19 ஆண்டுகளாக ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் சிறையில் இருக்கிறார் நளினி. முருகனுக்கும் நளினிக்கும் பிறந்த அரித்திரா புலத்து நாடொன்றில் பெற்றோர் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார். ராஜீவின் கொலை சோனியாவுக்கும் அவரது அரசியல் வாரிசுகளுக்கும் அதிகாரத்தைக் கொண்டு வந்து சேர்த்தது போல அரித்திராவுக்குக் கொண்டு வந்து சேர்க்கவில்லை. சில நேரங்களில் குழந்தை தாயைப் பார்க்கவே அனுமதிக்கப்பட்டதில்லை. ஒவ்வொரு முறையும் கடுமையான நீதிமன்ற போராட்டங்களுக்குப் பின்னரே உயர்ந்த மதிற்சுவர்களுக்குள் அவர்கள் சந்த்தித்துக் கொண்டார்கள். சில நேரங்களில் நளினியின் மீது கருணை காட்டுவது போன்ற பாவனையை எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ  என்ற இயற்பெயரைக் கொண்ட இத்தாலி நாட்டவரான சோனியாகாந்தியின் குடும்பத்தினர் வெளிப்படுத்தி வந்தனர். ப்ரியங்கா வேலூர் சிறைக்கு வந்து நளினியைச் சந்தித்து  மனம் விட்டுப் பேசியதாக ஊடகங்கள் கதறின. ஆனால் அந்தச் சந்திப்பு நடந்த சில மாதங்களில் துவங்கியது வன்னி மீதான இன அழிப்புப் போர்.

karunanidhi_200இப்போது போர் முடிந்து ஒரு வருடம் ஆகப்போகிற நிலையில் வடக்கில் சில ஆயிரம் மக்களை குடியேற்றும் போது இயல்பாக ஒரு கேள்வி எழுகிறது. ப்ரியங்கா , நளினியை வேலூரில் சந்தித்தபின்பு வன்னியில் இருந்த நான்கு லட்சம் மக்களில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் எண்ணிக்கையில் குறைந்திருக்கிறார்களே அவர்கள் எங்கே போனார்கள் என்ன ஆனார்கள்? நளினியின் இந்தச் சந்திப்புக்கும் போர் வெறி பிடித்த சோனியா ஈழ மக்களிடம் காட்டிய கருணைக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா? இதுதான் காந்தி வாரிசுகளின் கருணையா என்றெல்லாம் கேட்பதற்கு கேள்விகள் இருந்தாலும் இந்தக் கேள்வியை அங்கிருந்து தொடங்குவதை விட நமது முதுகிலிருந்து தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும்.

ராஜீவ் கொலையில் தண்டனைக்குள்ளாகி 19 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி  2007ம் ஆண்டு தன்னை விடுதலை செய்யுமாறு தமிழக அரசிடம் விண்ணப்பித்தார். அப்போது போர் இல்லை. தமிழர்களை காப்பாற்றக் கோரி யாரும் கருணாநிதியிடம் கெஞ்சவும் இல்லை. ஆனாலும் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு அக்கோரிக்கையை  நிராகரித்தது. தமிழக அரசால் நிராகரிக்கப்பட்ட அந்த கோரிக்கை நிமித்தம் 2008ம் ஆண்டு உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் நளினி. 2008‍ம், போய் 2009-ம் போய் இப்போது 2010-ம் வந்து விட்டது இடையில் ஓடிக் கழிந்த இந்த இரண்டு ஆண்டுகளில் ஈழத் தமிழர்களிடம் கருணாநிதி காட்டிய கருணையைத்தான் நாம் எல்லோரும் பார்த்தோமே! முடிந்த அளவு உதவி செய்யாமல் போனது மட்டுமல்ல விடுதலைக்காக போராடிய போராளிகளையும் செத்து விழுந்து பாடையில் போன ஈழ மக்களையும் அல்லவா இந்த மனிதர் இழிவு செய்தார். இந்தக் காயங்களை எங்கே ஆற்றுவது எப்படிப் போக்குவது என்று ஒரு இனமே தவித்து நின்றபோது, கருணா சொன்னார் “நான் உள்ளுக்குள் அழுகிறேன். எனது மௌனவலி யாருக்குத் தெரியும்?” என்றார். இதோ கருணாவின் மௌனவலியைப் புரிந்து கொள்ள இன்னொரு சந்தர்ப்பம் நமக்கு வாய்த்திருக்கிறது.

