வெளிவரும்போது ஒரு கூட்டத்தில் வீரப்பனை அழிக்க வேண்டும் என்று பேசினார். படம் வெளிவந்ததும் பா.ம.க பொங்கியெழுந்தது. சூப்பர் ஸ்டார் பின்வாங்கி ஒளிந்து கொண்டார். தமிழுணர்வாளர்கள் வீரப்பனுக்காகத்தான் ‘ஐயா’ ரஜினியை இந்தப் பாடுபடுத்துகிறார் என்று நினைத்து புளகாங்கிதமடைந்தனர். படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இருப்பதால்தான் தமது கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றார் ‘ஐயா’. ‘ஐயா’ பொய் சொல்கிறார் என்று உணர்வாளர்கள் நினைத்துக் கொண்டனர். ‘ஐயா’ மறுக்கவில்லை. அதேவாரம் மது ஒழிப்புப் பேரணி நடத்தினார். உண்மையான ‘ஐயா’, வீரப்பன் பங்காளி ‘ஐயா’தான் என்று சொல்லப்பட்டது.

மக்களுக்கு வீரப்பன்; நிதியுதவியாளர்களுக்கு சிகரெட், மது எதிர்ப்பு. ‘ஐயா’வின் திறமையே திறமை.

‘ஐயா’ வீரவேசத்துடன் தாமிரபரணி, கோகோகோலா பேக்டரியை எதிர்த்தார். பசுமைத் தாயகம் World Water Forum நிகழ்வுகளில் கலந்து கொண்டது. World Water Forum கோகோகோலா நிறுவனத்திடமிருந்து நிதியுதவி பெறுகிறது என்பது குறித்து ‘ஐயா’விடம் யாரும் கேட்கவுமில்லை; ‘ஐயா’ சொல்லவுமில்லை.

பசுமைத் தாயகத்தின் இணையதளம் முற்றிலும் ஆங்கிலத்தில் உள்ளது. ’ஐயா’வின் தமிழ் பற்று..?அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் பார்க்க வேண்டியவர்கள் எப்படி இணைய தளத்தைப் பார்ப்பார்கள்? அப்படி இணைய தளத்தை யார் பார்க்கிறார்கள்? அதிலென்ன சந்தேகம் தமிழ் தெரியாத, ஆங்கிலம் தெரிந்தவர்கள்தான்!

பாமகவின் பிறப்பே பின்நவீனத்துவவாதிகளின், ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் உதவியோடு என்பதைப் புரிந்து கொண்டால் இந்த விபரீதமான புராஜெக்ட் அரசியலில் நமக்கு ஆச்சரியம் ஏற்படாது.

தமிழக அரசியலில் பா.ம.கவின் சிறப்பிடம்

பார்வார்டு பிளாக், கொங்கு முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், புதிய தமிழகம், முதலியார், பிள்ளைமார் கட்சிகள் எல்லாம் அடைந்த கதியைப் பாருங்கள்! ஆளும் வர்க்கங்களும், பெரிய அரசியல் கட்சிகளும் இத்தகைய சாதிவாரி, பகுதிவாரி அமைப்புகளை வரவேற்பதில்லை. ஒரு பூட்டுக்கு பல சாவிகள் இருப்பதை அவை விரும்பாததே காரணம்.

ஆனால் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் ஆளும் வர்க்க எடுபிடிகளாக தங்களை நிலை நிறுத்திக் கொண்டுள்ளன. புதிய தமிழகமும், கொங்கு முன்னேற்றக் கழகமும் சந்தித்ததைப் போன்ற கட்சி அமைப்பின் மீதான தாக்குதல்களை இக் கட்சிகள் சந்திக்கவில்லை. காரணம் இந்தக் கட்சிகள் பலவீனமடைந்தால் தாலாட்டித் தூங்கவைக்கப்பட்ட கம்யூனிச சாத்தான் திரும்ப எழுந்துவிடலாம் என்ற பயம் ஆளும் வர்க்கங்களுக்கு இருப்பதுதான்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனைகள்

முற்போக்கு முகமூடி போட்டுக் கொண்டே இந்தக் கட்சி, தான் சார்ந்துள்ளதாகக் கூறும் வன்னிய மக்களுக்கு பேரழிவுகளை விளைவித்தது. பாமக வளர்ச்சி பெற்ற இந்த இருபதாண்டு காலத்தில்தான் விவசாயம் கடும் வீழ்ச்சி கண்டது. வன்னிய விவசாயிகள் வாழ்விழந்து குழி தோண்டவும், கட்டடம் கட்டவும் பெங்களூருக்கும், சென்னைக்கும், மும்பைக்கும், கோவைக்கும் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்தனர்; பெருநகர பிளாட்பாரங்களில் தஞ்சமடைந்தனர். புறக்கணிக்கப்பட்ட விவசாயத்திற்கு எதிராக விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு கோடி வன்னிய மக்கள் கூட்டம் நடத்தப்படவில்லை. பதிலாக என்.ஜி.ஓ. அமைத்து ஏகாதிபத்திய சேவை செய்கிறது பாமக.

a_marx_thiruma_nallakannu_6

பெரியார், அம்பேத்கார் முகமூடி போட்டுக் கொண்டே பண்பாட்டு மட்டத்தில் வன்னிய சமூகத்தை அதல பாதாளத்தில் தள்ளியது பாமக. கிராமங்களில் பிற்போக்கு நிலப்பிரபுத்துவ சாதீய உறவுகளை பலப்படுத்தி முற்போக்கு இயக்கங்கள் தலைகாட்டமுடியாமல் செய்தது. பல்லாண்டுகள் முயன்று பெற்ற பெண்ணுரிமைகளை, பெண் சொத்துரிமையை, விருப்பப்பட்ட வாழ்க்கைத் துணையை அடையும் உரிமையை மறுக்கும் அளவிற்கு பண்பாட்டு மட்டத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. போர்க்குணங் கொண்ட வன்னிய ஆண்கள் மகள்களுக்கும், சகோதரிகளுக்கும், மனைவிகளுக்கும் காவல்காரர்களாக மாறிப் போயினர்.

திருமாவளவனோடு கைகோர்த்துக் கொண்டே வடதமிழகத்தின் இருபெரும் சமூகங்களையும் அடியோடு பிளக்கும் நயவஞ்சகத்தைச் செய்தது. தலித்துகளுக்கு எதிரான கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. தலித்துகளின் இடப் பெயர்வால் வன்னிய சமூகமே அதற்குப் பலியுமானது. தற்போது மற்ற ஆதிக்க சாதி வெறியர்களை வன்னியர்களுக்கு நண்பர்களாக்குவதாக பம்மாத்து காட்டி வருகிறது.

பின்னவீனத்துவம்-பாமக-புரட்சிகர இயக்கங்கள்

பின்நவீனத்துவம் என்பது தனிநபர் சிக்கலல்ல. அது புரட்சிகர இயக்கங்களை எதிர்க்கும் கோட்பாட்டுச் சிக்கல். அதே போல் பின்நவீனத்துவாதிகளின் செயல்பாடுகள் எதுவும் நேர்மையானதல்ல. அது பொதுவுடமை இயக்கங்களுக்கு எதிராக திட்டமிட்டு செயல்படுத்தப்படும் - அரசு மற்றும் ஏகாதிபத்திய ஆதரவு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் நடவடிக்கையாகும். இதனை கண்ணும் கருத்துமாக செயல்படுத்த வேண்டிய தேவை அரசுக்கு இருக்கிறது. ஆகவே அரசு அதற்கேற்ற வலைப்பின்னலோடு தனது கடமையை நிறைவேற்றி வருகிறது.

அரசின் நடவடிக்கையில் பின்நவீனத்துவவாதிகள் நேரடியாகவும் பங்கேற்கலாம். அல்லது ஏதோ ஒரு கண்ணியின் மூலம் இயக்கப்படலாம். ஆனால் எந்த விதத்தில் பங்கேற்றாலும் அவர்களின் செயல்பாட்டின் விளைவுகள் என்னவென்று அவர்களுக்கு நன்கு தெரியும். ஆகவே அறியாமையால் செய்கிற நிகழ்வாக அதைக் கருதவே முடியாது.

கெடுவாய்ப்பாக சில இயக்கங்கள் இன்றுவரை பின்நவீனத்துவவாதிகளை மாற்றுக் கருத்துக் கொண்ட ஜனநாயக சக்திகளாகவே கருதுகின்றன. இதற்குக் காரணம் இயக்கங்களின் அரசு குறித்த கொள்கை பலவீனமேயாகும். அரசு என்பது ஓர் ஒடுக்குமுறைக் கருவி என எல்லா இயக்கங்களும் ஒப்புக்கொள்ளும். இதன்பொருள் துப்பாக்கி உள்ளிட்ட கருவிகளின் செயல்பாடு என்றே கொள்ளப்படுகிறது. ஆனால் அரசு துப்பாக்கியின் மூலம் ஒடுக்குவதற்கு முன்பு மக்களை கருத்தியல் அடிப்படையில் அணியப்படுத்தி வைத்திருக்கிறது என்பதை இயக்கங்கள் போதுமான அழுத்தத்தோடு பார்ப்பதில்லை. ஆதலால்தான் தத்தவார்த்த தளத்தில் அரசின் செயல்பாடுகளும், அதற்கான அரசின் தத்துவ அடியாட்களும் குறித்து கவலைப்படுவதில்லை. அந்த வகையில் பின்நவீனத்துவம் குறித்தும், அதன் கேடுகள் குறித்தும் இயக்கங்கள் போதுமான அளவு சிந்திக்கவில்லை.

