கடலோரம் நடக்கையில் காற்று
கருத்தோடு மோதுவதெல்லாம் சேருங்கள்!
உடலோடு உரசையில் காற்று
உருவாக்கும் புது ராகம் கேளுங்கள்!
அலைமோத இணைந்தாடும் காற்று
அழகாக்கும் புது காட்சி காணுங்கள்!

அதிகாலையும் பறவை குரலோசையும்!
அருகாமையில் தோன்றும் புது ஓசையும்!
ஒளிவானமும் இரவு விண்மீன்களும்
ஒளிக் காட்டும் துணை கோளும் அதன் கோள்களும்!

தோன்றும் மீண்டும் தோன்றும் மீண்டும் தோன்றியது தோன்றாமல் தோன்றும்.!
(கடலோரம்.. …

மலை மீது ஏறி
குளம் ஒன்று தேடி
படகோட்டி பாடி படம் பிடிக்கிறோம்!
காடு ஒன்று தேடி
மரம் மீது ஏறி
குயில் போல பாடி கூத்தடிக்கின்றோம்!
இயற்கை நமக்கு நண்பனே
நாமோ இயற்கையின் செல்வமே
உயிர்க் கோள பூமியில் போர்க்கோலமா?
உருவான வாழ்வுக்கு அறமாகுமா?
(கடலோரம்.. …

தொலை நோக்கி தேடி
புது பூமி தேட
புது வாழ்வு தேட படம் பிடிக்கிறோம்
தொலை பேசி பேசி
புளூ டூத்தில் பாடி
எல்இடி வெளிச்சத்தில்
கூத்தடிக்கின்றோம்
செயற்கை கருவியும் நண்பனே
நாமோ செயற்கையின் தோழனே
உன் நாடு என் நாடு போர்க்கோலமா?
தற்கால வாழ்வுக்கு தரமாகுமா?

கடலோரம் நடக்கையில் காற்று
கருத்தோடு மோதுவதெல்லாம் சேருங்கள்!
சேருங்கள்!

- செந்தில்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.