I

காங்கிரஸ்தான் இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத் தும் இந்தியாவின் ஒரே அரசியல் நிறுவனம் என்று அது வலியுறுத்தி வருகிறது; மண்ணுக்கும் விண்ணுக்கும் எட்ட உரிமை கொண்டாடி வருகிறது. அதுமட்டுமல்ல, முசல்மான்களையும் கூட தான் பிரதி நிதித்துவப்படுத்துவதாக ஒரு சமயம் அது உரிமை கொண்டாடி வந்தது. இப்போது அது இவ்வாறு உரிமை கொண்டாடுவதில்லை; எப்படியிருந்தாலும் உரத்து முழக்கமிடுவதில்லை; அல்லது விடாப் பிடியாக இதை வலியுற்றுத்துவதில்லை. ஆனால் தீண்டப்படாதவர் களைப் பொறுத்தவரையில் தான்தான் அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக காங்கிரஸ் மிகவும் அழுத்தம் திருத்தமாக முயலுக்கு மூன்றே கால் என்று சாதித்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் அல்லாத அரசியல் கட்சிகள் எப்போதுமே இதனை மறுத்து வந்துள்ளன. தீண்டப்படாதவர்களும் காங்கிரஸ் தங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக உரிமை கொண்டாடி வருவதை மறுதலிப்பதற்கு என்றுமே தயங்கியதில்லை.

ambedkar 273 copy இந்தக் கடுமையான போட்டியில் விளம்பரத்திலும் பிரசாரத் திலும் தனக்குள்ள அபரிமிதமான வாய்ப்பு வளங்களைக் கொண்டு தீண்டப்படாதவர்களையும் இதர காங்கிரஸ் அல்லாத கட்சிகளையும் காங்கிரஸ் பின்னடையச் செய்திருக்கிறது. இதன் விளைவு என்ன? இந்திய விவகாரங்களில் அக்கறை கொண்ட பெரும்பாலான அயல் நாட்டினர் இந்தப் பிரசார மாயைக்கு இரையாகி இருக்கின்றனர்; காங்கிரசின் கூற்றை உண்மையென நம்பவும் தொடங்கியுள்ளனர்.

பிரசாரம் ஒன்றையே உலகம் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலைமை நிலவும் வரை அயல்நாட்டவரை காங்கிரஸ் வெகு எளிதாக ஏமாற்றி விட முடிந்தது. எல்லோரையும் தாந்தான் பிரதிநிதித்துவப்படுத்து வதாக காங்கிரஸ் உரிமை கொண்டாடி வருவதை மறுக்கும் ஏனை யோருக்கு எத்தகைய பக்கபலமும் இல்லாதிருந்தது. நிலைமையைச் சமாளிக்க அவர்களுக்கு எந்த வாய்ப்பு வசதியும் இல்லை. ஆயினும் 1937ல் மாகாண சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களுக்குப் பிறகு நிலைமை மாற்றமடைந்திருக்கிறது. பிரசார பலம் கொண்ட பொதுவான அறிக்கைகளைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக இப்போது தேர்தலில் ஒவ்வோரு கட்சியினரும், ஒவ்வோரு சமூகத்தினரும் பெற்ற இடங்களையும் வாக்குகளையும் கொண்டு இப்பிரச்சினையில் திட்ட வட்டமாக முடிவுக்கு வரமுடியும்; வெறும் பிரசாரத்தை விட மிகவும் திட்டவட்டமாகவும் துல்லியமாகவும் நிலைமையை மதிப்பிடு வதற்கு இது மிகச் சிறந்த வழியாகும்.

தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகின்றன? காங்கிரஸ் கைப் பற்றிய மொத்த இடங்கள் எத்தனை? காங்கிரஸ் பெற்ற மொத்த வாக்குகள் எவ்வளவு?

முதலாவதாக, காங்கிரஸ் கைப்பற்றிய இடங்களின் எண் ணிக்கையை உறுதிப்படுத்திக் கொள்வோம். தேர்தல்கள் நடைபெற்று முடிந்ததும், காங்கிரஸ் சார்பில் மாகாண சட்டமன்றங்களுக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டவர்கள் அடங்கிய ஒரு விசேட மாநாட்டை காங்கிரஸ் கூட்டிற்று. 1937 மார்ச் 19, 20 தேதிகளில் இந்த மாநாடு புதுடில்லியில் நடைபெற்றது. இது தொடர்பாக காங்கிரஸ் ஒரு தகவல் பிரசுரத்தை வெளியிட்டது. சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் உறுப்பினர்களின் பெயர்கள் அதில் வெளியிடப்பட்டிருந்தன. அந்தத் தகவல்கள் துல்லியமாக இருக்கக்கூடும் என்ற கருத்தில் ஒவ்வொரு மாகாண சட்டமன்றத்திலும் காங்கிரசின் பலம் பின்வருமாறு அமைந்திருந்தது:

அட்டவணை - 6

மாகாண சட்டமன்றங்களில் காங்கிரசின் பலம்

மாகாணம்

சட்டமன்றத்தின் மொத்த இடங்கள்

சட்டமன்றத்தில் காங்கிரசின் பலம்

அசாம்

108

 35

வங்களாம் 250  60
பீகார் 152  95
பம்பாய் 175  85
மத்திய மாகாணம் மற்றும்  பேரார்

112

 70
சென்னை 215  159
ஒரிசா 60  36
பஞ்சாப் 175  18
சிந்து 60  8
ஐக்கிய மாகாணங்கள் 228  134
வ.மே.எ.மா.   50    19
 மொத்தம் 1585

 719

அட்டவணை – 7

மாகாண மேலவைகளில் காங்கிரஸ் பலம்

மாகாணம் மொத்த மேலவை இடங்கள் மேலவையில் காங்கிரசின் பலம்
அசாம் 18 இல்லை
வங்காளம் 57 10
பீகார் 26 8
பம்பாய் 26 14

சென்னை

46

26

 மொத்தம்

173

58

இரண்டு அவைகளையும் எடுத்துக்கொண்டால் மொத்த இடங்கள் 1,758ல் காங்கிரஸ் 777 இடங்கள் பெற்றிருப்பதை இந்த அட்டவணைகள் காட்டுகின்றன. காங்கிரஸ் பெரும்பான்மை கட்சி அல்ல என்பது இதிலிருந்து தெளிவாகிறது. மொத்தம் இடங்களில் பாதியடைக்கூட அது பெறவில்லை.

இடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் காங் கிரசின் நிலைமை இதுதான். வாக்காளர் பலத்தைப் பொறுத்தவரையில் காங்கிரசின் நிலைமை என்ன? வாக்காளர் எண்ணிக்கையில் கூட காங்கிரஸ் சிறுபான்மையாகவே இருப்பதைப் பின்வரும் அட்ட வணையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

அட்டவணை 8

தேர்தலில் காங்கிரசும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளும் பெற்ற வாக்குகளின் விவரம்

மாகாணம் மொத்த வாக்குகள் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் காங்கிரஸ் அல்லாத கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகள்
சென்னை   கீழவை  4,327,734  2,658,966  1,668,768
மேலவை  33,511    16,907    16,604  

பம்பாய்

கீழவை

 3,408,308

 1,568,093

 1,840,215

மேலவை  23,730    9,420    14,310  

வங்களாம்

கீழவை

 3,475,730

 1,055,900

 2,419,830

மேலவை

 5,593  

 1,489  

 4,104  

உ.பி

கீழவை

3,362,736

1,899,325

1,463,411

மேலவை  4,318    1,580    8,215  

பீகார்

கீழவை  1,477,668  899,642  1,529,669
மேலவை    4,318  96  4,222
பஞ்சாப் கீழவை

 1,710,934

 181,265

 1,529,669

ம.மா. கீழவை

 1,317,461  

 678,265  

 639,196  

அசாம் கீழவை  522,332  129,218  393,114
மேலவை  2,623  இல்லை  2,623
வ.மே.எ.மா. கீழவை கீழவை  

 179,529

 43,845

 135,684

ஒரிசா கீழவை கீழவை

 304,749

 198,680

 106,069

சிந்து கீழவை கீழவை

 333,589

 18,944  

 314,645    

 மொத்தம்  20,500,340  9,454,635  11,04,705

இந்தப் புள்ளிவிவரங்களைத் தெரிந்துகொள்வது மட்டும் போதாது. இதர சந்தர்ப்ப சூழ்நிலைமைகளையும் கருத்தில் கொண்டு அவற்றைப் படிக்க வேண்டும். இத்தகைய முதலாவது சந்தர்ப்ப சூழ்நிலை வாக்குரிமையின் அளவாகும். மற்றொன்ரு தேர்தலில் இரு கட்சிகளின் ஒப்பீட்டு நிலைமையாகும். இந்த இரண்டு அம்சங் களையும் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் தேர்தல் முடிவுகளின் முக்கியத்துவம் முழுவதையும் புரிந்துகொள்வது சாத்தியமல்ல. வாக்குரிமையைப் பொறுத்தவரையில் மிக அதிகம்; ஆனால் மொத்த மக்கட் தொகையுடன் ஒப்பிடும்போது வாக்காளர் தொகுதி உண்மையில் மிகவும் குறைவு. எவ்வாறு மக்கட் தொகையில் ஒரு சிறு பகுதி வாக்காளர் தொகுதியாக அமைந்திருக்கிறது என்பதை கீழ்க்கண்ட அட்டவணையில் தரப்பட்டுள்ள புள்ளி விவரங்களி லிருந்து தெரிந்து கொள்ளலாம்.

அட்டவணை - 9

மாகாணம் மக்கட் தொகை (1931) வாக்காளர்கள்

சென்னை

 47,193,602

 6,145,450

பம்பாயும் சிந்தும்

 26,398,997

 3,249,500

வங்காளம்

 51,087,338

 6,695,483

உ.பி

 49,614,833

 5,335,309

பஞ்சாப்

 24,018,639

 2,686,094

பீகாரும் ஒரிசாவும்

 42,329,583

 2,932,454

ம.மா

 17,990,937

 1,741,364

அசாம்

 9,247,857

 815,341

வ.மே.எ.மா.

 4,684,364  246,609

 மொத்தம்

 272,566,150

 29,847,604

மொத்த மக்கட்தொகையில் சுமார் 10 சதவீதத்தினர் மட்டுமே வாக்களிக்கம் உரிமை பெற்றுள்ளனர். வாக்களிக்கும் தகுதி மிக உயர்வாக நிர்ணயிக்கப்பட்டதால் மத்தியதர மற்றும் அறிவுத்துறை வர்க்கத்தினரே வாக்காளர் பட்டியலில் மிகப் பெரும் இடத்தைப் பெற்றுள்ளனர்; இந்த ஒரு வர்க்கத்தினருமே தீவிர காங்கிரஸ் ஆதர வாளர்கள் ஆவர். காங்கிரஸ் கட்சியின் மற்றும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஒப்பீட்டு நிலைமையைப் பரிசீலிக்கும்போது பின்கண்ட விசேட அம்சங்களைக் கருத்திற் கொள்வது அவசியம். காங்கிரசிடம் தேர்தல் களத்திற்கான பணவசதி, ஸ்தாபன அமைப்பு போன்ற எல்லாப் போர்த்தளவாடங்களும் குவிந்திருந்தன. காங்கிரஸ் அல்லாத வேட் பாளர்களுக்கோ பணபலமும் ஸ்தாபன பலமும் இல்லை.

காங்கிரஸ் வேட்பாளர்கள் பொதுமக்களின் செல்லப்பிள்ளையாக இருந் தனர். அவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பரம வைரிகளாகவும், நாட்டின் விடுதலைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடுபவர் களாகவும் இருந்தனர். சிறைவாழ்க்கை காங்கிரஸ் வேட்பாளர் களுக்கு தியாகிகள் என்னும் ஒளிவட்டத்தை அளித்தது. சிறைக்குச் செல்லாத எவரும் காங்கிரஸ் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்ற பொது விதி கடைப்பிடிக்கப்பட்டது.