அரசு குறித்த கோட்பாடு புரிதலின்மைதான் இயக்கங்களை இன்றுவரை சீரழித்துக் கொண்டிருக்கிறது. S.O.C, மக்கள் யுத்தம் (போல்சுவிக்) போன்ற அமைப்புகள் பின்நவீனத்துவாதிகளை புறக்கணித்தே வருகின்றன. இருந்த போதிலும் தேவையான உக்கிரத்துடன் இந்த தத்துவார்த்தப் போர் நடத்தப் படவில்லை. போதுமான ஆய்வுகளோ வெளியீடுகளோ இல்லை. தம்மை பாதுகாத்துக் கொள்ளும் ஓர் எச்சரிக்கை உணர்வுதான் இவ்வமைப்புகளிடம் உள்ளது. ம.க.இ.க.வின் தற்போதைய வெளியீடுகளில் இப்பிரச்சினை குறித்து பேசப்படுவது வரவேற்கத்தக்கது. பின்னவீனத்துவ வாதிகள் - பாமக தொடர்பை முதலில் அம்பலப்படுத்தியது ம.க.இ.க.தான்.

ஆனால் இதுகுறித்து துளியளவும் கவலைப்படாமல் தம்மை மேலும் மேலும் சிக்கலுக்குள்ளாக்கிக் கொண்ட அமைப்பு மக்கள் யுத்தக்குழுதான். இது மாவோயிஸ்ட் கட்சியாக மாறிய பின்னரும் தொடரவே செய்தது. தங்களை எந்த பின்நவீனத்துவவாதிகள் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தினாரோ, எதன் மூலம் பலவீனமடையச் செய்தனரோ, எதன் ஊடாக இரவீந்திரன் - சிவா – நவீன்பிரசாத் என ஒப்பில்லா தோழர்களை பலிகொடுக்க நேர்ந்ததோ, அந்த பின்நவீனத்துவவாதிகளோடு இவ்வமைப்பு தோழமை பாராட்டியது. பலியான தோழர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளில் இவர்களை பங்கேற்க வைத்து கௌரவப்படுத்தியது. ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் முறைகளை உள்ளும் புறமும் நன்கறிந்த தோழர் கோபட் காந்தை(அரவிந்த்) போன்ற மாபெரும் அறிவுஜீவிகளைத் தனது மையக் குழுவில் கொண்டிருந்த மாவோயிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரிவு இவ்வாறு நடந்து கொள்வது வேதனையானது.

மாவோயிஸ்ட் தோழர்கள் சிந்திய இரத்தத்தில்தான் பின்நவீனத்துவவாதிகள் தங்களது கறைகளைக் கழுவினார்கள். மாவோயிஸ்ட் அமைப்பின் ஆசியில்தான் பின்நவீனத்துவவாதிகள் தங்களை முற்போக்காளர்களாக காட்டிக் கொண்டார்கள். மாவோயிஸ்டின் அருள் பெற்றவர்களை பிற இயக்கங்கள் தள்ளிவிடமுடியுமா? வேறு வழியில்லாமல் எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு அவர்களை அரவணைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இங்கு ஒரு புரட்சிகர கட்சி உருவாகி விடக்கூடாதென அரசு விழிப்புடன் இருப்பது குறித்தோ, அதை முளையிலேயே அழித்துவிட அரசு துடிப்பது குறித்தோ, அரசின் அடியாளாக பின்நவீனத்துவவாதிகள் செயல்பட்டிருப்பது குறித்தோ இந்த இயக்கங்களுக்குக் கவலையில்லை.

ஆதலால்தான் சாதிவெறிக் கட்சியான பாமகவை எதிர்ப்பதற்கு பாமகவை வளர்த்துவிட்ட சதிகாரர்களையே இயக்கங்கள் மேடையேற்றுகின்றன. இவர்கள் எப்படி பா.ம.கவின் தோற்றம், பின்னணி குறித்து நேர்மையான பார்வையை முன்வைப்பார்கள்? பாமகவிற்கான உண்மையான எதிர்ப்பு என்பது அதன் நதிமூலத்தைத் தேடிப் போவதும் அம்பலப்படுத்துவதும்தான்.

'வன்னியர்கள் நக்சலைட்டுகள் ஆகாமல் நாங்கள்தான் தடுத்து நிறுத்தினோம்' என்று காடுவெட்டி குரு சித்திரா பவுர்ணமி விழாவில் பேசினார். அற்புதமான உண்மை. அன்று பொதுவுடமைவாதிகளை ஒழித்துக்கட்ட அவர்களைவிட முற்போக்கு வேடம் போட வேண்டி வந்தது; போட்டார்கள். இன்று அவர்கள் திரும்பவும் தலைதூக்காமல் தடுக்க தங்கள் சாதியைச் சுற்றி ஒரு கோட்டை கட்ட ஜாதிக் காவலர்கள் வேடம் போடுகிறார்கள். முற்போக்காளர்களின் நட்பைப் பேண (அப்போதுதானே முதுகில் குத்த முடியும்) பின்நவீனத்துவவாதிகள் ‘பாமக எதிர்ப்பு’ வேடம் போடுகிறார்கள். யார் வேண்டுமானாலும் என்ன வேடம் வேண்டுமானாலும் போடுவார்கள் – நாம் கண்களை மூடிக் கொண்டிருந்தால்!

- குணா, தேசிய முன்னணி இதழ் குழு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

29 comments

29
இமயவரம்பன் நெடுஞ்சேரலாத
//*"எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த கம்யூனிஸ்டுகளை வட தமிழகத்திலிருந்து ஒழித்துக் கட்டும் நடவடிக்கையின் இரண்டாவது பாகம் தான் பா.ம. க. மூன்றாவது பாகம் விடுதலைச் சிறுத்தைகள். இதற்கான அரசியல் தத்துவார்த்த அடிப்படையை வழங்கியவர்கள் பின்நவீனத்துவவாதிகள்*"//

தங்களின் தத்துவார்த்த தோல்வியை ஒப்புக்கொள்ள மனமில்லாதவர்களின் சமூகவியல் அறிவற்ற கருத்து இது.
சமூக வளர்ச்சியில் ஆளுமை செய்யப்படும் காரணிகளின் அறிவியல் அடிப்படையிலான விதியால் ஒரு இயக்கதின் இருப்பும் மறுப்பு தீர்மானிக்கப்படுகின்றன.
சமூக அரசியல் இயக்கங்கள் இல்லாவிட்டாலும் சமூகவளர்ச்சி இருக்கும். சமூக வளர்ச்சியை துரிதப்படுத்தும் வேலையைத்தான் சமூக அரசியல் இயக்கங்கள் செய்கின்றன.
சமூக வளர்ச்சியில் உண்மையான தேவை இருந்தால் மட்டுமே ஈடுபடும் இயக்கத்திற்கும் வளர்ச்சி இருக்கும். சமூகவளர்ச்சியின் தேவைக்கு அல்லது பிரச்சனைக்கு சரியான தீர்வை செயல்பாட்டின் மூலம் நடைமுறைப்படுத்தும் இயக்கங்கள் மட்டுமே வளர்கின்றன. தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடைவெளி இருப்பின் அவை தேக்கமடைகின்றன அல்லது அழிந்துபோகின்றன.

இயக்கத் தேவையை சமூகத்தின் தேவைதான் முடிவு செய்கிறது. எதிர்காலத்தில் அதன் தேவை இல்லாவிட்டால் அவற்றின் வளர்ச்சி தடைப்பட்டு உதிர்ந்து விடும் என்பது உறுதி.
தங்களின் தவறான தத்துவ புரிதலால் விளைந்த தோல்விக்கு மற்ற சாதிய, பின் நவீன வாதிகள்தான் காரணம் என்று கூறுவது மட்டும் நடுநிலையான மறுஆய்வா?
சரியான தத்துவம் என்றும் பிழை வெளியே உள்ளது என பார்ப்பது அறிவிழந்ததையே காட்டுகிறது.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாத
வர்க்கப்புரட்சி நடத்த தூய வர்க்கங்கள் தேவைப்படுகின்றன. இதனால் இங்குள்ள மார்க்சிய அறிவு ஜீவிகள் தங்கள் கற்பனைகளில் வர்க்கங்களை உருவாக்கி கொண்டு அல்லது எதார்த்தத்தை கற்பனை கோடுகளால் பிரித்துக்கொண்டு நிழல் யுத்தம் புரிய நெடுங்காலமாக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

பன்னாட்டு ஏகாதிபத்தியத்தை எதிர்க்க திராணியற்ற, முதுகெலும்பற்ற சாதிய தரகு முதலாளித்துவம் இருப்பதாய் ஏற்றுக்கொள்ளும் புரட்சிகர சக்திகள், ஏனோ புரட்சிகர பண்புகளற்ற சாதிய தொழிலாளர் வர்க்கம் இருப்பதை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.


