நேராக நிற்பதற்கே உழைத்தான் மனிதன்
நின்றபின்னே நேர் நிலையில் உழைத்தான் மனிதன்
கைகளின் விடுதலைக்கே உழைத்தான் மனிதன்
விடுதலைக் கைகளாலும் உழைத்தான் மனிதன்
கைகளின் விடுதலை புலன்களின் தெளிவு
உழைப்பின் மேல் பேச்சுபேச்சின் மேல்
உழைப்பு மீண்டும் மீண்டும் சுழன்றன ஆண்டுகள்!
பகுக்கவும் தொகுக்கவும் பழகியது மூளை!
கைப்பிடித்த பொருள்களிலே கருவி செய்தான்
கருவிகளில் பற்பல வகைகள் செய்தான்கற்கருவி
மரக்கருவி உலோகக் கருவி என
கருவிகள் செய்வதற்கே உழைத்தான் மனிதன்
செய்தக் கருவியாலும் உழைத்தான் மனிதன்
கருவிகளின் வளர்ச்சிக்கே புரட்சி செய்தான்
புரட்சிமய கருவிகளால் வாழ்ந்து நிலைத்தான்
வில் அம்பு வேட்டையாட செய்து கொண்டான்
விளைவாக கால்நடையை வளர்த்து வாழ்ந்தான்!
மேய்ச்சல் நிலம் தேடி அழைத்து சென்றான்
நீரோட்ட பாதையிலே நிலைத்து வாழ்ந்தான்
வாழ்ந்ததனால் பாசனத்தை கற்றுக் கொண்டான்
ஏர் கலப்பை மண்வெட்டி செய்து கொண்டான்
முறையாக விவசாயம் செய்ததாலே
சீரான மொழித் தொடர்பு வளர்ந்தங்கே
மொழியோடு இலக்கியமும் செழித்ததங்கே
கைத்தொழிலும் கலை பொருளும் சேர்ந்ததங்கே
உழைப்போடு கலைகள் பல வளர்த்து
வாழ்ந்து பொதுவுடைமை வாழ்வுதனை கண்டான் மனிதன்
உபரியை பெருக்கி உடமையை பெருக்கி இனத்தினை பெருக்கி கடமையை பெருக்கி
கட்டளை பெருக்கி குற்றம் பெருக்கி கொலைகளை பெருக்கி போர் முறை கண்டான்
வர்க்க மாய் நின்றான்
வர்க்க மாய் நின்ற நடைமுறையால்
அன்பெனப் பேசும் கருத்தியல் பிறந்து
ஆளெனப் பேசும் கருத்தியல் பிறந்து
இறை எனப் பேசும் கருத்தியல் பிறந்து
இறையாண்மைப் பேசும் கருத்தியல் பிறந்து
தத்துவம் என்ற உலகியல் பார்வைபிறந்து
வளர்ந்ததுவர்க்கப் போராட்டமாய் நின்று நிலைத்தது.
வர்க்க சமுதாய வாழ்கை இங்கே!
வர்க்க மற்ற சமுதாயம் எங்கே எங்கே?
வர்க்க போர்கள் நடக்குது இங்கே
வர்க்க மற்ற சமுதாயம் எங்கே எங்கே?
தொழில் புரட்சிகள் நடக்குது இங்கே
வர்க்க மற்ற சமுதாயம் எங்கே எங்கே?
நான்கு தொழிற் புரட்சி நடத்தது இங்கே
வர்க்க மற்ற சமுதாயம் எங்கே எங்கே?
நான்குகட்ட தொழிற்புரட்சி தந்ததென்ன தோழனே?
நாமிங்கே பகிர்ந்து கொள்ளலாமா தோழனே?
முதல் தொழிற்புரட்சி தந்ததென்ன தோழனே?
முழுமையாக பகிர்ந்து கொள்ள தொடங்கலாமா தோழனே
நிராவி எந்திரங்கள் தோற்றம் கொண்டு தோழனே!
முதற்தொழிற் புரட்சி நடந்ததன்றோ தோழனே!
கூறு போட்ட ஆண்டைகள் குலை நடுங்க தோழனே!
கூட்டுழைப்பு தொழில் முறை வளர்ததன்றோ தோழனே!
கற்பனைகள் தவிடு பொடி யானதன்றோ தோழனே!
விஞ்ஞானம் வேர்பிடித்து வளர்ந்ததன்றோ தோழனே!
விஞ்ஞான சோசலிசம் பிறந்ததன்றோ தோழனேகாரல் மார்க்ஸ் பெயர் தாங்கி நிற்பது காண் தோழனே
முதற்தொழிற் புரட்சிதந்த கொடை தோழனே
முதல் வீரன் காரல் மார்க்ஸ் செவ்வணக்கம் தோழனே!
இரண்டாம் தொழிற்புரட்சி தந்ததென்ன தோழனே?
இனிதாக தொடர்ந்து நாம் பகிரலாமே தோழனே?
மின்சார சாதனங்கள் வளர்ந்ததன்றோ தோழனே!
கிராமங்களும் மின் ஒளியில் மிளிர்ந்ததன்றோ தோழனே!
பொதுத்துறை நிறுவனங்கள் வளர்ந்ததன்றோ தோழனே!
பொதுக் கல்வி கூட்டங்கள் திறந்தது காண் தோழனே!
பாட்டாளி ஆட்சி முறை பிறந்ததன்றோ தோழனே!
லெனின் ஸ்டாலின் பெயர் தாங்கி நிற்பது காண் தோழனே
இரண்டாம் தொழிற்புரட்சி தந்தகொடை தோழனே
லெனினும் ஸ்டாலினும் பாட்டாளி வீரனே!
செவ்வணக்கம் செவ்வணக்கம் செவ்வணக்கம் தோழனே!
மூன்றாம் தொழிற்புரட்சி தந்ததென்ன தோழனே?
முன்னுரையை யாவது பகிரலாமே தோழனே?
மின்னணு சாதனங்கள் வளர்ந்ததன்றோ தோழனே!
மிகப்பெரிய சிக்கல்களும் எளிதாச்சு தோழனே!
சோசலிச நடத்தை விதி பிறந்ததன்றோ தோழனே!
மூன்றாம் தொழிற்புரட்சி தந்த கொடை தோழனே
மாசேதுங் பாட்டாளி படையணியின் வீரனே!
செவ்வணக்கம் செவ்வணக்கம் செவ்வணக்கம் தோழனே!
நான்காம் தொழிற்புரட்சி தந்ததென்ன தோழனே?
நாமிங்கே பகிர்ந்து கொள்ள தவறலாமோ தோழனே?
செயற்கை நுண்ணறிவு வளர்ந்தாச்சு தோழனே!
செயல்பாட்டில் பிற்போக்கு தடையாச்சு தோழனே!
பூமியில் தொழில் புரட்சி முடிந்தாச்சு தோழனே
விண்வெளியில் தொழில் புரட்சி நிகழ்த்த வேண்டும் தோழனே!
பாசிசத்தை பூமிப் பந்தில் துடைக்க வேண்டும் தோழனே
சோசலிசம் பூமியிலே நிறுவ வேண்டும் தோழனே
மாலெமா சிந்தனையை ஏந்த வேண்டும் தோழனே!
மனம் திறந்து பகிர்ந்துகொள்ள துணிவு கொள்வோம் தோழனே!
பயில்வோம் பகிர்வோம் அமைப்பாவோம் தோழனே!
பயில்வோம் பகிர்வோம் அமைப்பாவோம் தோழனே!
இது காலத்தின் தேவை கம்யூனிட்டுகளின் ஒற்றுமை
- செந்தில்