இப்போது யாரும் போர் நிறுத்தம் கேட்கவில்லை, மக்களைக் காப்பாற்றக் கேட்கவில்லை. பதவியை விட்டு கீழே இறங்குங்கள் என்று யாரும் சொல்லவில்லை. ஒரே கோரிக்கைதான் ஆயுள் கைதியாக 19 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஒரு பெண்ணை விடுதலை செய்யுங்கள் என்கிறோம். கருணை வழியும் தாயுள்ளமே, திராவிடத்தின் திரு உளமே ஒரு தாயை விடுதலை செய் என்கிறோம். நான் மட்டுமல்ல மனித உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல் சக்திகள் என எல்லோருமே இணைந்து கவிஞர் தாமரையின் முன் முயற்சியில் ஒரு மனுவும் தயாரித்து 'கருணை உள்ளம்' கருணாநிதியிடம் நேரடியாகவே கொடுக்கப்பட்டது.

நளினி தன்னை விடுவிக்கக் கோரி கொடுத்த மனுவும் நளினியை விடுவிக்கக் கோரி கவிஞர் தாமரை கொடுத்த மனுவுக்குமிடையில கழிந்த இந்த இரண்டாண்டுகாலத்தில் மிகக் குறுகிய நிலப்பகுதிக்குள் பாதுகாப்பு வலையம் என்ற பெயரில் எம் மக்களை அழைத்து வந்து கூட்டுக் கொலை செய்தது இந்தியாவும் இலங்கையும் அதற்கு மௌனமாக துணைபோனார் கருணாநிதி. போருக்கு ஆதரவான மௌனம் ஒரு பக்கம் இருந்தாலும், நளினியின் விடுதலையில் கருணாநிதி கட்டிய மௌனம் அதை விட தந்திரமானது. 2008 -ல் நளினி தாக்கல் செய்த மனுவுக்கு வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கினார். கிளிநொச்சியில் தொடங்கி அவர்கள் ஓடினார்கள் ஓடினார்கள் வாழ்க்கையின் விழிம்புக்கே ஓடினார்கள் என்கிற பராசக்தி வசனம் போல முள்ளிவாய்க்கால் வரை இரண்டு வருடமாக மக்கள் ஓடியது போல நளினியையும் இரண்டு வருடமாக ஓட விட்டார் கருணாநிதி.

ஒரு தனி நபரின் வாழ்க்கை தொடர்பான வழக்கு இது ஆகவே இதில் கால தாமதம் செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்றம் சொல்ல கடைசியில் செயலற்றுக் கிடக்கும் தமிழக அரசின் நிலையைக் கண்டித்த நீதிமன்றம் சிறை ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து அறிக்கை தர வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தும் இடத்தில் இருக்கும் கருணாநிதி வேலூர் மாவட்ட ஆட்சியர் சி.ராஜேந்திரன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அந்தக் குழு மூன்று மணி நேரம் நளினியை விசாரித்து அறிக்கையை தயாரித்து தமிழக அரசிடமும் கொடுத்து விட்டது. வழக்கை விரைந்து முடிக்கும் முன்னறிவிப்போடு கூடிய ‍ உயர்நீதிமன்றத்தில் ஆய்வுக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்ப‌ட ஆய்வுக்குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்றுக் கொள்வதாக ஆய்வுக் குழுவின் குரலில் நளினி விடுதலையை புறந்தள்ளியிருக்கிறார் கருணாநிதி.