காங்கிரஸ் அல் லாத வேட்பாளர்கள் பிரிட்டிஷாரின் கைப்பாவைகளாக, நாட்டுக் காக சேவையோ, தியாகமோ செய்யாதவர்களாக, பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தின் ஏஜெண்டுகளாக, கூலிக்கு மாரடிப்பவர்களாக, துண்டு துணுக்குகளுக்காக நாட்டின் நலன்களைப் பேரம்பேசி விற்பவர்களாக காங்கிரஸ்காரர்களால், பத்திரிகைகளால் படம்பிடித்துக் காட்டப்பட் டனர்; இந்தியாவில் காங்கிரஸ் பத்திரிகைகள் தவிர வேறு பத்திரிகை கள் எவையும் இல்லை என்பதை ஏற்கெனவே கூறியிருக்கிறேன். காங்கிரஸ் வேட்பாளர்களுக்குச் சாதகமாகவும், காங்கிரசல்லாத வேட்பாளர்களுக்குப் பாதகமாகவும் இருந்த மற்றொரு அம்சத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

1920 ஆம் வருட மாண்டேகு-செம்ஸ் போர்டு சீர்திருத்தங்களை காங்கிரஸ் பகிஷ்கரித்து விட்டது; எனவே, நாட்டின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட சீர்கேடுகளுக்கும் குறைபாடு களுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பதிலளிக்க வேண்டியிருக்க வில்லை. காங்கிரஸல்லாத வேட்பாளர்களின் நிலைமை அப்படி யல்ல; இந்தச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி, நிர்வாகப் பொறுப்பு களைத் துணிச்சலோடு ஏற்றுக்கொண்டோரின் மத்தியிலிருந்து வந்த வர்கள் இவர்கள். எனவே, அவர்களது ஆட்சியின்போது நேரிட்ட பல தவறுகளுக்கும், குற்றம் குறைகளுக்கும், பெரும் பிழைகளுக்கும் காங்கிரசல்லாத வேட்பாளர்கள் பதிலளிக்க வேண்டியிருந்தது. அதுமட்டுமல்ல, காங்கிரசல்லாத கட்சிகள் தாம் வகித்த பதவிகளைத் துஷ்பிரயோகம் செய்து அவற்றை மாசுபடுத்திவிட்டன என்று குற்றம் சாட்டப்பட்டது; இந்தப் பழி அக்கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர் கள் மீதும் விழுந்தது.

ஆனால் அதேசமயம் காங்கிரஸ் வேட்பாளர் களோ இந்த அழுக்குகளையும் இழுக்குகளையும் துடைத்தெறியப் போகும் தேவதூதர்களாக சித்தரிக்கப்பட்டு, தலைமீது தூக்கிவைத்துக் கொண்டாடப்பட்டனர். இத்தகைய சூழ்நிலைமையில், தராசு காங் கிரஸ் பக்கம் எவ்வாறு சாய்ந்திருந்தது. பகடைக் காய்கள் அவர் களுக்கு எவ்வாறு சாதகமாக இருந்தன என்பதைக் கண்டவர்கள் தேர் தலில் காங்கிரசின் நிலை பரிதாபகரமாக இருந்ததைக் கண்டு வியப் படையாமல் இருக்க முடியாது. அபரிமிதமான வாய்ப்பு வளங்களை யும், பெரும் செல்வாக்கையும், பொதுமக்களின் ஆதரவையும் அனு தாபத்தையும் பெற்றிருந்த காங்கிரஸ் நியாயமாக மிக அமோகமாக வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் மொத்த இடங்களிலும் சரி, வாக்குகளிலும் சரி காங்கிரசால் ஐம்பது சதவீதத்தைக் கூடப் பெற முடியாமற் போனது பரிதாபகரமானதாகும். எல்லா வர்க்கங்களையும் சமூகங்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவதாக காங்கிரஸ் கொண்டாடும் உரிமை உண்மையில் ஆதார அடிப்படையில்லாத வெற்றுக் கோஷம்தான் என்பதில் இதற்கு மேலும் ஐயம் ஏதும் இருக்க முடியுமா?

II

தீண்டப்படாதவர்களை தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாக காங்கிரஸ் உரிமை கொண்டாடுவதைப் பற்றி இனி பார்ப்போம். 1937ல் நடைபெற்ற தேர்தல் முடிவுகளை அடிப்படையாக வைத்து இந்த உரிமை கொண்டாடலைப் பற்றி இப்போது நாம் முடிவு செய்ய முடியும். தீண்டப்படாதவர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பதற்கு வகுக்கப்பட்ட தேர்தல் திட்டம் குறித்து நன்கு அறியாதவர்கள் காங் கிரசுக்கும் தீண்டப்படாதோருக்கும் இடையே நடைபெற்ற தேர்தல் போட்டிகளின் முடிவுகளைச் சரியாகப் புரிந்துகொள்வது சாத்திய மில்லை என்று அஞ்சுகிறேன். எனவே, குறிப்பாக அயல்நாட்டினருக் காக இந்தியாவின் தேர்தல் முறையை முதலில் விளக்கிக் கூறுவது அவசியம் என்று கருதுகிறேன். தேர்தல் முறையில் அடங்கியுள்ள பின்வரும் நான்கு அம்சங்களை இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்: (1) வாக்காளர் தொகுதிகள், (2) வாக்களிக்கும் உரிமை, (3) தேர்தலில் வேட்பாளராக நிற்கும் உரிமை, (4) யார் வெற்றி பெற்ற வேட்பாளர் என்பதை நிர்ணயிக்கும் விதிமுறைகள்.

1. 1935 ஆம் வருட இந்திய அரசாங்கச் சட்டத்தின்படி அங்கீ கரிக்கப்பட்ட இரண்டு விதமான வாக்காளர் தொகுதிகள் உள்ளன.

 (1) பிரதேச ரீதியல்லாதவை

 (2) பிரதேச ரீதியானவை

2. பிரதேச ரீதியல்லாத வாக்காளர் தொகுதிகள் என்பவை நிலப் பிரபுக்கள், வர்த்தக சபைகள், தொழிற்சங்கங்கம் போன்ற விசேட நலன்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் நோக்கம் கொண்டவை.

