அழகாக பார்ப்போம் எல்லோரும் அழகு!
அன்பாக நினைப்போம்!
எல்லோருக்கும் அன்பு உண்டு!
பொறுப்பாக சிறப்பாக பணியாற்றி மகிழ்வோம்!
பொதுவாழ்வு உருவாக்க குழுவாக இணைவோம்!
நிலை மாறினாலும்!
நிலம் மாறினாலும்!
எல்லோருக்கும் எதிர்காலம் ஒன்றாக வேண்டும்!
              (அழகாக பார்ப்போம்! எல்லோரும் அழகு!)

பற் பல மொழிகள் பயில்வோம்!
பேசுவோம்!
பாடுவோம்!
கதை கதைப்போம்! - நன்கு
கதை கதைப்போம்!
பல்திசை பயணங்கள் செல்வோம்!
தேடுவோம்!
திரட்டுவோம்!
திறன் வளர்ப்போம்! - நல்ல
திறன் வளர்ப்போம்!
ஆய்வுகள் செய்வோம்!
அறிவியல் வளர்ப்போம்!
அடக்கத்தை பிடித்து உயர்வாழ்வை படைப்போம்!
              (அழகாக பார்ப்போம்! எல்லோரும் அழகு!)

பன்மொழி மனிதரை காண்போம்!
பேசுவோம்!
பழகுவோம்!
கதை கதைப்போம்! நன்கு
கதை கதைப்போம்!
பல்வகை கலைகளை பயில்வோம்!
உண்போம்!
உடுத்துவோம்!
உறவு கொள்வோம் - இரத்த
உறவு கொள்வோம்
இருப்பதை கொடுத்து
தருவதைப் பெறுவோம்!
சமத்துவம் பிடித்து சமதர்மம் படைப்போம்!

              (அழகாக பார்ப்போம்! எல்லோரும் அழகு!

- செந்தில்

Pin It