இயங்கியல் கோட்பாட்டை விதியாக பயன்படுத்தாமல் வர்க்க உருவாக்கத்திற்கு முன்பாகவே வர்க்கப் புரட்சி நடத்தி பின்பு சாதிய விடுதலைப்பெற நினைக்கிறார்கள். இது தனக்குப்பின் வர வேண்டிய தன் வாலையே தனது வழிகாட்டியாக தொடர்ந்து போய் சுற்றிக் கொண்டிருக்கும் பூனையை போல் தொடக்கப் புள்ளியிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தலித் இயக்கங்கள் அந்த மக்களின் தற்காப்பு கவசங்கள். தன்னை சாதிபெயரை வைத்து உணர்வு ரீதியாக காயப்படுத்தும், அலட்சியப்படுத்தும், பலவீனப்படுத்தும், அவமானப்படுத்தும் , மெல்லியதாய் ஏளனப்படுத்தும், நகரத்தில் வாடகை வீடு கிடைக்க வேறு சாதி என பொய் சொல்ல வைக்கும் ஒரு இழிவை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்ள, பகிர்ந்து கொள்ள, எதிர்கொள்ள உதவுபவை தலித் இயக்கங்கள் அன்றி புரட்கர சக்திகளின் வர்க்க வார்த்தைகளல்ல.
ஒரு இயக்கம் தலித்தை எப்படி பார்க்கிறது என்பதில் பிரச்சனையில்லை, சமூகம் எப்படி பார்க்கிறது என்பதில்தான் தலித் ஒருங்கிணைப்பின் அவசியத்தை புரிந்துக்கொள்ள முடியும்.
தலித்தை உழைக்கும் வர்க்கத்தின் ஒரு பிரிவினர் என்று சுருக்கி அதன் மூலம் தன் அரை ஆண்டான் அடிமை வரலாற்றை மறைத்து , தனக்கும் மற்ற பிரிவினரின் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையே உள்ள பண்பியல் வேறுப்பாட்டை மூடிமறைக்கும் புரட்சிகர இயக்கங்களின் வர்க்க வலையால் தலித்களை பழைய நிலக்கிழமை நீடிக்கிறவரையில் வென்றெடுக்க முடியாது.

தன் இரண்டாயிரம் ஆண்டு அடிமைத்தனத்தை மறுத்துவிட்டு இன்றும் தன்னை ஒடுக்கும் ஒரு சாதி ஆதிக்க கூட்டத்தை மறந்துவிட்டு , ஏகாதிபத்தியத்தியத்திற்கு எதிராக துப்பாக்கி தூக்க அரைகூவல் விடுக்கும் ஒரு புரட்சிகர இயக்கத்தின் பின்னால் தலித் வருவான் என எதிர்பார்ப்பது புரட்சிகர சக்திகளின் நம்பிக்கையாக மட்டுமே இருக்கக்கூடும். இரண்டாயிரம் ஆண்டு காலம் அடிமைத்தனத்தை தந்த இந்த தேசத்தில் தன் விடுதலைப்பற்றி பேசாமல் அவனது சாதிய கொடுமைக்கு காரணமான நிலக்கிழமை விவசாய நலன்களுக்கான தேசிய உணர்வை அவன் கட்டாயம் பெற்றே தீர வேண்டும் என் புரட்சிகர இயக்கங்கள் எதிர்பார்க்கின்றன.
இங்கே விவசாய நலனுக்கும், தலித் விடுதலைக்கும் போராடுவதின் மூலம் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற நிலையில் புரட்சிகர சக்திகள் மாட்டிக்கொண்டன.

முதாலளித்துவ ஆலையில் தலித்துகளுக்கு முன்பிருந்த நிலக்கிழமையை விட ஆடை சுதந்திரம், சுய மரியாதை, வருவாய், பேச்சுரிமை, திறமைக்கேற்ற பதவி உயர்வு போன்ற முதாலளித்துவ சுதந்திரம் கிடைத்து விடுகின்றன.

எனவே, நேற்றை விட இன்று வளர்ச்சி போக்கில் மேல் நிலையில் நடந்து கொண்டிருக்கும் அவனிடம் ஆயுதம் ஏந்து, புரட்சி செய் என்றால் அவன் எப்படி வருவான்?

நிலக்கிழமையிலிருந்து முதலாளித்துவத்துக்கு வரும் இடப்பெயர்ச்சி காலத்தில் தலித்திற்கு புரட்சிகர இயக்கங்களின் தேவைக்கான அடிப்படைகள் ஏதுமில்லை, இந்த இடப்பெயர்ச்சி பகுதியில்தான் குறைசொல்ல முடியாத நேர்மையுடைய கம்யூனிஸ்ட்களை விட்டுவிட்டு ஆயிரம் பிழைப்பு வாதங்களை கொண்டிருந்தாலும் தலித் இயக்கங்கள் வளர்ச்சி பெறுகின்றன. ஏனெனில் சமூகத் தேவைத்தான் இயக்கங்களின் இருப்பையும், மறுப்பையும் முடிவு செய்கின்றன. நேர்மையாளர்கள் என்பதால் அவர்களின் சிறந்த தத்துவத்தை அது தேவையில்லாத சமூகத்தில் மக்கள் அதை ஏற்க வேண்டிய அவசியமில்லை.

இந்த காரணம்தான் நண்பர்களே! தங்களின் கொள்கைக்காகவே வாழும் நேர்மையாளர்களை விட்டுவிட்டு எவ்வளவு பிழைப்புவாதிகளாக இருந்தாலும் மக்கள் அவர்களின் பின்னால் இன்று நிற்பதற்கான உண்மைக் காரணம்.

திருமாவளவன், கிருஷ்ணசாமி, அதியமான் வருக்கைக்கு பின் சமூகத்தில் சாதிய ஒடுக்குமுறை குறைந்திருக்கிறதா இல்லையா? இந்த தலித் இயக்கங்களின் தத்துவம்தான் கொள்கைதான் என்ன?
அது வரலாற்று பொருள் முதல்வாதமோ, இயக்கவியல் பொருள்முதல் வாதமோ பெரிய உற்பத்தி முறை உற்பத்தி உறவு சார்ந்த விதிகளோ , சோசலிசமோ, கம்யூனிசமோ இல்லை.

ஒரே வரியில் சொல்வதென்றால் “அடித்தால் திருப்பி அடிப்போம்”. அவ்வளவே.
ஆனால் அதற்கான தேவை சமூகத்தில் இருக்கிறதா இல்லையா?
அடித்தால் கேட்க நாதியில்லாத சமூகத்திற்கு இந்த தத்துவம் தேவையாக இருந்தது, இருக்கிறது.

இதுதான் விடுதலை சிறுத்தைகள் உட்பட எல்லா தலித் இயக்க வளர்ச்சிக்கும் அடிப்படை.
கம்யூனிஸ்ட்களின் கைகளில் இருப்பது எதிர்காலத்திற்கான தத்துவம். நிகழ்காலத்தேவையல்ல.

தேவைக்காக தத்துவத்தை மாற்றாமல் தத்துவத்திற்காக மக்களை மாற்ற முயற்சிக்கிறார்கள் கம்யூனிஸ்ட்கள்.

இதுதான் எல்லா கம்யூனிச புரட்சிகர அமைப்புகளுக்குமான பின்னடைவிற்குக் காரணமேயன்றி சாதி இயக்கங்களோ பின்நவீனத்துவாதிகளோ அல்ல
முதலாளித்துவ வளர்ச்சியின் திகட்டு நிலையில் தலித்தும் அவன் சார்ந்த தொழிலாளர்களும் சுரண்டலுக்கு ஆளாக நேர்ந்து மற்ற சுரண்டலைவிட பொருளியல் சுரண்டல் பெரியதாக இருந்து, மற்ற உழைக்கும் பிரிவினரும் அவனை உழைக்கும் சக தோழனாக மட்டுமே பார்க்க நேர்ந்தால் அவன் மார்க்சியத்தை தேர்வு செய்யலாம்,
தலித்தின் உடலியல் ஒடுக்குமுறை விடுதலையில் பங்கேற்கும் தலித் இயக்கங்களின் சமூக பங்களிப்பை மறுத்துவிட்டு தலித்தின் பிரதிநிதியாக தங்களை காட்டிக்கொள்ள முயல்வது தலித்தை பயன்படுத்திக்கொள்ளும் நுண்ணியத் தந்திரமேயன்றி வேறென்ன?

தலித்திற்கு தெரியாதா தான் ஏன் அடிக்கப்படுகிறோம் என்று?