3. பிரதேச ரீதியான வாக்காளர் தொகுதிகள் மூன்று வகைப்படும்:

 (அ) தனியாக பிரதேச ரீதியான வாக்காளர் தொகுதிகள்; இவை தனி வாக்காளர் தொகுதிகள் எனச் சுருக்கமாக அழைக்கப் படுகின்றன.

 (ஆ) பொது பிரதேச ரீதியான வாக்காளர் தொகுதிகள்

 (இ) தனி இடங்கள் ஒதுக்கப்பட்ட கூட்டு பிரதேச ரீதியான வாக்காளர் தொகுதிகள்; இவை பொதுவாக கூட்டுத் தொகுதிகள் என அழைக்கப்படுகின்றன.

4. தனி வாக்காளர் தொகுதிகள் என்பவை வகுப்புவாரித் தொகுதி களாகும். இவை முஸ்லீம்கள், இந்தியக் கிறித்தவர்கள், ஐரோப்பியர் கள், ஆங்கிலோ-இந்தியர்கள் போன்ற குறிப்பிட்ட வகுப்பினர் களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டவை. ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திலுள்ள இந்த வகுப்புகள் ஒவ்வொன்றையும் சேர்ந்த வாக்காளர்கள் மற்றவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு தனி வாக்காளர் தொகுதிகளாக அமைக்கப்படுகின்றனர். இவர்கள் முற்றி லும் தங்கள் சொந்த வாக்குகளைக் கொண்டு தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒரு வாக்காளரைத் தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கின்றனர்.

தனி வாக்காளரைத் தொகுதியின் ஒரு முக்கியமான அம்சம் என்ன வென்றால், தனி வாக்காளர் பட்டியல் மூலம் நடைபெறும் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்களே வாக்களிக்க முடியும்; அவ்வாறே அவர்கள் தான் தேர்தலி போட்டியிடவும் முடியும். அது ஒரு முஸ்லீம் தொகுதியாக இருந்தால் வாக்காளரும் சரி, வேட்பாளரும் சரி முசல்மானாகவே இருக்க வேண்டும்; அது ஒரு கிறித்தவத் தொகுதியாக இருந்தால் வாக்காளரும் வேட்பாளரும்   கிறித்தவராகவே இருக்க வேண்டும். இத்யாகி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அளித்த பெரும்பான்மையான வாக்குகளைக் கொண்டு தேர்தல் முடிவு தீர்மானிக்கப்படுகிறது.

5. ஒரு பொதுத் தொகுதி என்பது தனித் தொகுதி முறைக்கு வெளியே உள்ள ஒரு பிரதேசத்தில் வசிக்கும் எல்லா சமூகங்களை யும் சேர்ந்த வாக்காளர்களையும் கொண்ட ஒரு தொகுதியாகும். இதில் எந்த ஒரு சமூகமோ, சமயமோ எத்தகைய முக்கியத்துவமும் பெறாத தால் இது பொதுத் தொகுதி எனப்படுகிறது. முஸ்லீம்கள், இந்தியக் கிறித்தவர்கள், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள் தவிர்த்த ஏனைய வாக்காளர்கள் அடங்கிய தொகுதி என இதனைக் கூறலாம். ஒரு பொதுத் தொகுதியில்:

 (அ) தனித்தொகுதியைச் சேர்ந்த ஒரு வாக்காளருக்கு வாக் களிக்கவோ அல்லது தேர்தலில் நிற்கவோ உரிமை இல்லை.

 (ஆ) இதன் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ் வொரு வாக்காளரும் சாதி, மத, வகுப்புப் பாகுபாடின்றி வாக்களிக் கவும், தேர்தலில் நிற்கவும் உரிமை பெற்றிருக்கிறார்.

 (இ) வாக்களிக்கப்பட்ட வாக்குகளில் சாதாரண பெரும் பான்மையைக் கொண்டு தேர்தல் முடிவு தீர்மானிக்கப்படுகிறது.

6. கூட்டுத்தொகுதி என்பது தனித்தொகுதியும் பொதுத் தொகுதி யும் இணைந்த ஒரு கலப்புத் தொகுதியாகும். தனித் தொகுதியுடனும் பொதுத் தொகுதியுடன் இது சில பொது அம்சங்களைக் கொண்டுள் ளது. ஆனால் அதேசமயம் இதர பல அம்சங்களைக் கொண்டுள் கிறது. இதில் உடன்பாடான அம்சங்களும் வேறுபட்ட அம்சங்களும் கீழே தரப்படுகின்றன:

(அ) தனித் தொகுதியுடம் கூட்டுத் தொகுதியின் ஒப்பீடு

(1) ஒருகுறிப்பிட்ட சமூகத்திற்கு ஓர் இடத்தை ஒதுக்க வேண் டும் என்ற நோக்கம் கொண்டிருக்கும் வகையில் கூட்டுத்தொகுதியும் தனித்தொகுதியும் ஒத்த இயல்பை கொண்டிருக்கின்றன.

(2) கூட்டுத் தொகுதி தனித்தொகுதியிலிருந்து பின்கண்ட இரண்டு அம்சங்களில் வேறுபடுகிறது:

(அ) தனித்தொகுதியில் வாக்களிக்கும் உரிமை அந்த  இடம் எந்த சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறதோ அந்த  சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு மட்டுமே உண்டு.  ஆனால் கூட்டுத்தொகுதியில், அதன் இடம் ஒரு குறிப்பிட்ட  சமூகத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், வேறுவிதமாகச் சொன்  னால் தேர்தலில் போட்டியிடும் உரிமை குறிப்பிட்ட சமூ  கத்தைச் சேர்ந்த உறுப்பினருக்கு மட்டுமே உண்டு என்ற  போதிலும் அந்த இடத்திற்காக நடைபெறும் தேர்தலில் பொதுத் தொகுதியைப்போல் ஏனைய சமூகத்தினரும் வாக்  களிக்க உரிமை பெற்றிருக்கின்றனர்.

