கீற்றில் தேட...

கோடி கோடியாய்க்
கொள்ளையடித்துவிட்டு
கோபுரத்தில்
அமர்ந்திருக்கிறார்கள் - அவர்கள்
கோணித்துணியை இடுப்பில்
கட்டி குடிசையில்
வாழ்கிறார்கள் இவர்கள்

எதை வேண்டுமானலும்
செய்யலாம் எதிர்க்க
ஆளில்லை - அங்கே
எதுவும் செய்வதற்கில்லை
ஏழ்மையில் வாடுகிறார்கள்
ஏழைகளாய் - இங்கே

இந்தியா சமத்துவ நாடு
இந்தியா சமதர்ம நாடு
இந்தியா மக்களாட்சி நாடு
இந்தியா ஜனநாய நாடு
வரலாற்றுப் பாடத்தில் கற்றுள்ளேன்

"இந்தியா பணக்காரர்களின் நாடு
வாழ்க்கைப் பாடத்தில்
கற்றுக் கொண்டேன்'
விடியல் எங்கே? வருங்கால
விளக்குகளின் கேள்வி!

- த.மங்கையர்க்கரசி
வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி
உடுமலை

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.