"சாதியின் பெயரால் அணிதிரள்வது எப்படி சாதியை ஒழிக்கும்' என்ற சொத்தை கருத்தை முன் வைப்பவர்கள் உண்மையில் சாதிய ஒழிப்பில் பல படிநிலைகள் இருப்பதையும் அதில் சாதிய கட்டமைப்பு தகர்ப்பு (சாதிய கொடுமையிலிருந்து விடுதலை) என்ற முதல்படி எவ்வளவு புரட்சிகரமானது என்பதையும் இரண்டாயிரம் ஆண்டு காலத்தில் இது கற்பனை கூட செய்யமுடியாத மாற்றம் (தலித்துக்கள் திருப்பி அடிப்பது)என்பதையும் அங்கீகரிக்க மறுக்கும் அறிவிலிகளே".
மேலும் வர்க்க வளர்ச்சியின் முதல் படியே இதுதான்.
வர்க்கப்புரட்சி மட்டுமே புரட்சி என்று நம்புகிறவர்கள் உண்மையில் சமூக வளர்ச்சியின் கடைசி படிக்கட்டை ஒரே தாவலில் ஏற முயற்சித்து, முயற்சித்து விழுபவர்கள். மாறாக இந்திய சமூகம் ஒவ்வொரு படிக்கட்டாய் ஏற ஆரம்பித்து இருக்கிறது. அதில் முதல் படி சாதி ஆதிக்க நிலக்கிழமை தகர்ப்பு. அதைத்தான் முதலாளித்துவமும், தலித் இயக்கங்களும் செய்கின்றன. இதில் எத்தனை படிகட்டுவரை தலித் இயக்கங்கள் தேவைப்படுவார்கள் என்பதை சமூக வளர்ச்சி விதிதான் தீர்மானிக்குமே அன்றி, புரட்சிகர இயக்கங்களின் விருப்பங்களோ கற்பனைகளோ அல்ல.

ஆயுதம் தாங்கிய வர்க்கப்புரட்சி பற்றி பேசுவதும் மற்ற எல்லா மாற்றத்தையும் சீர்த்திருத்தமாகவே கேவலமாக பேசுவதும், உண்மையில் “ஹீரோயிச மார்க்சியமாக” புரட்சிகர இயக்கங்களால் உருவாக்கப்படுகிறது.

மேலும் எல்லா சமூகத்தின் எந்தவொரு மாற்றத்தையும் வர்க்கப்புரட்சி மூலம் தான் செய்ய முடியும் என சொன்ன அந்த அறிவாளி யாரென அறிய விரும்புகிறேன்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
‘மார்க்சியம் தொழிலாளர் வர்க்கத்தின் தத்துவம்.'

உலகின் ஒடுக்கப்பட்ட எல்லா மக்களுக்கான தத்துவமல்ல!

மார்க்சியம், உலக முழுமைக்குமான ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலைக்காக பங்களிப்பை செய்திருந்தால் பெரியாரியமோ அம்பேத்காரியமோ இங்கே தேவைப்பட்டிருக்காது.

முதலாளித்துவ சுரண்டலையும், கொடுமைகளையும் விட அது வளராத நாடுகளில் உள்ள இன மற்றும் தேசிய இன, பண்ணை அடிமைகளின் மீதான கொடுமைகள் கொடூரமானவை.

இன்றைக்கும் இந்திய தொழிலாளர் நிலையை விட தமிழ் ஈழ தேசிய மக்களின் நிலை கொடுமையானது. தொழிலாளர்கள் விடுதலைப்பற்றி முழுமையாகவும் மற்ற ஒடுக்குமுறை பற்றி வெறும் பெயரளவிலும் பேசியதால் தான் நெல்சன் மண்டேலாவுக்கும், பிரபாகரனுக்கும் மார்க்சியம் தேவைப்படவில்லை.

இதுதான் இன்றைக்கும் கம்யூனிஸ்ட்களில் சிலரை ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர் நலன் பேணபடவேண்டுமென பேச வைக்கின்றன.

வர்க்கங்களாக வளராத , (தொழிலாளி, முதலாளி ) நிலபிரபுத்துவ பண்ணை அடிமை சமுதாயத்திலிருந்து முதலாளித்துவ சமூகமாக மாற்றி அமைக்கப்படாத சமூகத்தில் மார்க்சியம் தனது தற்போதைய எந்திரவடிவில் ஒரு செல்லாக்காசகவே உள்ளது.

அது வளராத குழந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருந்தாத பெரிய சட்டை .
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
புரட்சிகர சக்திகள், மார்க்சியத்தின் மீதான விமர்சனமோ மறு ஆய்வோ அவர்களின் வர்க்க விடுதலை என்ற இலட்சியத்திற்கு எதிரானதாகவும் துரோகமானதாகவும் எண்ணுகிறார்கள். வர்க்க விடுதலைக்காக மார்க்ஸ்- ஏங்கெல்ஸ்- லெனினும்- மாவோவும் போராடிவிட்டதாலேயே அவர்களின் எல்லா சிந்தனைகளும் மறு பரிசீலனையின்றி, மறு ஆய்வின்றி ஏற்கப்படுகின்றன.
உலகம் முழுமைக்கும் பொருந்துமென சாதிக்கப்படுகின்றன.
இந்த பார்வைதான் முதலாளித்துவம் ஒரு கட்டம் வரை புரட்சிகர பங்காற்றும். பின் அழுகி போகும் என்ற இயங்கியல் கோட்பாட்டின் சாரத்தை மறுக்க வைத்தது.

மார்க்சிய - லெனினிய , மாவோ சிந்தனையை விமர்சிக்கும் எவரும் CIA ஏஜென்டாகவோ, NGOஅமைப்பாகவோ, பின் நவீனத்துவவாதியாகவோ, புது இடது சிந்தனையாளராகவோ , ஏகாதிபத்திய கைகூலியாகவோத்தான் இருக்க முடியும் என தன் அமைப்புகளுக்கு பரப்புரை செய்வதன் மூலம் புரட்சிகர இயக்கங்கள் சேனைக்கட்டிய குதிரை சிந்தனைகளையும் , யதார்த்த சமூக நிலையில் இருந்து வரும் புதிய சிந்தனைகளின் புறக்கணிப்பையும் உருவாக்குகின்றன.

இது சமூக அறிவியலை அறிவியல் படுத்தாமல் ஒரு மதமாக்கும் முயற்சியேயன்றி வேறன்ன?
“எதையும் சந்தேகி” என்ற மார்க்சின் மார்க்சியத்தை மறு ஆய்வு செய்யும் மகா பாவத்தை மட்டும் இவர்கள் செய்ய முன்வருவதில்லை.

புனித கம்யூனிச மதத்தின் இறைத்தூதர் மார்க்ஸ் வழங்கிய புனித வேதமல்ல மார்க்சியம். மார்க்சின் அறிவியல் படுத்தும் முயற்சி அது. அதற்கும் வளர்ச்சி உண்டு.

இதில் மார்சியத்தை முழுமையாக ஏற்றும் கொள்ளும் சிலர் அதன் எந்திரத்தனத்தை மட்டும் எதிர்த்து இந்திய சமூகத்திற்கு ஏற்றவாறு மீண்டும் பொருத்த முயற்சி செய்கிறார்கள். இவர்களும் ‘எதையும் சந்தேகி' என்ற மார்க்சின் மார்க்சியத்தை மறு ஆய்வு செய்யும் பாவக்காரியத்தை செய்ய முன் வருவதில்லை.

மார்க்சின் அறிவியல் கண்டுபிடிப்புகளையும், அவரின் நம்பிக்கைகளையும், ஆசைகளையும் பிரித்துப்பார்க்க நம்மால் முடியும் என்று கற்பனைக்கூட செய்ய துணிவில்லாதவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

நவீன அறிவியலின் வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் மார்க்சியம் தனது தோராய கோட்பாட்டளவில் பச்சிளம் குழந்தையாகவே உள்ளது.
இப்படி செல்லுவது அதனை சிறுமைப்படுத்தும் நோக்கத்தில் அல்ல. இன்றைய நவீன அறிவியல் வளர்ச்சி மிக பிரமாண்டமாக வளர்ந்துள்ளது என்பதையும் அதன் அளவுக்கு சமூக அறிவியல் வளர்க்கப்பட வேண்டும் என்பதுமே இதன் நோக்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவர்கள் புரட்சி செய்து வெட்டி முறிக்கும் வரையிலும், மேலும் ஒரு 40 ஆண்டுகள் முன்னணிகளை வென்றெடுக்க உட்கார்ந்து இருக்கும் வரையிலும், தலித்தானவன் சாதியக் கொடுமையிலேயே சிக்கித்தவிக்க வேண்டுமா? இதுதான் தலித் இயக்க எழுச்சிக்கு காரணம்.
ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை மட்டும் தான் சிறந்தது என்பதை யார் தீர்மானப்பது? எது தீர்மானிக்கிறது?

நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்.
வாய் நாடி வாய்ப்பச் செயல்- என்றான் வள்ளூவன்.