(ஆ) இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் பெரும்பான்மை  வாக்குகளின் அடிப்படையில் தேர்தல் முடிவு அறிவிக்கப்  படுகிறது. ஆனால் தனித்தொகுதி விஷயத்தில் வேட்பாளர்  எந்த சமூகத்தைச் சேர்ந்தவரோ அந்த சமூகத்தைச் சேர்ந்த  பெரும்பான்மையான வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்  றிருக்க வேண்டும். ஆனால் அதேசமயம் கூட்டுத் தொகுதி  யில் பெரும்பான்மையை என்பது வேட்பாளர் சார்ந்துள்ள வாக்  காளர்களின் பெரும்பான்மையாக இருக்க வேண்டும் என்பதில்லை.

(ஆ) பொதுத் தொகுதியுடன் கூட்டுத் தொகுதியின் ஒப்பீடு

(1) கூட்டுத்தொகுதி ஒரு விஷயத்தில் பொதுத் தொகுதியை ஒத்ததாக இருக்கிறது: அதாவது இவ்விரண்டிலுமே ஒரு வாக்காளர் பொதுத் தொகுதியில் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார்.

(2) ஒரு கூட்டுத் தொகுதி ஒரு தனித்தொகுதியிருந்து இரண்டு அம்சங்களில் வேறுபடுகிறது:

 (அ) ஒரு பொதுத் தொகுதி ஒரே ஒரு உறுப்பினரைத்  தேர்ந்தெடுக்கம் தொகுதியாக இருக்கலாம். ஆனால்  கூட்டுத் தொகுதி பொதுத் தொகுதிக்கு ஒருவரும்  தனித்தொகுதிக்கு ஒருவருமாக குறைந்தபட்சம் இரு  உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கம் தொகுதியாக இருக்க  வேண்டும்.

(ஆ) பொதுத் தொகுதியில் எந்த ஒரு சமூகத்துக்கும்  இட ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. ஆனால் கூட்டுத்  தொகுதியில் குறைந்தபட்சம் ஓரிடமாவது ஒதுக்கீடு  செய்யப்பட வேண்டும்.

7. கூட்டுத் தொகுதியில் விசேட அம்சங்கள்

ஒரு கூட்டுத்தொகுதி என்பது இடஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு பொதுத் தொகுதியாக பின்கண்ட அம்சங்களுடன் அமைந்திருக்கும்:

(1) பொதுத் தொகுதி என்பது ஒரே உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கம் தொகுதியாகக் கூட இருக்கலாம். ஆனால் கூட்டுத் தொகுதி ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தொகுதியாக இருப்பது அவசியம்.

(2) பொதுத்தொகுதியில் தேர்தல் மூலம் நிரப்பப் பட வேண்டிய இடம் அல்லது இடங்கள் எல்லோருக்குமே பொதுவானவை; தனித்தொகுதிக்கென நிர்ணயிக்கப்பட்ட வர்களைத் தவிர எல்லா சமூகங்களைச் சேர்ந்தவர்களும் போட்டியிட உரிமை பெற்றிருக்கிறார்கள்; வாக்காளர் அல் லது வேட்பாளரின் இனத்தைக் கணக்கிலெடுத்துக் கொள் ளாமல் வேட்பாளர்கள் பெற்ற பெரும்பான்மை வாக்கு களின் அடிப்படையில் தேர்தல் முடிவு தீர்மானிக்கப்படு கிறது. ஆனால் கூட்டுத் தொகுதியில் ஏதேனும் ஒரு குறிப் பிட்ட சமூகத்துக்கு குறைந்தபட்சம் ஓர் இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது: அதாவது இத்தகைய ஒதுக்கீடு செய்யப் பட்ட இடத்துக்காகப் போட்டியிடும் உரிமை அந்த சமூகத் தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே உண்டு.

(3) ஒரு கூட்டுத் தொகுதியில் போட்டியிடும் உரிமை வரையறைக்குட்படுத்தப்பட்டிருந்தாலும் வாக்களிக்கும் உரிமை எவ்வகையிலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை; பொதுத் தொகுதிப் பட்டியலிலுள்ள எல்லா வாக்காளர் களுமே வாக்களிக்கலாம்; இன்னும் சொல்லப்போனால், எந்த சமூகத்திற்காக இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதோ அந்த சமூகத்தைச் சேராத ஏனைய சமூகத்தினரும்கூட ஒதுக் கப்பட்ட இடத்திற்காக வேட்பாளர் தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார்கள்.

(4) ஒதுக்கப்பட்ட இடத்திற்கான தேர்தல் முடிவை அறிவிப்பதில், வெற்றிபெறும் வேட்பாளர் அந்தச் சமூகத்தின் வாக்காளர்களில் குறிப்பிட்ட அளவு வாக்குகளைப் பெற்றாக வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. எந்த சமூகத்திற்காக இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதோ அந்த சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவராகவோ அல்லது ஒன்றுக்கு மேற் பட்டவர்களாகவோ இருந்தால் இவர்களில் மிக அதிகமான வாக்குகள் பெற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக அறி விக்கப்பட வேண்டும்; பொது சமூகத்தைச் சேர்ந்த வேறொரு வேட்பாளர் இவரைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தாலும் அது இவரது தேர்தல் வெற்றியை எவ்விதத்திலும் பாதிக்காது.

இத்தகைய தேர்தல் முறைதான் இந்தியாவில் நிலவி வரு கிறது. இதில் தீண்டப்படாதவர்களுக்குப் பொருந்தக்கூடிய தேர்தல் முறைமேலே 7ஆவது இனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இட ஒதுக் கீட்டுடன் கூடிய கூட்டுத் தொகுதி முறையேயாகும். தீண்டப்படாத வர்களுக்கான இட ஒதுக்கீடு கோட்பாடு எவ்வாறு செயல்படுத்தப் படுகிறது என்றால் தேவையான எண்ணிக்கையில் பொதுத் தொகுதி களைப் பொறுக்கியெடுத்து அவை பன்மை உறுப்பினர் தொகுதி களாக மாற்றப்படுகின்றன; பின்னர் இத்தகைய ஒவ்வோரு தொகுதி யிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்காக ஒன்று அல்லது இரண்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. வெவ்வேறு மாகாணங் களிலும் வெவ்வேறு எண்ணிக்கையில் இத்தகைய கூட்டுத் தொகுதி கள் இருக்கின்றன.

