கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் சுமார் 1.2 கோடி மக்கள் பசியாலும், பட்டினியாலும் வாடும் நிலை ஏற்பட்டுள்ள தாக துருக்கியைச் சேர்ந்த ஆய்வு மையம் கூறியுள்ளது.

சோமாலியாவின் தெற்குப் பகுதி யில் பட்டினி காரணமாக ஐந்து வயதுக் குட்பட்ட சுமார் 29,000 பிள்ளைகள் கடந்த 90 தினங்களில் மரணித்துள் ளார்கள். பட்டினி வேகம் தொற்று நோய்போல பரவிக் கொண்டிருக்கி றது.

ஏழு வயதுள்ள சிறுமி ஒருத்தி வைத் திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருக் கிறார். இவளுடைய எடை வெறும் 3.4 கிலோ மட்டுமே. இதே நிலை தொடரு மேயானால் ஒரு சில மாதங்களில் 6,40,000 பிள்ளைகள் பட்டினிச் சாவை சந்திக்க நேரிடும் என்றும் இதற்கு 7500 கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என்றும் ஐ.நா. சபை அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

60 ஆண்டுகளில் இல்லாத அள வுக்கு பெரும் வறட்சி நிலவுவதால் அடுத்த 2 மாதங்களில் சோமாலியா வைச் சேர்ந்த 1 கோடி பேர் (இது அந்த நாட்டின் மக்கள் தொகையில் பாதியா கும்) பட்டினியால் அவதிப்படும் நிலை உருவாகும் என துருக்கி நாட்டின் மனித நிவாரண அறக்கட்டளை எச்சரித்துள் ளது.

இதற்கு வறட்சி, உள்நாட்டுப் போர், வேலையில்லாப் பிரச்சினை, சுகாதார வசதிகள் இன்மை ஆகியவற்றை கார ணமாக கூறி உலக வல்லரசுகள் இடையே நடந்த பனிப்போரின் பாதிப்பு தான் பெருங்காரணம் என்பதை சாமர்த் தியமாக மறைக்கப்படுகிறது.

ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கு முனையில் இந்தியப் பெருங்கடலை ஒட்டியும், சூயஸ் கால்வாயின் தென் பகுதி - ஏடன் வளைகுடாவை ஒட்டியும் சோமாலியா அமைந்துள்ளதால் சரித்தி ரப் பிரசித்தி பெறுகிறது. அரபு வளைகு டாவில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் சோமாலிய கடல் பகுதி வழியாகத்தான் பல்வேறு நாடுகளுக் கும் கொண்டு செல்லப்படுகிறது.

நாளொன்றுக்கு சுமார் 90 வர்த்தக விமானங்கள் சோமாலியாவின் விமான எல்லையைக் கடந்து செல்கின் றன. வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்கும் காரணத்தால் தான் அமெரிக்கா அதனை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க எண்ணுகிறது.

அமெரிக்காவும், சோவியத் யூனிய னும் தங்களுக்குள் வல்லரசு யார் என்ற பனிப்போரை நிகழ்த்திக் கொண்டிருக் கும் வேளையில் சோமாலியாவிற்கும் எத்தியோப்பியாவிற்கும் போரை உண் டாக்கினர். எத்தியோப்பியாவிற்கு சோவியத் யூனியனும், சோமாலியா விற்கு அமெரிக்காவும் துணை நின் றன. போரில் சோவியத் யூனியன் ஆத ரவு பெற்ற எத்தியோப்பியா வெற்றி பெற்றது.

இப்போது சோவியத் யூனியன் சிதறி சின்னாபின்னமாகி விட்டது. வார்த்தைக்கு வார்த்தை மனித நேயம் பேசி மனித குலத்தை நாசப்படுத்தி வரும் அமெரிக்காவிடம் மனித நேயத்தை எதிர்பார்க்க முடி யாது.

ஏனென்றால் சோமாலியாவை சீர ழித்ததில் முக்கிய பங்கு அமெரிக்கா வுக்கு மட்டுமே உரியது. உதவி நிவார ணம் என்று சொன்னால் வளமான நாடுகளில் இருந்து உணவுப் பொருட்க ளும், மருந்து பொருட்களும் அனுப்பி வைக் கப்படும்.

ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலத்தில் பசி யால் வாடும் குழந்தைகளுக்கு உண வுப் பொருட்கள் வழங்குவதாக கூறிக் கொண்டு 30,000 இராணுவ வீரர்களை 1992ல் சோமாலியாவிற்கு அனுப்பிய நாடுதான் அமெரிக்கா.

யுத்த கப்பல்கள் ஜெட் யுத்த விமா னங்கள் மற்றும் பல்லாயிரக்கணக் கான துருப்புகளை சோமாலியாவுக் குள் அனுப்பி வைப்பது சோமாலிய மக்களின் இறையாண்மையை மூர்க் கத்தனமாக மீறுவதாகும் என்று அமெ ரிக்க பத்திரிகைகளும், சோஷலிஸ சமத்துவ கட்சியின் முன்னோடிகளும் வெளிப்படையாக கண்டிக்கும் அள விற்கு ஆக்கிரமிப்பு வெறியைக் காட் டிய நாடுதான் அமெரிக்கா.