செய்கிற அயோக்கியத் தனங்கள் எதையும் தன் குரலில் செய்ய மாட்டார் கருணா. அதுதான் அவரது அரசியல் தந்திரம். நானே அடிமை ஒரு அடிமை எப்படி இன்னொரு அடிமைக்கு உதவ முடியும் என்று பெரியாரின் குரலில் பேசி பொறுப்பைத் தட்டிக் கழித்தது போல ஆய்வுக் குழுவின் குரலில் தீர்ப்பை எழுதி விட்டு இங்கே தப்பித்துக் கொள்கிறார் கருணா. சரி நளினியை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பதற்காக இந்தக் குழு சொல்லியிருக்கும் காரணங்கள் என்ன?

காரணம் -1  நளினி மிகக் கடுமையான குற்றம் புரிந்துள்ளார். முக்கிய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக நளினி உள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் திட்டம் நளினிக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது.

காரணம் -2 நளினியின் மனப்பான்மை மாறவில்லை. அவர் இதுவரை குற்றத்தை ஒப்புக்கொள்ளவும் இல்லை. மன்னிப்பும் கேட்கவில்லை.

காரணம் -3 நளினியின் தாய், சகோதரர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நளினி வெளியில் வந்த தங்குவதற்கு அவருடைய பெற்றோர்கள் பொறுப்பேற்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்ததை கவனத்தில் கொண்டுள்ளோம்.

காரணம்- 4  நளினியின் பெற்றோர் கங்கை அம்மன் தெருவில் தங்கியிருக்கிறார்கள். அது விஐபிகள் வசிக்கும் இடம். அமெரிக்க தூதரகம் போன்ற முக்கியமான அலுவலங்கள் இருக்கக்கூடிய இடமாக அது இருக்கிறது. அங்கு தங்கினால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும்.

காரணம்-5 ஒரு குழந்தைக்கு தாயாக இருப்பதையே நளினி விரும்புகிறார் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது.

naliniகாரணம்- 6  18 ஆண்டுகள் சிறையில் இருந்ததற்காக, முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதையும் ஏற்க முடியாது.

காரணம்- 7  இதற்கு முன்னால் நளினியின் செயல்கள், நடவடிக்கைகள் ஆகியவைகளை ஆராய்ந்துள்ளதால் முன்கூட்டியே அவரை விடுதலை செய்ய முடியாது.

காரணம்- 8  அவரைப் பரிசோதித்த மனோதத்துவ மருத்துவரும் விடுதலை செய்யலாம் என்று உறுதியாகக் கூறவில்லை.

ஒரு ஆயுள் தண்டனைக்கைதி 14 ஆண்டுகள் சிறையில் இருந்த பின் விடுதலை செய்யப்படலாம் என்கிற விதிப்பதி அரசு அறத்தின் படியல்ல நீதியின் படி நடந்திருந்தால் கூட நளினி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே விடுதலை செய்யப்ப‌ட்டிருக்க வேண்டும். ஆனால் நாம் தான் கருணை வழியும் தேசத்தின் குடிமக்கள் அல்லவா? அதனால்தான் அநீதியாக சிறையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெண்ணின் விடுதலையை மறுத்து எட்டு காரணங்களை அடுக்கியிருக்கிறார்கள். ஒரு கொலைச்சதியில் சிக்கி நீண்ட காலமாக சிறை வாழ்வை அனுபவிக்கும் ஒரு பெண் தன் குழந்தையிடம் வாழ விரும்புவதைக் கூட அனுமதிக்காத கருணை.... அதில் நான்காவது காரணத்தைப் பாருங்கள் நளினியை விடுதலை செய்தால் சட்டம் ஒழுங்கு கெடுமாம்.

