srilanka people2009ல் ஈழத் தமிழினத்தை அழித்த சிங்கள ஆட்சியாளர்கள் தற்போது சொந்த மக்களிடத்திலேயே சிக்கியிருப்பதும், மீள முடியாமல் தவிப்பதும் காலத்தின் கோலம் தான்!

சிங்கள மக்களின் இத்தகைய போராட்டம் சிங்கள அரசியலதிகாரத்தில் எந்தவகையான கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதிலிருந்தே இக்கிளர்ச்சியின் திசை வழிப்போக்கைத் தீர்மானிக்க முடியும்

கடந்த 70 ஆண்டுகளாக சிங்கள, பௌத்தப் பேரினவாதத்தால் தமிழர்கள் அரசியல், பொருளியல் தளத்தில் பாதிக்கப்படும் போதும் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த போதும் அதை ஆதரிக்காத சிங்கள மக்கள் தற்போது கிளர்ந்தெழுவது தங்கள் மீதான பொருளியல் தாக்குதலை எதிர்த்து மட்டுமே மாறாக சிங்கள,பௌத்தப் பேரினவாதத்தை இவர்கள் தற்போது எதிர்க்க வில்லை அதனாலேயே சிங்கள, பௌத்தப் பேரினவாதமும் தற்போது இவர்களை எதிர்க்கவில்லை, மௌளம் காக்கிறது!

ஆக! சிங்கள மக்களின் தன்னெழுச்சியான இப்போராட்டம் சிங்கள, பௌத்தப் பேரின வாதத்தை எதிர்க்கும் அரசியல் போராட்டமாக வளர்த்தெடுக்கப் பட்டால் மட்டுமே சிங்கள மக்கள் தற்போதைய பொருளியல் நெருக் கடியிலிருந்து மீளமுடியும். அப்படியான சூழல் உருவானால் ஈழத்தமிழர்களும் சிங்கள மக்களின் போராட்டத்திற்கு துணை நிற் பார்கள்! இதுவே வீழ்த்தப்பட்ட ஈழ அரசியல் உலக அரங்கில் மீள எழும்புவதற்கான சூழலை உருவாக்கும் தாய்த்தமிழகம் இப்படியான ஒரு சூழல் உருவாகும்போது துணை நிற்பது முக்கியமான அரசியல் கடமை!

ஆக! சிங்கள மக்களின் கிளர்ச்சி சிங்கள, பௌத்தப் பேரினவாத்தை எதிர்த்த அரசியல் போராட்டமாக மாற்றமடையட்டும்!

செந்தமிழ்க்குமரன், தமிழின உணர்வாளர் கூட்டமைப்பு

Pin It