சமூகத்திற்கும் இது பொருந்தும். சமூக வாழ்நிலை, சமூக ஒடுக்குமுறை, சமூக வளர்ச்சியில் ஆளுமை செய்யும் காரணிகள் அக்காரணிகளின் தோற்றம், அழிவு குறித்த தெளிவான அறிவு பொருந்தும் தன்மை, இவைகள் தான் புரட்சியா? அல்லது மற்ற நடவடிக்கைகளா? என்பதை தீர்மானிக்குமேயன்றி, புத்தகத்தில் ஏற்கனவே எங்கோ எதற்கோ எழுதப்பட்ட வரிகளல்ல .
வர்க்க புரட்சிக்கு சீர்த்திருத்த வாதத்தை யாரும் பரிந்துரை செய்யவில்லை. வர்க்க உருவாக்கத்திற்கும் புரட்சிதான் தேவையா? என்பதுதான் எமது கேள்வி.

சமூகத்தில் தேவைக்கேற்ற கோட்பாட்டை(அறிவியல் அடிப்படையில்) உருவாக்காமல், தயாரிக்கப்பட்ட கோட்பாட்டை சுமந்து கொண்டு சமூகத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள் கம்யூனிஸ்டுகள்.

வர்க்கங்களாக வளர்ந்த சமூகத்தில் தேவைப்படும் தத்துவத்திற்கும் ஒரு சமூகத்தில் வர்க்கத்தை வளர்க்க தேவையான தத்துவத்திற்கும் இடையே தலைகீழ் முரண்பாடுகள் உள்ளன என்று சொல்லுவது இங்குள்ள புரட்சிகர சக்திகளுக்கு திரிபுவாதமாகப்படுகிறது.

மேலோட்டமாக பார்த்தால் சாதிரீதியாக இயங்கினாலும் உண்மையில்
வர்க்கங்களை வளர்த்தும் வேலையைத்தான் தலித் இயக்கங்கள் செய்கின்றன என்ற உண்மையை மறுக்கிறார்கள்.

மக்களையும் தொழிற்சங்கங்களையும் வென்றெடுக்க முடியாமல் போன தனது தோல்வியை வெறும் வாதத்திறமையால் மூடி மறைக்கிறார்கள். மார்க்சியத்தை தாண்டியும் சிந்திக்க முடியும் என்ற கருத்தியல் சுதந்திரம் கூட இல்லாத முன்னணிகளை உற்பத்தி செய்து அவர்களை முதலாளித்துவத்தில் இழந்து கொண்டிருக்கிறார்கள்..
ரகுநாத தொண்டைமான்
அட்டகாசமான ஆய்வுகளை வாசிப்பவருக்கு அயற்சியை ஏற்படுத்துகிற விதமாக தனது கட்டுரை ஆக்கத்தின் மூலம் ஏற்படுத்துகிறார் கட்டுரையாளர். அப்புறம் ஒரு தீர்க்கமான கட்டுரை ஒன்றுகொன்று தொடர்பிருந்தால் கூட இருபெரும் பிரச்சனைகளை இணைத்துச்செல்வது நல்லதாக இல்லை. இந்த தலைவரை கொண்டாடிய பின்னை நவீனத்துவவாதிளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை என கருத்துகிறேன் . அது தனிக்கட்டுரையாகவும் ப ம க வின் தோற்றமும் வளர்சியும் அத்ற்கான சமூகக்காரணிகளென்ற தனிக்கட்டுரையாக இருந்திருந்தால் இன்னும் தெளிவானதாக இருந்திருக்கும். படிக்கவும் அயற்சி இருந்திருக்காது. 90 களின் பிற்பகுதியில் நவீனத்துவர்கள் எடுத்த வாந்தியை இப்போது இமயவரம்பன் டிசைன் டிசனாக திருப்பியுமெடுக்கிறார். இதற்கான ஏரளாம பதில்களும் களங்களிலிருந்து பெறப்பட்ட நிறைய ஆவணங்களும் இனையத்திலேயே கொட்டிக்கிடக்கிறது. வாந்தியெடுப்பதை விட்டுவிட்டு தேடினால் தேவையான ஜின்சர் கிடைக்கலாம்.
annamalaiar thiru
அது ஒரு உண்மை சார்ந்த செய்தியையும் வரலாற்றையும் சொல்லவில்லை . முடிவுரையை எழுதிவிட்டு காரண ங்களை தேடி எழுதுகிறார்.
மாடர்நிச்டுகள் தான் பா ம கா வுக்கு பின் புலமாக திகழ்ந்தார்கள் என்பது தவறான வாதம்.. ம.க.இ .க , கருத்து எனசொல்லி அவர்களை தூ க்கி பிடிப்பது அசிங்கம் .
எனக்கும் ஓரளவு உண்மை தெரியும் .
நிரபிரிகை க்கும் கல்யாணிக்கும் சம்பந்தமில்லை . தவறாக அவரை குறிப்பிட்டுள்ளார். கல்யாணி நிரபிரிகை பத்திரிகை யில் எந்த பங்களிப்பும் செய்யவில்லை . ஒதுங்கி யே தான் இருந்தார். நிரபிரிகை பத்திரிக்கை - அ மார்க்ஸ்,- ரவிகுமார் ஆகியோரால் நடத்தப்பட்டது அவ்வளுதான் .
மக்கள் கல்வி இயக்கம் - ( கல்யாணி ) , துவங்கி நடத்தப்பட்ட போது " தீரன், இளவரசு, பழமலைய் , பல பட்டியல் போராட்டங்களில் அவர்கள் உடன் சேர்க்கப்பட்டனர் . திண்டிவனத்தில் கல்யாணி இருந்ததால் , பா.ம.க - தொடர்பு ஏற்பட்டது. . மக்கள் கல்வி இயக்கத்தின் போராட்டங்களில் பா ம.க பங்கு கொண்டது .............
--1992 ல் - மதுரை ஆர்த்தி ஓட்டலில் - தென் மாவட்டங்களில் ஜாதி மோதலை தடுத்தல் குறித்து .. (தேனீ பகுதியில் நடந்த மோதலை யொட்டி ) " டாக்டர் டாக்டர் சேதுராமனால் , கூட்டம் கூட்டபட்டது . அதில், ராம் தாஸ், திருமா , பழனி பாபா , கல்யாணி, யாதவ பேராவை , தி க , மற்றும் வடிவேல் ராவணன், மற்றும் இயக்க தோழர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் . ஜாதி மோதலை தடுக்க உரிய சமாதான யோசனைகளை குறித்து பேசப்பட்டது .............. அப்போது அ மார்க்ஸ், ரவிகுமார் கலந்து கொள்ளவில்லை ............

ராமதாஸ் கட்சிக்கி முற்போக்கு சக்திகள் ஆதரவு தேவை பட்டு இருக்கலாம் ... ஆனால் .. மற்றவர்களுக்கு அப்படி இல்லை ....
-- உள்நோக்கான , தவராக கண்ணிக்கபட்ட கட்டு கதை
நடராசன்
//மக்களுக்கான போலி இயக்கங்களாக பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் நிறுவப்பட்டுவிட்டன. இன்றுவரை புரட்சிகர இயக்கங்கள் தலை தூக்க முடியாமல் செய்யப்பட்டுவிட்டது. சி.பி.ஐ, சி.பிஎம் கூட பெருமளவு பலவீனப்படுத்தப் பட்டுவிட்டன.// ......இது புற நிலையான உண்மை மட்டுமே! புரட்சிகர இயக்கங்களின் அகநிலை பலவீனமே அதன் இன்றைய பின்னடைவிற்கு முதன்மை காரணம்..அகநிலையை செழுமைபடுத்தினால்தான் புறநிலையை எதிர்கொள்ள முடியும்..
சிவசுப்பிரமணியன்
அரசியலை நோக்கி வந்த எத்தனையோ இளைஞர்கள் 1 மகாகுடிகாரர்களானார்கள் 2 அரசியல் அற்றவர்களானார்கள் 3 பா ம க வில் சேர்ந்தார்கள் ...4...............5.........6.........100.....1000000...........
ஏகாதிபத்தியவாதிகளும் பின்நவீனத்துவவாதிகளும் ஒரே புள்ளியில் இணைவதொன்றும் தற்செயலானதல்ல.
அதேபோல், இந்த கம்யூனிஸ்டுகள், மகா மொக்கையாக இருப்பது, மேலுள்ள எல்லா நாசங்களுக்கும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது என்பதை கட்டுரைக்காரர் சுயவிமர்சனமாகவாவது எழுதியிருக்கலாம் .
ஊரான்
தேவையான அவசியமானதொரு கட்டுரை.

பின்நவீனத்தவ வாதிகளைப்பற்றி இப்பொழுதுதான் நீங்கள் முழுமையாகப் புரிந்து கொண்டதைப் போலத் தெரிகிறது. எனக்குத் தெரிந்து 80 களிலிருந்தே பின்நவீனத்துவ வாதிகளைப் பற்றி ம.க.இ.க மிகச்சரியாக கணித்து அவர்களுக்கு எதிராக கருத்தியல் ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் போதுமான அளவுக்குப் போராடியுள்ளது. அப்படி இருக்கும் போது

"இருந்த போதிலும் தேவையான உக்கிரத்துடன் இந்த தத்துவார்த்தப் போர் நடத்தப் படவில்லை. போதுமான ஆய்வுகளோ வெளியீடுகளோ இல்லை. தம்மை பாதுகாத்துக் கொள்ளும் ஓர் எச்சரிக்கை உணர்வுதான் இவ்வமைப்புகளிடம் உள்ளது. ம.க.இ.க.வின் தற்போதைய வெளியீடுகளில் இப்பிரச்சினை குறித்து பேசப்படுவது வரவேற்கத்தக்கது. பின்னவீனத்துவ வாதிகள் - பாமக தொடர்பை முதலில் அம்பலப்படுத்தியது ம.க.இ.க.தான்."