மூன்றாயிரம் சீக்கிய மக்களைக் கொன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெகதீஸ் டைட்லரும், சஜ்ஜன்குமாரும் சுதந்திரமாக உலவுகிறார்கள். நீண்டகாலமாக சீக்கிய மக்கள் இனப்படுகொலைக்கு எதிராக நீதி கேட்கிறார்கள் இந்தியாவிடம். ஆனால் இன்று வரை மௌனமே சீக்கியர்களுக்கு பதில். ஜெகதீஸ்டைட்லருக்கும், சஜ்ஜனுக்கும் எம்.பி சீட். ஆகா மத்தியில் ஆளும் காங்கிரஸ் தான் அப்படி......... கருணாதான் திராவிடத் திருமகன் ஆயிற்றே நீதி வழுவா நெறி கொண்ட மன்னன் அல்லவா? 'கருணாநிதி குற்றவாளிகளைத் தண்டிப்பார், குற்றவாளிகளை விடுதலை செய்தால் சட்டம் ஒழுங்கல்லவா கெட்டு விடும் என்று அதனால் நீதியாகத்தானே நடப்பார், நளினியின் விஷயத்திலும் அதுதான் நடந்தது' என்று நீங்கள் நினைத்தால் உங்களைப் போன்ற முட்டாள் யாரும் இருக்க முடியாது.

தோழர் லீலாவதியைக் கொன்ற கொலை பாதகர்களுக்கு அண்ணாதுரை பிறந்த நாளில் விடுதலை, அதுவும் நன்னடத்தை விதிகளின் கீழ்...... தினகரன் அலுவலகத்திற்குள் நுழைந்து மூன்று ஊழியர்களை உயிரோடு எரித்துக் கொன்ற அட்டாக் பாண்டி என்னும் திமுக ரௌடிக்கும் விடுதலை. விடுதலை மட்டுமல்ல மதுரை மாவட்ட விவசாயத்துறை ஆலோசனைக் குழு வாரியப் பதவி. தா.கிருட்டிண‌னை அழகிரி கொல்லவில்லை என்று நீதிமன்றம் அவரை நிரபராதி என்று விடுதலை செய்து விட்டது. அப்படியானால் தா.கிருட்டினனை கொன்றது யார்? ஆமாம் யார்தான் கொன்றார்கள். இந்தக் குற்றவாளிகள் எல்லாம் வெளியே வந்தபின்பு கெடாத சட்டம் ஒழுங்கு, நளினி என்ற பெண் வெளிவருவதால் கெட்டு விடப்போகிறாதா? ஒரு வேளை ந‌ளினி மீது சும‌த்த‌ப்ப‌ட்ட‌ குற்ற‌ச்சாட்டு உண்மையென்றே வைத்துக்கொண்டாலும் கூட‌, அவ‌ருக்குப் பின்புல‌மாக‌ இருந்த‌தாக‌ இவ‌ர்க‌ள் சொல்கிற‌ விடுதலைப் புலிக‌ள் இய‌க்க‌ம் த‌ற்போது அழிக்க‌ப்ப‌ட்ட‌ நிலையில், ந‌ளினியின் க‌ண‌வ‌ர் அவ‌ருட‌ன் வெளிவ‌ராத‌ நிலையில், ந‌ளினி என்ற‌ அப‌லைப் பெண் எந்த‌வித‌த்தில் பொதும‌க்க‌ளின் அமைதிக்கு ஆப‌த்தான‌வ‌ர்? ஒரு வேளை க‌ருணாநிதி தான் மிக‌வும் போற்றும் க‌ண்ண‌கி போல், நளினியும் த‌ன‌க்கு இழைக்க‌ப்ப‌ட்ட‌ அநீதிக்காக‌ இந்த‌த் த‌மிழ்நாட்டை அழித்துவிட்டால், த‌ன‌து ம‌க‌ன்க‌ளும், பேர‌ன்க‌ளும் எந்த‌ நாட்டை ஆள்வ‌து என்று யோசிக்கிறாரோ?