மாகாண சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்ட வகுப் பினருக்கு ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையைக் கொண்டும், ஒவ்வொரு கூட்டுத் தொகுதியிலும் அவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங் களின் எண்ணிக்கையைக் கொண்டும் இந்த இடங்களின் எண் ணிக்கை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் சில அம்சங்கள் நம் கவனத்திற்குரியவையாகும்; ஏனென்றால் தேர்தல் முடிவு களின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது அவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.

கூட்டுத்தொகுதி என்பது ஒரு பொதுத்தொகுதியாகும். ஆனால் இதைவைத்து பொது வாக்காளர்கள் அடங்கிய ஒரு தொகுதி என இதனை எண்ணிவிடக் கூடாது. ஏற்கெனவே நாம் சுட்டிக்காட்டியது போல், முஸ்லீம்கள், இந்தியக் கிறித்தவர்கள், ஆங்கிலோ- இந்தியர் கள், ஐரோப்பியர்கள் போன்றோர்க்கு தனித்தொகுதிகள் அளிக்கப் பட்டுள்ளன; இதன் காரணமாக முஸ்லீம், இந்தியக் கிறித்தவ,ஆங்கிலோ-இந்திய ஐரோப்பிய வாக்காளர்கள் கூட்டுத் தொகுதி யிலிருந்து விலக்கப்படடுள்ளனர். இதன் விளைவாக, கூட்டுத் தொகுதி என்பது தாழ்த்தப்பட்ட வகுப்பினர், இந்துக்கள், பார்சிகள், யூதர்கள் இனங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் மட்டுமே அடங்கிய தொகுதி என்றாகிறது. பார்சிகளும், யூதர்களும் பம்பாயைத் தவிர வேறு இடங்களில் மிகமிகக் குறைந்த எண்ணிக்கையிலேயெ இருப்பதால் கூட்டுத் தொகுதி என்பது உண்மையில் இந்துக்களையும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும் மட்டுமே கொண்டதாக இருக்கிறது.

தீண்டப்படாதவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்வதற்கு தேர்ந் தெடுக்கப்படும் பொதுத் தொகுதி இரட்டை உறுப்பினர் தொகுதியை விடப் பெரியதாக இருந்தாலும், ஒரு பொதுத் தொகுதியில் தீண்டப் படாதவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களை ஒதுக்கீடு செய்ய லாம் என்றாலும், பொதுவாக எல்லா மாகாணங்களிலும் இந்துக் களுக்கு ஓர் இடமும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு இன்னொரு இடமுமாக மொத்தம் இரண்டு இடங்களைக் கொண்ட இரட்டை உறுப்பினர் பொதுத் தொகுதியைத் தேர்ந்தெடுப்பதே வழக்கமாக இருந்து வருகிறது. வங்காளத்தில் மட்டும் தாழ்த்தப்பட்ட வகுப்பின ருக்கு இரண்டு இடங்களை ஒதுக்கும் மூன்று தொகுதிகள் இருக் கின்றன. கூட்டுத் தொகுதி இவ்வாறு ஓர் இணைப்புத் தொகுதியாக விளங்குவருகிறது. இந்தக் கூட்டுத்தொகுதியின் இரண்டு அம்சங் களை இங்கு குறிப்பிடுவது அவசியம்: 

(1) ஒரு கூட்டுத் தொகுதியில் இந்து வாக்காளர்கள் மிக மிகப் பெரும்பானமையினராக இல்லா விட்டாலும் ஏறத்தாழ எப்போதும் பெரும்பான்மையினராக இருந்து வருகின்றனர். அதேசமயம் தாழ்த்தப்பட்ட இன வாக்களர்கள் மிக மிக சிறுபான்மையினராக இல்லாவிட்டாலும் ஏறத்தாழ எப்போதும் சிறுபான்மையினராகவே இருந்து வருகின்றனர்.

(2) தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு நடைபெறும் தேர்த லில் போட்டியிடும் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பு வேட்பாளருக்கு ஓர் இந்து வாக்காளர் வாக்களிக்க முடியும்; அதேபோன்று, இந்துக் களுக்கான இடத்துக்காக நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் ஓர் இந்து வேட்பாளருக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பு வாக்காளர் வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் முறையிலுள்ள சாத்தியக் கூறுகள் என்ன? தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு தங்களது நம்பிக்கை யைப் பெற்ற தாழ்த்தப்பட்ட வகுப்பு வேட்பாளரை தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தேர்ந்தெடுப்பது சாத்தியமா அல்லது தங்களது கையாளும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரது நம்பிக்கையைப் பெறாதவருமான ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பு வேட்பாளரை இந்துக்கள் தேர்ந்தெடுப்பது சாத்தியமா? இந்த சாத்தியக்கூறு பின்வரும் இரண்டு அம்சங்களால் தீர்மானிக்கப்படும்:

(1) இந்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை, (2) இந்துக்களிடையே நிலவும் அரசியல் நிறுவனங் களின் தன்மை. இந்துக்களுக்கு ஓர் இடம் மட்டும் ஒதுக்கப்பட்டு, அவர்கள் ஸ்தாபன ரீதியில் நன்கு அணிதிரண்டவர்களாக இருந் தால் தங்கள் இடத்துக்கான போட்டியைத் தடுக்க முடியும்; அது மட்டுமல்ல, அவர்கள் தங்கள் வாக்குகளை சிதறடிக்காமல் இருக் கும் பட்சத்தில், இந்துக்கள் நிறுத்தும் தாழ்த்தப்பட்ட வகுப்பு வேட் பாளர் வெற்றி பெறுவது திண்ணம். இதற்குக் காரணம் உண்டு; இந்துக்களின் வாக்கு பலம் மிக அதிகமானதால், தாங்கள் தேர்ந் தெடுக்கப்படுவதற்குத் தேவையான வாக்குகள் போக ஏராளமான வாக்குகள் உபரியாக இருக்கும்; தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து தாங்கள் தெரிந்தெடுத்த வேட்பாளருக்கு இந்த உபரி வாக்குகளை அளித்து தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து அவர் வெற்றிபெற உதவ முடியும்.