இப்படி எழுதுவதன் மூலம் ம.க.இ.க வின் செயலை வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள் என்றே கருதுகிறேன்.
ராகவ ராஜ்
பா.ம.க.வின் வளர்ச்சிக்கு பின்நவீனத்துவம் என்று சொல்லப்படுவது மட்டுமே காரணமல்ல;அடிப்படையான காரணம் இங்கே கம்யூனிஸ்ட்கள் இல்லாதது தான். இந்தியா சாதிகளின் நாடு;இந்திய சமூகவியலின் மொழி சாதியம் என்பதைப் புரிந்துகொள்ளாதவர்கள் யாரும் கம்யூனிஸ்ட்களே அல்லர். இது தான் பிரச்சினை.இதனால் தான் பின்நவீனத்துவவாதிகளால் பா.ம.க.வை வளர்க்க முடிந்தது.இவர்கள் தான் வி.சி.க.வையும் வளர்த்தனர். இதையும் சொல்ல வேண்டுமே.
நடராசன்
/ஸ்.ஓ.ச் , மக்கள் யுத்தம் (போல்சுவிக்) போன்ற அமைப்புகள் பின்நவீனத்துவாதிகளை புறக்கணித்தே வருகின்றன./ இவர்கள் பின்நவீனத்துவாதிகளை மட்டும் அல்ல..உங்கள் அமைப்பு உள்ளிட்ட எல்லா சனநாயக, புரட்சிகர அமைபுகளையும் புறக்கணித்தே வருகின்றன. இது அவர்கள் புனிதவான்கள் என்று காட்டிக் கொள்ள பயன்படும்..தங்கள் அணிகளை தக்க வைத்துக் கொள்ளப் பயன்படும்..மக்கள்திரள் போராட்டங்களுக்கும் எள்ளளவும் பயனளிக்காது..மேலும் மக்கள் யுத்தம் (போல்சுவிக்) என்பது 1/4 நூற்றாண்டுகளுக்கு மேலாக சனநாயக மத்தியதும் போன்ற எந்த கம்யுனிச அமைப்பு கோட்பாடுகளையும் நடைமுறை படுத்தாக கும்பல் அது..எந்த கோட்பாடும், கொள்கையும் அற்றவர்கள். அவர்களின் என்.ஜி.ஒ களுக்கு எதிரான வாய்சவடால்கள் கூறி அவர்களை புனிதவான்களாக ஆக்காதீர்கள்
நடராசன்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்...//மார்க்சியம் தொழிலாளர் வர்க்கத்தின் தத்துவம்.' உலகின் ஒடுக்கப்பட்ட எல்லா மக்களுக்கான தத்துவமல்ல! // உங்கள் கூற்றுப்படி எல்லா பல்வகை மக்கள் பிரிவுகளும் தொழிலாளர்கள் ஆகும் வரையில் மார்க்சியம் பயன்படாது.. இது உங்களின் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது! மார்க்சியம் என்பது வரலாற்று பொருள்முதலியல் + இயக்கவியல் என்பது அடிப்படை. ஆகும். இயக்கவியல் என்பதற்கு முரண் இயல் என்பாரும் உண்டு. சமூகத்தில் பல்வேறு முரண்பாடுகள் உண்டு என்பதே இயக்கவியலின் அடிப்படை... அதாவது நட்பு முரண்பாடுகள், பகை முரண்பாடுகள், முதன்மை முரண்பாடுகள், பிரதான் முரண்பாடு, துணை முரண்பாடுகள் ..என்று பலவற்றையும் மார்க்சியம் பேசுகிறது. எல்லா முரண்பாடுகளுக்கும் ஒரே தீர்வை இயக்கவியல் முன்வைக்கவில்லை.. ஒரு முரண்பாட்டின் தீர்வு மற்றதை தீர்க்க வழி வகுக்கும் என்பதே மார்க்சியம்( மாவோவின் “முரண்பாடுகள் பற்றி”) அதாவது தொழிலாளி வர்க்கத்தின் தீர்வு சாதியை, தேசிய இனச்சிக்கலை தீர்க்கும் என்று மார்க்சியம் சொல்வதாக கூறுவது தவறு.. சாதி, தேசிய இனம், சிறுபான்மை,சுற்றுசூழல், பெண்கள்..என ஒவ்வொரு முரண்பாட்டிற்கும் தனிதனியான தீர்வுகளையே மார்க்சியம் முன் வைக்கிறது..எனவே தாங்கள் மார்க்சியர்களை, கம்யுனிஸ்டுகளை விமர்சன்ம் செய்யுங்கள்… ஒ.கே …ஆனால்..மார்சியத்தின் மீதான விமர்சனத்தில் ஆழமும், கவனமும் இன்னும் தேவை..
meeran
ok, i agree that PMK is casteism party. what about VCK. what PMK members was doing 10years back(illegal things), now the same things doing by most of VCK member, why nobody ready to write, contempt and criticise about it. so my request for all is dont do the same mistke with VCK what you done with PMK.
Dinesh
மனித உரிமை செயல்பாடுகளில் அரசை எதிர்த்து போராடி காவல் துறையின் நெருக்கடிகளை சந்தித்து வரும் மார்க்ஸ் போன்றோரை 'அரசின் அடியாள்' என வர்ணிப்பது அடையாள அரசியலை விமர்சிக்கும் குணா, தனது 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' புத்தகத்தில் தமிழ் இனவாத அடையாளத்தை முன்னிறுத்தி பெரியாரை தெலுங்கர் என விமர்சிக்கிறார். பாமக, விடுதலைச் சிறுத்தை வளர்ச்சியால் புரட்சிகர இயக்கங்கள் வீழ்ந்தது என ஆதங்கபடுகிறார். தலித் இளைஞர்களை நக்சல்பாரி உட்பட அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்தும் வெளியேறச் சொன்னவர்கள் பின்நவீனத்துவவாதிகள்.

நிறப்பிரிகை போன்ற சிற்றிதழ்,, மார்க்ஸ் போன்ற சிந்தனையாளர்கள் களே ஒரு வெகுஜன அரசியல் இயக்கம் வளர காரணம் என்று குற்றம் சாட்டுவது, குறை பிரசவத்துக்கு டாக்டர் தான் காரணம் என்பது போல இருக்கு. பாமகவின் செல்வாக்கு வளர அவர்கள் முன்னெடுத்து வெற்றி பெற்ற ம்ப்ச் ரெசெர்வடிஒன்

1989 நிலவிய சாதிய சூழலில், ராமதாஸ் தானே முன்னின்று ஒரு தலித் பிணத்தை வன்னியர் தெரு வழியாக கொண்டு சென்றது, எழில்மலையை அமைச்சர் ஆக்கியது போன்ற செயல்பாடுகள் மார்க்ஸ் போன்றோரை ஈர்த்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை. பாமகவை உண்மையாக வளர்த்தது அந்த ஜாதி ஓட்டை நம்பி இருக்கும் திமுக /அதிமுக தான் என்பதை ஏன் மறைக்க வேண்டும் ?

பொதுவுடமையை நக்சலிச பாதையில் மற்றுமே நிலைநிறுத்த முடியும் என்றால் அது மாறி வரும் உலக சூழலில் இந்தியா ஏற்கொண்டுள்ள ஜனநாயக பாதைக்கு தேவை இல்லை
rajkumar
தோழர்களே, நாம் கணினி வழியாக இந்தியாவில் புரட்சி நடத்த முடியாது. களத்தில் இறங்காமல் எதிரிகளின் சதி(சாதி)யை முறியடிக்க முடியாது.