த‌னியொரு அபலைப் பெண்ணிடம் இருந்து த‌மிழ‌கத்தின் ச‌ட்ட‌ ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், கல்லக்குடி வீரர், தள‌பதி, அஞ்சாநெஞ்ச‌ன் உள்ளிட்ட‌ ப‌ட்ட‌ங்க‌ளை சும‌ந்து கொண்டு, க‌ண‌க்க‌ற்ற‌ அதிகார‌ங்க‌ளுட‌ன், ஆள் அம்பு சேனையுட‌ன் வ‌ல‌ம் வ‌ரும் நீங்களும் உங்க‌ள‌து மகன்க‌ளும் 23ம் புலிகேசியின் வாரிசுகளாக‌த்தான் உண‌ர‌ப்ப‌டுவீர்க‌ள்!

நளினி விடுதலையை தங்கபாலு, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், சு.சாமி, சோனியா, என எல்லோரும் வெளிப்படையாகவே எதிர்க்கிறார்கள். கருணாநிதியும் எதிர்க்கிறார் என்பது நீதிமன்றத் தீர்ப்பு மூலம் வெளிப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தயவுடன் நடக்கும் தனது ஆட்சியைக் காப்பாற்ற கருணாநிதி எந்த அளவிற்கும் கீழிறங்கி குனிந்து வளைந்து கொடுப்பார் என்பதை கடந்த நான்காண்டுகளாகப் பார்த்து வரும் நமக்கு நளினி வழக்கு மேலும் ஒரு உதாரணம்.

எப்போதும் குனிந்தபடியே இருந்தால் பின்னாடி இருப்பது முதுகெலும்பல்ல என்பதை தமிழக மக்கள் குறித்துக் கொள்கிறார்களோ இல்லையோ, வரலாறு நிச்சயம் குறித்துக் கொள்ளும்.

- யாழ்மகன்

Comments

20 comments

20
பகவன்
யார் சொன்னது எங்கள் தமிழினத்தலைவருக்கு அக்கறை இல்லை என்று? மானாட மயிலாட, ஓடி விளையாடு பாப்பா என்று நாங்கள் தமிழை வளர்த்துக்கொண்டிருக்க இப்படி நளினி, அது இது என்று கேட்டால் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டோம்... 'தலைவர்' தமிழ் விடுதலை பற்றியே எப்போதும் பல்வேறு திரையுலக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிந்திக்க அவரையே இழிவாகப் பேசுகிறீர்களே! கடவுளே ! இது அடுக்குமா?

பி.கு: தலைவர் கலைஞருக்கு, நளினி என்று கூறியதும் நடிகையும் நடிகர் இராமராசனின் முன்னாள் மனைவியும் என்று நினைத்துக் கவலைப்பட்டு கடற்கரைக்குச் சென்று உண்ணாநிலை ஏதும் அறிவித்துவிடாதீர்கள்! அந்த நளினிக்கும் இந்த நளினிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறுதியிட்டுக் கூறுகிறோம்.
அன்பன்
பாராட்டு விழாக்கள் நடத்தி நாலு நடிகைகளை குத்துப்பாட்டுக்கு ஆட விட்டு ரஜினியையும் கமலையும் பாராட்ட விட்டு காது குளிர கேட்பதற்கே நேரமில்லாத க்ருணா நளினிக்காகவா இறங்குவார். போரே நடைபெற விலை என்று சொல்லி இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்த திராவிடக் குஞ்சு இன்னும் என்னென்ன நாடகங்களை நடத்தப் போகிறதோ?
kavinmughil
மஞ்சள் போர்த்தி
நஞ்சு நிரப்பி
நகர்கிறது கருநாகம்

நான்தான் சூரியன்
என்கிற கர்வத்தில்
எரிக்கிறது தன்இனத்தை

சுயமரியாதை பேசி
சுகம்கண்ட அதன்சுயம்
நயவஞ்சகியின் பாதங்களில்
பதவிக்காக பரிதவிக்கிறது

சிலமணிநேரம்
படுத்து எழுந்து
களைத்து அமர்ந்த
அதன் பசிக்கு பரிமாறப்பட்டது
மனிதக்கறி

வீர வசனங்களும்
சோகக் கவிதைகளுமாய்
நாடகம் முடிந்தபோது
எல்லாம் முடிந்துபோனது

நடுத்தெருவில்
பெரியவர் ஒருவர்
சப்தமாய் சொன்னார்

நல்லவன்போல்
இருப்பானாம்
பரம ******
HE HE
MOTTAI THALIKKUM MULANGALUKKUM MUDICHI ...

