உயிருக்குள் உயிர் சுமந்து
உயிரையே உரமாக்கி
பேர் சொல்ல பிள்ளை வேண்டி
பெற்றெடுத்த தன் பிள்ளையை
பாசமென்னும் பாலூட்டி
பண்பென்னும் தொட்டிலில்
கண்ணுறங்கும் வரை
காத்திருந்து உறங்கியவள்

முத்தான தன் குழந்தை
முதல்வனாக வர எண்ணி
மூட்டைகள் பல சுமந்து
முதல் வகுப்பில் சேர்த்து
களைப்பில்லாமல் உழைத்து
கல்லூரியில் சேர்த்தவர்
பணத்தை துச்சமாக எண்ணி
பதவியில் சேர்த்தவர்

இன்று
தன் பிள்ளை உழைத்து
புதிதாக வீடுகட்டியுள்ளான்
என எண்ணி, மகிழ்ந்து
கண் மூடினர்...
முதியோர் இல்லத்தில்!!!

- டி.மங்கையர்கரசி
வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி
உடுமலை

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.