///////மக்களுக்கான போலி இயக்கங்களாக பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் நிறுவப்பட்டுவிட்டன. இன்றுவரை புரட்சிகர இயக்கங்கள் தலை தூக்க முடியாமல் செய்யப்பட்டுவிட்டது. சி.பி.ஐ, சி.பிஎம் கூட பெருமளவு பலவீனப்படுத்தப் பட்டுவிட்டன.// ......இது புற நிலையான உண்மை மட்டுமே! புரட்சிகர இயக்கங்களின் அகநிலை பலவீனமே அதன் இன்றைய பின்னடைவிற்கு முதன்மை காரணம்..அகநிலையை செழுமைபடுத்தினால்தான் புறநிலையை எதிர்கொள்ள முடியும்.."/////// தோழர் நடராசன் குறிப்பிட்டது சரியான கருத்து.
Venkatesan
@தினேஷ்.. முதலில் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த குணா, பெங்களூர் குணா அல்ல... திருப்பூர் குணா... ஓர் இடதுசாரி. ஆளைப் பிடித்துக் கொண்டு கருத்தை நிராகரிப்பதில் இருந்து தெரிகிறது, நீங்கள் அ.மார்க்ஸின் அடிப்பொடி என்று. உங்கள் உண்மையான பெயர் என்ன என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். முகநூலில் இதேதொனியாலான கருத்தை சுகுணா திவாகர் எழுதியிருந்தார். குருபக்தி இருக்கட்டும், அதற்காக பெயர் மாற்றி எழுதலாமா?
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
கால் பங்கு அறிவியலை வைத்துக்கொண்டு எதோ இனி உலகில் சமூகவியலில் கண்டுபிடிக்க ஏதும் இல்லை என்ற நினைப்பு உண்மையில் அறியாமையே . மார்க்சியம் ஒரு சமூகவியல் அறிவியலின் தொடக்கம் மட்டுமே. அன்றைய அறிவியல் விதிகளின் வளர்ச்சியின் அடிப்படையில் அது உருவக்கப்பட்டது. இன்றைக்கு அந்த அறிவியல் விதிகளே மாற்றமும் திருத்தமும் பெற்று வரும் நிலையில் அதை அடிபடையாக கொண்ட மார்க்சியத்தின் நிலையில் மாற்றமும் வளர்ச்சியும் அவசியம். இயக்கவியல் பொருள்முதல் வாதத்தின் உண்மையின் பாதை துல்லிமாக மாற்றப்பட்டவேண்டும்.நவீன வகைகெழு கணிதத்தின் அடிப்படையில் புள்ளியியல் கோட்பாடக வளர்க்கப்பட வேண்டிய சமூக விஞ்ஞானம் வெரும் கோட்பாட்டலவில் இன்றும் பயன்படுத்தப்படுவது மதம் போன்ற தேக்கநிலையே.
குமுரன்
சாதி வெறியர்களை அம்பலபடுத்தும் நோக்கமும், பின்நவினத்துவ வாதிகளின் செயல்பாட்டை அம்பலபடுத்தும் நோக்கமும், சரியானதே.வரவேற்க தக்கதே. ஆனால்,குணா சம்பந்தமே இல்லாமல் மாவோயிஸ்ட் கட்சிட் கட்சியை வைத்து கும்மி அடிப்பது( முந்திய கட்டுரைலும்) குணாவின் உள்நோக்கம் என்ன என்பது தெளிவாக உள்ளது.பின்நவினத்துவ வாதிகளின் செயல்பாட்டையும்,பின்நவினத்துவதுவத்தை பற்றி குணா வகுப்பு எடுக்கும் அளவிற்கு மாவோயிஸ்ட் கட்சி இல்லை.முதலில் நீங்கள் படியுங்கள் காரணம் நீங்கள் படிக்காமலேயே பரிதுரைத்த யமுனாராஜெந்தரனின் புத்தகத்தை வைத்தே உங்கள் கத்துகுட்டி அரசியல் புரிகிறது.முடிந்தால் தமிழக சிறைஇல் உள்ள மாவோயிஸ்ட் கட்சி தோழர்கள் விடுதலைக்கு குரல் கொடுங்கள்.
ராகவ ராஜ்
இமயவரம்பன் குறிப்பிட்டது, இந்திய சமூக யதார்த்தத்தில் பழைய சமூகத்தின் வர்க்கங்களான சாதிகள் முழுமையாக ர்மாறிடாமல் நிலவிக்கொண்டிருப்பதை கவனத்திற்கொள்ளாமல் மொண்ணையாக (யாந்திரீகத் தனமாக ) வர்க்கப்புரட்சி பேசிக்கொண்டிருந்த "கம்யூனிஸ்ட் களைத் தான் !ஆனால் அவர் கொஞ்சம் ஓவர்.அதற்காக அவர் கம்யூனிஸத்தின் எதிரியென்றோ துரோகியென்றோ கூறுவது "ஸாரி,ரொம்ப ஓவர்".
சுரேஷ் பாபு
அ.மார்க்ஸூடனும், விடியல் சிவாவுடனும் தமிழக மாவோயிஸ்டுகள் கூடிக் கும்மியடிக்கவில்லையா? தமிழக பின்னவீனத்துவவாதிகள் பற்றி தமிழகத்தில் உங்கள் கட்சி எத்தனை வெளியீடுகள் கொண்டு வந்துள்ளது? நீங்கள் எத்தனை வகுப்புகள் எடுத்துள்ளீர்கள்? எனக்குத் தெரிந்து இதைவிட மரியாதையுடனும் அன்புடனும் உங்கள் கட்சியின் சாதனைகள் பற்றி வேறு யாரும் கூறியதில்லை. கட்டுரையின் நோக்கமே உங்கள் கட்சியை ஒழிக்கத்தான் பா.ம.கவும் பின்னவீனத்துவவாதிகளும் சேர்ந்து இயங்கினர் என்பதை அம்பலப்படுத்துவதுதான். கட்டுரையில் தகவல் பிழை ஏதாவது இருந்தால் தமிழக பின்னவீனத்துவ வதிகள் குறித்து உங்கள் நிலைபாட்டை தெளிவாக எடுத்து வையுங்கள்.
நடராசன்
//அவர்தான், இவர். இவர்தான் அவர்.// இப்படி ஒரு விமர்சனம் ராமதாஸ் மீது உலா வருகிறது.. இது எப்படி இயக்கவியல் பார்வை- விமர்சனமாக இருக்க முடியும்.. அன்று நானும் நான் சார்ந்திருந்த இடதுசாரி இயக்கமும் ராமதாஸுன் ஈழவிடுதலை ஆதரவு, தமிழ்தேசிய விடுதலை முழக்கம், பிற்படுத்தப்பட்டோர்-தலித் மக்கள் ஒற்றுமை, சாதி இழிவுகளுக்கு எதிரான சில செயல்கள், இட ஒதுக்கீடு ....இன்னபிறவற்றுக்காக ஆதரித்தோம்.. கூட்டு நடவடிக்கைகளில் கூட செயல் பட்டோம் ...இது வெல்லாம் அன்றும் சரிதான்..இன்றும் சரிதான்.. அதேசமயம் இன்று ராமதாஸின் சாதி வெறி, பிற்படுத்தப்பட்டோர்-தலித் மக்கள் ஒற்றுமை க்கு எதிரானப் பிரச்சாரம்-அணிதிரட்டல் ஒட்டுக்கான கீழ்த்தரமான பிற்போக்கு தந்திரங்கள் அனைத்தும் தவறு..முழு மூச்சாக எதிர்க்கப்பட வேண்டும்..இது இன்றைக்கு சரி.... அவர் இவரல்ல...இவர் அவரல்ல
குமுரன்
பின்னவீனத்துவதுவத்தை அம்பலப்படுத்தி முதல் அரங்க கூட்டம் நடத்தியதே மக்கள் பண்பாட்டு பேரவைதான்.பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன.பின் நவீனத்துவம் குறித்து அமைப்பு பல விவாதங்களை நடத்தியுள்ளது.
விடியல் சிவாவை அமல்படுத்த(?) ஜெயமோகன் கும்பளோட குணாகும்பல் கும்மியடிக்கவில்லையா? யாரிடம் கதை விடுகிறீர்கள்.மிக தெளிவாகவே கூறியுள்லேன்.சாதி வெறியர்களை அம்பலபடுத்தும் நோக்கமும், பின்நவினத்துவ வாதிகளின் செயல்பாட்டை அம்பலபடுத்தும் நோக்கமும், சரியானதே.வரவேற்க தக்கதே.அ.மார்க்ஸூ மாவோயிஸ்டுகள் குறித்து எதிராகவே எழுதியும் பேசியும் வந்துள்ளார்,அவருடன் மாவோயிஸ்டுகளை கோர்த்து விடும் குணாவின் கும்மியும்,அதன் பிண்ணி கூட்டமும் ,நோக்கமும் அம்பலத்துக்கு வரும் .
சுரேஷ்பாபு
மார்க்சிய லெனினிய இயக்கங்களை இதைவிட யாரும் கேவலப்படுத்த முடியாது நடராசன். ஒரு இயக்கம் புதிதாக உருவாகும் போது அதன் வர்க்கப் பின்னணியை ஊடுருவிப் பார்க்க முடியாதவர்கள் அவர்கள் என்றா சொல்கிறீர்கள்?

ஒரு விதத்தில் குமுரன் சொல்வது சரி. பின்னவீனத்துவம் அல்லது பாமக குறித்து அவர்களுக்கு யாரும் வகுப்பு எடுக்க வேண்டியதில்லை. பின்னவீனத்துவத்தை அம்பலப்படுத்தி பல நல்ல வெளியீடுகளை மாவோயிஸ்ட் கட்சி அகில இந்திய அளவில் கொண்டுவந்துள்ளது. விமர்சனம் என்பது எல்லாம் தெரிந்தே தவறான தந்திரோபாயமாக பாமவுடனும், பின்னவினத்துவவாதிகளுடனும் கூட்டுநடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் அது அவர்களுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கவில்லை என்பதுதான்.