இந்த விஷயத்தில் ஒரு அம்சம் இந்துக்களுக்குப் பெரிதும் சாதகமாக இருக்கிறது: அதாவது ஒரு கூட்டுத்தொகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வெற்றி பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வாக்காளர்கள் பெரும்பான்மையினராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதே அந்த அம்சம்.

கூடுத்தொகுதி முறையில் காணப்படும் இந்தப் பலவீனங் களை 1937ல் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் எவ்வாறு தனது சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டது என்பதை பின்னால் விளக்குகிறேன். இப்போதைக்கு, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் பொருட்டு வகுக்கப்பட்ட தேர்தல் திட்டத்தையும், அதன் சில அம்சங்கள் எவ்விதம் குறைபாடுடையவையாக இருக்கின்றன என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

III

இப்போது தேர்தல் முடிவுகள் பற்றி ஆராய ஆரம்பிப்போம். இவ்வாறு செய்வதற்கு முன்னர் ஒரு கேள்வியை கேட்பது இங்கு உசிதமாக இருக்கும்; தீண்டப்படாதவர்களை காங்கிரஸ் பிரதிநிதித் துவப்படுத்துகிறது என்ற உண்மையை 1937 ஆம் வருடத் தேர்தல் காட்டுகிறது என்று காங்கிரஸ்காரர்கள் கூறிவருவதம் பொருள் என்ன? இதற்கு விளக்கம் பெறுவது அவசியம்; ஏனென்றால் இதனை இரண்டு வகையில் அர்த்தம் செய்து கொள்ள முடியும். தீண்டப் படாதோருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான தேர்தலில் காங் கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட தீண்டப்படாத வேட்பாளர்கள் காங் கிரஸ் சார்பில் நிறுத்தப்படாத தீண்டப்படாத இன வேட்பாளர் களை எதிர்த்து வெற்றி பெற்றிருக்கின்றனர் என்று இதற்குப் பொருள் கொள்ள முடியும்.

இன்னொருபுறம், இதர தீண்டப்படாத இன வேட்பாளர்களை விடவும் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படாத தீண்டப்படாத இன வேட்பாளர்களை எதிர்த்து வெற்றி பெற்றி ருக்கின்றனர் என்று இதற்குப் பொருள் கொள்ள முடியும். இன்னோரு புறம், இதர தீண்டப்படாத இன் வேட்பாளர்களை விடவும் காங் கிரஸ் சார்பில் போட்டியிட்ட தீண்டப்படாத இன வேட்பாளர்கள் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கின்றனர் என்றும் இதற்குப் பொருள் கொள்ள முடியும். இவ்விரு கண்ணோட்டங்களிலிருந்துமே இனி தேர்தல் முடிவுகளைப் பரிசீலிப்போம்.

வெற்றிபெற்ற இடங்களைப் பொறுத்தவரையில் தேர்தல் முடிவுகளை ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். அந்தப் புள்ளி விவ ரங்களை மீண்டும் இங்கு தர வேண்டியதில்லை என்று கருதுகிறோம். மொத்த இடங்கள் 151ல் காங்கிரஸ் 78 இடங்களில் வெற்றி பெற்றுள் ளது. காங்கிரசுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையே நடை பெற்ற போட்டியின் இந்த முடிவை தீண்டப்படாதவர்களை காங் கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற அதன் வாதத்துக்கு வலு வான சான்றாகக் கொள்ள் முடியாது. ஏனென்றால் காங்கிரஸ் 78 இடங்களைப் பெற்றிருக்கிறது என்றால், தீண்டப்படாதோர் 73 இடங்களைப் பெற்றுள்ளனர். இதனை நூலிழை வித்தியாசமுள்ள மிகக் கடுமையான போட்டி என்றே கூறவேண்டும்.

அடுத்து, காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட தீண்டப்படாத இன வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில், தீண்டப் படாத மக்களை காங்கிரஸ்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற அதன் மற்றொரு வாதத்தை எடுத்துக் கொள்வோம். 1937 ஆம் வருடத் தேர்தலில் தீண்டப்படாத இன வாக்காளர்கள் அளித்த மொத்த வாக்கு கள் 15,86,456.

இந்த வாக்குகள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டன என்பதை யும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தீண்டப்படாத இன வேட் பாளர்களுக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன என்பதையும், அதேசமயம் காங்கிரசல்லாத தீண்டப்படாத இன வாக்காளர்கள் எத்தனை வாக்குகள் பெற்றனர் என்பதையும் பின்கண்ட அட்டவணையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

அட்டவணை 10

தீண்டப்படாதவர்கள் அளித்த வாக்குகள்

 

தீண்டப்படாதவர்கள் அளித்த வாக்குகள்

காங்கிரசுக்கு ஆதரவாக

காங்கிரசுக்கு எதிராக

தேர்தலில் தீண்டப்படாதோர் அளித்த மொத்த வாக்குகள்

 

ஐக்கிய மாகாணங்கள் 52,609 79,571 132,180
சென்னை 126,152 195,464 321,616
வங்காளம் 59,646 624,797 684,443
மத்திய மாகாணங்கள் 19,507 115,354 134,861
பம்பாய் 12,971 158,076 171,047
பீகார் 8,654 22,187 30,841
பஞ்சாப் இல்லை 69,126 69,126
அசாம் 5,320 22,437 27,757
ஒரிசா 5,878 8,707 14,585
மொத்தம்

