periyar 450திரு. சி. ராஜகோபாலாச்சாரியார் சட்டத்தை மீறினாரென்று அரஸ்ட் செய்யப்பட்டு 6-மாத வெருங்காவல் தண்டனையும் 200 ரூ. அபராதமும் அடைந்தார். சிறைக்குப் போகும் போது தமது தலைமை ஸ்த்தானத்தை வெகு ஜாக்கிரதையாக திரு.சந்தான அய்யங்காரிடமே ஒப்புவித்து விட்டுப் போயிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஏனெனில் திருவாளர் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் “திரு ஆச்சாரியர் சிறைசெல்ல நேர்ந்தால் தான் அந்த ஸ்தானத்தை ஏற்று நடத்துகிறேன்” என்று ஒப்புக் கொண்டிருந்தும் கூட அவரிடம் தலைமை ஸ்த்தானத்தை ஒப்புவிக்காமல் ஒரு அய்யங்காரிடமே ஒப்புவித்து விட்டுப் போனது மிகவும் சாமர்த்தியமேயாகும்.

ஒத்துழையாமை காலத்திலும் கூட திரு. ஆச்சாரியார் தனது தலைமை ஸ்த்தானம் காலி செய்ய நேர்ந்தபோதெல்லாம் திரு. ஸ்ரீனிவாசய்யங்காரிடமோ திரு. ராஜனிடமோ தான் ஒப்புவிப்பதில் கவலையாகவே இருந்தவர்.

ஆதலால் இப்போதும் ஜாக்கிரதையாகவே இருந்தது பாராட்டத் தக்கதே,

(குடி அரசு - செய்தி விளக்கம் - 04.05.1930)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.