வீரஞ்செறிந்த போரின் மூலம் சோமாலிய மக்கள் அமெரிக்க ஆக்கிர மிப்பு படையை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றினார்கள். அதனால் கோபங் கொண்டு தனக்கு எதிராக சோவியத் யூனியனுடன் கைகோர்த்த எத்தியோப்பியா விற்கு ஆயுத உதவி செய்து சோமாலியாவிற்கு எதிராக மீண்டும் போர் தொடுக்க வைத்ததும் அமெரிக்காதான்.

அமெரிக்காவின் நிலை இதுவென் றால் மேற்கத்திய நாடுகளிலிருந்தும் பெரிய உதவிகள் கிடைப்பதற்கும் வாய்ப்பில்லை. சோமாலிய கடற்கரை வளங்களை சீரழித்ததில் மேற்கத்திய நாடுகளின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது.

தமது நாடுகளின் அணு உலைகள் வெளியேற்றும் கழிவுகளையும், வேறு இரசாயன கழிவுகளையும் கொட்டி சோமாலிய கடல் வளத்தை நாசப்படுத் துவது மட்டுமல்லாமல் மிச்சமுள்ள மீன் களையும் அதி நவீன மீன் பிடி கப்பல் கள் மூலமாக அள்ளிக் கொண்டு போவ திலும் மேற்கத்திய நாடுகள் சாமர்த்தி யம் காட்டி வருவது வெளிப்படையான உண்மை.

குதிரை கீழே தள்ளியது மட்டுமல் லாமல் குழியையும் பறித்த கதையாக பசியையும், பஞ்சத்தையும் ஆயுதங்க ளாகக் கொண்டு மீண்டும் ஆக்கிர மிப்பை நடத்தத் துடிக்கிறது அமெ ரிக்கா. அதனுடைய வெளிப்பாடாகத் தான் அமெரிக்காவின் ஏவல் அமைப் பான ஐ.நா. நிவாரணத்திற்காக கொண்டு செல்லப்படும் உணவுப் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவ தாக அறிக்கை விடுகிறது.

இதையொட்டி அமெரிக்க வெளியுற வுத்துறைச் செயலாளர் ஹிலாரி கிளின் டன், "அல் ஷபாப்பினால் அதன் மக்க ளுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் இரக்கமற்ற பயங்கரவாதம் ஏற்கெ னவே மிகவும் ஒரு கொடூரமான நிலை மைக்கு திரும்பியுள்ளது. அது இன்னும் மோசமடையும் என்றுதான் எதிர்பார்க்க முடியும் என்று கூறியுள்ளதையும், சோமாலியாவில் உள்ள மக்களில் உயிர் களைக் காப்பாற்ற நாங்கள் கடமைப் பட்டுள்ளோம். ஏற்கெனவே அல் ஷபாப் கட்டுப்பாட்டில் இல்லாத எல்லா பகுதிக ளிலும் நாங்கள் பணியாற்றி வருகி றோம். ஆனால் துரதிருஷ்டவசமாக சுமார் 60 சதவீத மக்கள் அல் ஷபாப் கட்டுப்பாட்டு பிராந்தியங்களில் உள் ளனர்...'' என்று அமெரிக்க உதவிக ளுக்கான துணை நிர்வாகி டோனால்ட் ஸ்ரைன்பேர்க் கூறியுள் ளதையும் பார்க்கும்போது அமெரிக் காவின் ஆக்கிரமிப்பு நோக்கம் தெளிவாகப் புரிகிறது.

சோமாலியாவில் பட்டினியால் மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் அத்தனை பேரும் முஸ்லிம்கள் என்பதை கவனத்தில் வைத்துதான் இந்தப் பிரச்சினையை நோக்க வேண்டும்.

“அண்டை வீட்டுக்காரன் பசித்திருக்கும்போது நீங்கள் உண்ணாதீர்கள்! ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு உடம்பைப்போல'' என்று நபிகள் நாயகம் கற்றுத் தந்த சகோதரத்து வத்தை மனதில் வைத்து சோமாலியாவின் பிரச்சினைக்கு தீர்வு காண முஸ்லிம் நாடுகள் முன் வர வேண்டும்.

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவர்களின் உரிமையை வழங்குவீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுவே சிறந் தது. அவர் களே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன் 30:38)

அவனை நேசித்ததற்காக ஏழைக் கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக் கும் உணவளிப்பார்கள்.

(அல்குர்ஆன் 76:8)

மேற்கண்ட இறைமறையின் போதனையை சிரமேற்கொண்டு சோமாலிய மக்களின் துன்பம் தீர்க்க முனைவோம். நன்மையின் பலன்களை அதிகப்படுத்தித் தரும் ரமலான் மாதத்தில் அதற்காக முழுமூச்சுடன் பாடுபடுவோம்.

இதற்காக சோமாலிய மக்களுக்கு உதவிகளை அனுப்புமாறு அரசை வலியுறுத்துவோம். மேலும் சோமாலியாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடையை உடனடியாக நீக்க நிர்பந்திக்க வேண்டுமென்றும் அரசை வலியுறுத்துவோம்.

Pin It