MUTTAL THANAMANA YOSANI........
Kanthasamy
ராசீவ் கொலை என்பது புலிகள் செய்த ஒரு தற்கொலை நடவடிக்கை. தமிழகத்தின் பரவலான ஆதரவு அலை முற்றிலுமாக ஒழிந்து போனது அதற்குப் பிறகுதான்.. சரியான பின் புலத்தை இழந்ததுதான் அதன் பலன்... திமுக போன்ற கட்சிகள் (திமுக மட்டுமல்ல) ஓரளவு ஆதரவு கொடுத்த நிலையிலும் அதுவும் பறிபோய் விட்டது போனது. முதலில் திமுகவை புரிந்து கொள்ளுங்கள்.. மேலோட்டமாக மட்டுமே தமிழ் உணர்வு திராவிடம் பேசுவார்கள்.. சீட்டுகள் அதிகம் வேண்டும் என்பதால் தான்.. அவர்களிடம் அதிகம் எதிர்ப்பார்த்து உங்கள் குற்றம்தானே தவிர அவர்களுடையது அல்ல என்றே எனக்குப் படுகிறது.. முற்போக்கு பேசி பல கோடிகளை இழக்க அவர்கள் என்ன மடையர்களா...?
kudumabam
குடும்ப சர்வாதிகார கருணாநிதியின் ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழகம் இனி விடியும். ஊடகங்கள்,அல்லக்கைகள், ஊரெங்கும் சொத்து என்று இங்கு இவர்களைத் தாண்டி எதையும் இங்கு செய்ய முடியாத நிலை. ஆக்டோபஸ்களைப் போல ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மனோகரன்
இன்று வரை ராஜீவ் மரணம் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.
இந்த நிலையில் நளினி வெளி வருவதற்கு போதுமான சான்றிதழ்கள் இருந்த போதிலும்
தமிழ்நாடு அரசு சொல்லும் காரணங்களும் நகைபுகுரியது.
Uthayamaran
nalini enna kaunanidhiyai kettu vitta rajiv kolayil pangu petrar. sudhanthiram enpathu kettu vangum pitchai alla. the so called tamil arvalar ellorum onru sernthu sirayai norukki naliniyai veliyil kondu varalam allathu ele thamilar padulolaiyil pangu pettra mathiya arasai ethirthu por puriya munvaralam. athai vittu kalamellam thitti theertha karunanidhi kalil poi vilukirrerkale1 vetkamayillai ungalukku. ungalukkavethan ungal por padai thalapathigal vaiko matrum nedumaran akiyor irukkirarkale melum avargalin udan pirava sagothari jayalalithavaiyum thodarpu kondu ungal poratta muraiyai matri parungal. all the best.
Guest
//த‌னியொரு அபலைப் பெண்ணிடம் இருந்து த‌மிழ‌கத்தின் ச‌ட்ட‌ ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், கல்லக்குடி வீரர், தள‌பதி, அஞ்சாநெஞ்ச‌ன் உள்ளிட்ட‌ ப‌ட்ட‌ங்க‌ளை சும‌ந்து கொண்டு, க‌ண‌க்க‌ற்ற‌ அதிகார‌ங்க‌ளுட‌ன், ஆள் அம்பு சேனையுட‌ன் வ‌ல‌ம் வ‌ரும் நீங்களும் உங்க‌ள‌து மகன்க‌ளும் 23ம் புலிகேசியின் வாரிசுகளாக‌த்தான் உண‌ர‌ப்ப‌டுவீர்க‌ள்!//

யாழ்மகன்! யாரையோ திட்டுவதற்கு பெண்களை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள்?
Y.Inigo Majella
Mister yazmakan avarkalae....