பேஸ்புக்கில் உங்கள் கடந்தகால புரட்சிகர வாழ்க்கை குறித்து மிகையாகக் கண்ணீர் வடிக்கிறீகள். ஆனால் கம்யூனிஸ் விரோதிகளை அம்பலப்படுத்தும் நேரம் வரும்போது பின்னவீனத்துவ வாதிகள் பக்கம் நிற்கிறீர்கள். இந்தப் பத்து நாட்களில் பின்னவீனத்துவ வாதிகளின் கம்யூனிஸ் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை நீங்கள். ஆனால் புரட்சியாளர்களுக்கு ஊடுருவிப் பார்க்கத்தெரியாதவர்கள் என்று முட்டாள் பட்டம் கட்டுகிறீர்கள். இதையேதான் பின்னவீனத்துவாதிகள் செய்த்டுவருகிறார்கள். புரட்சியாளர்களையும் பின்னவீனத்துவவாதிகளையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் கபடம் இது. அமார்க்ஸ் போன்றவர்கள் மீது இத்தனை பாசம் வைத்துள்ள நீங்கள் ஈழத்துக்காகவும் புரட்சிக்காகவும் உருகுவதாகக் காட்டிக் கொள்வது போலித்தனமல்லவா?
பிரகாசு
ஆழ அற்புதமான கட்டுரை. பின் நவினத்துவ வாதிகளை முகம் கிழித்து தொங்கவிடுகிறீர்கள். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் நிகழ்த்திய தாண்டவத்தின் நிதர்சனத்தினை இன்று பார்க்க முடிகிறது. ஆனால் இவர்களை இன்று பெருமளவில் இயக்கங்கள் ஒதுக்கி வைத்துள்ள நிலையில் நீங்கள் சேர்ந்து இயங்கும் சேவ் தமிழ்- தமிழ் நாடு மக்கள் கட்சியினர் உண்மை அறியும் குழுவினை நிகழ்த்துவதைப் பற்றியும் அம்பலப்படுத்துவது அவசியம். முன்னர் குடிசைப்பகுதி மக்கள் சார்ந்த பரப்புரைகளிலும் இதே சாயலை காணக் கூடியதாக இருந்தது.. ஊருக்கு உபதேசம் செய்வது எளிது தோழரே.. உங்களது வீட்டினை சுத்தமாக வைத்திருங்கள்...
ந.சுப்பிரமணியம் கடலூர்
நெருக்கடிகளிலிருந்து மீள எல்லோருக்கும் ஒரு முகம் தேவைப்படுகிறது அது புரட்சிகரமானதாகவும் ,புத்திசாலித்தனமாகவுமிருப்பதுபோல, இருக்கவேண்டும் அப்படியொரு முகமூடியாகத்தான் நடராசன் போன்றவ்ர்கள் பின்நவீனத்துவத்தை பார்க்கிறார்கள். மார்க்ஸும் ஏங்கல்ஸும் வந்து ஏதாவது விவாதிக்கவேண்டுமென்று சொன்னால்.... கொஞ்ச நேரம் பொறுத்திருங்கள், நான் பின்நவீனத்துவவாதிகளோடு ஒரு ப்பீரடித்துவிட்டு வருகிறேன் என்று எஸ்கேப் ஆகிற கேஸ்கள்
ந சுப்பிரமணியம் கடலூர்
குமுறன், உங்கள் நோக்கமும் இக்கடுரையாளரின் நோக்கமும் ஒன்றுபோலவே எனக்கு தெரிகிறது எதற்கு போராடவேண்டிய இலக்கைவிட்டு, குடித்துக் கொண்டும் காரித்துப்பிக் கொண்டுமிருக்கிற பின்னையர்களின் முன்னால் குணமகனை வைத்து கும்மியடிக்கிறீர்கள் என்று தெரியவில்லை
ஸ்டாலின்
என்பதுகளின் இறுதியில் வர்க்க அரசியல் தோற்றுவிட்டது, மார்க்சியம் பெருங்கதையாடல் என்று கூறி அடையாள அரசியலில் நுழைந்து கொண்ட நிறப்பிரிகை அறிவாளிகளுக்கு அப்போது கண்ணில் தட்டுப்பட்ட ஒரே ஒடுக்கப்பட்ட நபர் இந்த ராமதாசு தான். வன்னிய சாதியின் அடையாளமாக இருந்த ராமதாசுக்கு அன்று சித்தாந்த விளக்கங்கள் கொடுத்தது பின்நவீனத்துவ கழிசடைகள் மட்டும் அல்ல. இவர்களோடு சேர்ந்து கொண்டு முற்போக்கு, புரட்சி என்று பேசக்கூடிய அமைப்புகளும் தமது பங்கிற்கு பிரஷை எடுத்துக் கொண்டு முற்போக்கு சாயத்தை முக்கி முக்கி அடித்தனர். இந்த அயோக்கியத்தனத்தை அன்று கடுமையாக எதிர்த்து விமர்சித்ததும் அம்பலப்படுத்தியதும் ம.க.இ.க மட்டும் தான். இது கடந்த முப்பது ஆண்டின் தமிழக அரசியல் வரலாற்றை அறிந்தவர்களுக்கு தெரியும்.

சாதி சாயத்துடன் இருந்த ராமதாசுக்கு முற்போக்கு சாயம் பூசியது பின்நவீனத்துவ அசடர்களின் கட்டவிழ்க்கும் கலக அரசியலா அல்லது ’தோற்றுப்போன’ பெருங்கதையாடல் என்று இந்த அறிவாளிகள் ஊளையிடும் புரட்சிகர அரசியலா ?

மார்க்சியத்தை மாறுவாசிப்பு செய்த மாபெரும் அறிவாளிகளையே, உலகை மாற்றிய தத்துவங்களையே கட்டுடைத்த கலகக்காரர்களையே, தான் எந்த இசக்காரன் என்றும் சொல்லிக்கொள்ளாத சாதாரண ஓட்டுப்பொறுக்கியான ராமதாஸ் ஏமாற்றிவிட்டார் என்றால் யார் அசடர்கள் ? பின்நவீனத்துவ கலகக்காரர்களா - ராமதாசா ?

சொன்ன நேரத்திற்கு சரியாக வந்துவிட்டார் என்று வியந்து வியந்து ராமதாசிடம் நேர்காணல் எடுத்த இந்த அசடுகள் எல்லாம் இன்று எந்த நவீனத்துவத்தில் இருக்கிறார்கள் என்கிற அடையாளமே தெரியாதபடி இருக்கிறார்கள். ஒருவர் இலட்சக்கணக்கான பேஸ்புக் புரட்சியாளர்களைப் போல தானும் ஒரு ’முழு நேர பேஸ்புக் புரட்சியாளராக’ மாறி விட்டார். மற்ற ஒருவர் ராமதாஸைப் போலவே முழு நேர ஓட்டுப்பொறுக்கியாகி சீரழிந்துவிட்டார். மற்றும் இருந்த கலகக்காரர்கள் எல்லாம் தற்போது பின்நவீனத்துவத்திற்காக என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

மேலும், ம.க.இ.க வின் வெளியீடுகளில் எங்கேயும் பின்நவீனத்துவவாதிகள் தான் ராமதாசை உருவாக்கினார்கள் என்று கூறபடவில்லை. மாறாக ராமதாசுக்கு சித்தாந்த விளக்கம் கொடுத்தார்கள், முற்போக்கு முலாம் பூசினார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது.

இறுதியாக இந்த கட்டுரையை எழுதிய குணா எண்பவர் கூறுவதைப் போல ம.க.இ.க தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காகவோ, தற்காப்புக்காகவோ பின்நவீனத்துவவாதிகளையும், அரசு சாரா நிறுவனங்களையும் எதிர்க்கவில்லை மாறாக சித்தாந்த ரீதியாகவே பின்நவீனத்துவத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற கண்ணோட்டமும், திட்டமும் ம.க.இ.க விடம் இருப்பதால் தான் எதிர்க்கிறது. ஆதாரங்களுக்கு மா.அ.க ஆவணங்களை பார்க்கவும். ஒரு அமைப்பின் இது போன்ற அடிப்படை நிலைப்பாடுகள், விவரங்களை கூட அறிந்து கொள்ளாமல் குறிப்பிட்ட அமைப்பை பற்றி எதையாவது எழுதுவது என்பது கண்டிக்கத்தக்கது.

http://www.facebook.com/tosocialism
che
தாங்கள் அந்த சமயத்தில் எந்த அமைப்பில் இருந்தீர்கள்.. என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?
தற்போது என்ன அமைப்பில் இருக்கிறீர்கள்...அதன் நிலைப்பாடுகள் என்ன?
vel
கேவலமான கெடுகெட்ட சிந்தனை.இதில் வன்னியர்களுக்கு வக்காலத்து…..ராமதாசால் பாதிப்பு என்று…குண்டு சட்டி குதிரை ஒட்டிகள் கருத்துக்களுக்கு எப்பவும் வரவேற்ப்பு இருக்கமுடியாது…. கீற்று களவானிகள் தமிழகத்தில் கழட்டியது என்று ஒரு ம……ரும்,,,, மண்ணும் கிடையாது….

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.