tamilnattil yethhanai pennkal siraichalayieel kulantai eentananar yentru teriuma umakku....tamilaka siraichalaikallil vaazum manitarkalil yethannai perkallin kudumpam anaathaikalaka vaadukirarkal entru teriuma umakku....naliniyai pontra etthanai taymaarkal sirrayeel tannkal kulanthaikalai pirinthu vaadukirargal entravathu teriuma unkalukku.... yen nalini mel intha paritaapam, rajiv kolaiiil todarbu irupathaalaa...
vasu
this is a biased article. It doesn't worth to read.
manju
kuppa thotti echchi thuppa payanpadum. atha thooki aatchiyila kuntha vachchaa nayi nallathaa seyum
thurai iLamurugu
நளினி விடுதலை செய்யவேண்டும் ஏன்? என்பதற்கு ஒரு சரியான காரணம் கூட் சொல்லாமால் ஏண் கதை அளக்க வேண்டும் இன்றைய நிதிமன்ற் தீர்ப்பை படிது பார்ப்பது நல்லது
kumar
nallthoru padaippu, oor arintha visayathai thirumpa thirumpa solvatghinal enthavitha payanum ellai.
இளஞ்செழியன்
அருமையான ஆணித்தரமான பேச்சு...குறிப்பாக, வாதத்தைப் பின்னுக்கிழுக்கும் கோழைகளை கிழி கிழியென கிழிக்கிறார் தோழர். தமிழர்களின் இறையாண்மையைப் பற்றிப் பேசாமல், இந்திய-இலங்கையின் இறையாண்மையப் பற்றிக் கவலைப்படுகிற கழுகுகளின் காலடியில் சிக்கித் திணறுகிறாள் நீதி அன்னை. இது ஏதோ, நளினிக்கெதிரான தீர்ப்பு அல்ல. பல கோடித் தமிழர்களை மிரட்டி வைக்க தீர்ப்பே அளிக்காமல் இழுத்தடிக்கிற குள்ளநரிகளின் கொடுஞ்செயல்.
Ilamaran
சோனியா என்ன சொல்கிராரோ அதை செய்துவிட்டு தனது ஆட்சியை காப்பாற்றி கொண்டால் போதும் என்று கருணாநிதி எண்ணி வெகுகாலம் ஆகிவிட்டது.
இதில் நீதி, மனிதாபிமானம் எதிர் பார்ப்பது நம்மவர்களின் அறியாமை தான். அவர்க்கு இதை எண்ணி எல்லாம் நேரத்தை வீணாக்க எண்ணம் கிடையாது.
கீழ்கண்ட 5 முக்கிய பிரச்சனைகளை களையவே நேரம் போதவில்லை இரவு 11 மணி வரை உழைக்க வேன்டி உள்ளது.
1 . குடும்ப சண்டைகளை தீர்த்து வைக்க ,
2 . கொள்ளை அடித்ததை பங்கு போட,
3 . அடுத்து என்ன இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்றலாம் என யோசிக்க,
4 . வெற்று அறிக்கை விட்டு மக்களை குழப்ப,
5 . பாராட்டு விழாவில் பங்கு கொண்டு நமீதா டான்ஸ் பார்க்க,
anand
We are indian First. Then Tamil. Nalini is a forginer. She is not an Indian. We can't accept nalini and prabakaran. LTTE killed lot of SriLankan tamil leaders than srilankan army. We can.t accept dictertorship. We trust democracy. How we got freedom from English. Take yaser arafat.
raja
yathuvum theriyatha tharkuri eazuthiya katturai.
shiyamala
naliniyai abalai penn endru neengal kooruvadhu kelikuriya seyal.
tamizhan thiru
Thozhar.,Thangaludaiya aanitharamana varthaigalum -varigalum ., tamizh inaththai emaatrum., karunanidhi pondra palarai patriyum sinthikka vaikkirathu., ove oru thamizhanu padikka vendiya vizhayam. thangaludaiyathu

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.