290,737

1,295,719

1,586,456

ஒரு கட்சி கைப்பற்றும் இடங்களின் எண்ணிக்கை அக்கட்சிக்கு ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்குகளுக்கு இசைந்த விகிதாசாரத்தில் எப்போதும் இருப்பதில்லை என்பதும், பல சந்தர்ப்பங்களில் ஒரு கட்சி சிறுபான்மையான வாக்குகளில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றிவிடுகிறது என்பதும் அனைவரும் நன்கு அறிந்த்தே. அதி லும் குறிப்பாக இந்தியாவில் போன்று ஒற்றை உறுப்பினர் தொகுதி முறை நிலவும்போது இது உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்சியின் உண்மையானது பலம் அக்கட்சி பெறும் வாக்குகளின் எண்ணிக்கையைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. இந்த உரை கல்லைப் பயன்படுத்திப் பார்க்கும்போது, மொத்த வாக்குகள் 15,86,456ல் 2,90,737 வாக்குகள் அதாவது பதினெட்டு சதவீத வாக்குகள் மட்டுமே காங்கிரசுக்குக் கிடைத்துள்ளன; அதேசமயம் எண்பத்து இரண்டு சதவீத வாக்குகள் காங்கிரசுக்கு எதிராகப் போடப்பட்டுள்ளன என்பது தெரியவரும். தீண்டப்படாதோரை தான் பிரதிநிதித்துவப்படுத்து வதாக காங்கிரஸ் முன்வைத்துவரும் வாதத்தை செல்லாக்காசாக்கு வதற்கு இதைவிட வேறு என்ன திட்டவட்டமான, தீர்மானமான சான்று வேண்டும்? வாக்கு பலத்தை ஓர் அளவுகோலாக ஏற்பதற்கு காங்கிரஸ்காரர்கள் மறுக்கக்கூடும். தீண்டப்படாதவர்களை காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதற்கு தாங்கள் கைப்பற்றிய இடங்களை ஆதாரமாகக் கொண்டு காங்கிரஸ்காரர்கள் தொடர்ந்து வாதாடக்கூடும்.

151 இடங்களில் 78 இடங்கள் பெறுவதையோ அல்லது அதிக இடங்கள் ஐந்து பெற்றிருப்பதை வெளியே பெரிதும் சிலாகித்துப் பேசக்கூடிய ஒரு வெற்றியாக நல்லறிவு படைத்த எந்த மனிதனுக்கு கருதமாட்டான். இன்னும் சொல்லப்போனால், வெற்றி பெற்ற இடங்களின் அடிப்படையில் கூட தான் தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவாக உரிமை கொண்டாடுவது வீண்வெட்டி வேலையாகும். ஏனென்றால் தேர்தல் முடிவுகளை நுணுகி ஆராய்ந்து பார்த்தால், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங் களைப் பெறுவதற்குப் பதிலாக சிறுபான்மையான எண்ணிக்கை யுள்ள இடங்களையே கைப்பற்றியிருப்பதைக் காணலாம்.

காங்கிரஸ் கொண்டாடும் உரிமை நியாயமானது, போலி யானதல்ல என்பது உண்மையானால் காங்கிரஸ் வெற்றி பெற்ற 78 இடங்களில் பின்கண்டவற்றைக் கழித்துவிட வேண்டும்.

(1) இந்துக்களில் உதவியுடன் காங்கிரஸ் வெற்றிபெற்ற  இடங்கள் தீண்டப்படாதவர்களின் வாக்குகளைக் கொண்டு  தீர்மானிக்கப்படுவதற்கு விடப்பட்டிருந்தால் அவற்றை  காங்கிரஸ் இழந்திருக்கும்

(2) பரிபூரண பெரும்பான்மை வாக்குகளால் அல்லாமல்,  காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட தீண்டப்படாத இன  வேட்பாளரை எதிர்த்து ஏராளமான காங்கிரஸ் அல்லாத  தீண்டப்படாத இன வேடபாளர்கள் போட்டியிட்டதால்  தீண்டப்படாதோரின் வாக்குகள் பிளவுபட்டதன் காரணமாக காங்கிரஸ் கைப்பற்றிய இடங்களையும் மொத்த இடங்களி  லிருந்து கழித்து விட வேண்டும்.

(3) தீண்டப்படாதவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்  களுக்கான தேர்தலில் பொதுத்தொகுதி இடங்களுக்கு அல்லது  ஒதுக்கீடு செய்யப்படாத இடங்களுக்கு நடைபெற்ற தேர்த  லில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தாமல் தங்களுக்கு  ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான தேர்தலில் பயன்படுத்தியிருந்  தால் அவர்கள் வெற்றி பெற்றிருக்கக் கூடிய இடங்களை  யும் மொத்த இடங்களிலிருந்து கழித்துவிட வேண்டும்.

இந்தக் கழித்தல்கள் செய்யப்படுவதை நியாய உணர்வு படைத்த ஒருவர் எவ்வாறு ஆட்சேபிக்க முடியும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தீண்டப்படாதவர்கள் அல்லாத மற்றவர்களின் வாக்குகள் காரணமாக பெரும்பான்மை பெற்ற ஒரு வேட்பாளர் தன்னை தீண்டப்படாதவர்களின் பிரதிநிதி என்று கூறிக் கொள்ள உரிமை இல்லை; அதேபோல் அவர் தீண்டப்படாதோர் இனத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தாலும், காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்டதவன் காரணமாகவும் அவர் மூலம் தன் தீண்டப்படாதோரை பிரதிநிதித்துவப்படுத்துவதாக காங்கிரஸ் உரிமை கொண்டாட முடியாது.

தனது எதிராளிகள் முகாமில் பிளவு ஏற்பட் டதன் காரணமாக பெரும்பான்மை பெற்ற தீண்டப்படாத இனத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளரை, இந்தப் பிளவு ஏற்பட்டிருக்கவில்லை என்றால் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருக்கக் கூடிய ஒரு வேட்பாளரை தீண்டப்படாத மக்களின் உண்மையான பிரதிநிதி யாக ஏற்றுக் கொள்ள முடியாது; அவர் தீண்டப்படாத இனத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார் என்பதற்காகவும் காங்கிரசும்தான் தீண்டப்படாதோரைப் பிரதிநிதித் துவப்படுத்துவதாக உரிமை கொண்டாட முடியாது.

தீண்டப்படா தோருக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்குப் போட்டியிடும் ஒரு வேட்பாளர் பெரும்பாலான வாக்காளர்கள் தங்கள் பங்கை ஆற்றாத ஒரு தேர் தலில் வெற்றி பெற்றால் அந்த இடம் தீண்டப்படாதோருக்காக ஒதுக்கப்பட்ட இடம் என்பதற்காக வாக்காளர்களின் பிரதிநிதியாக அவர் இருக்க முடியாது. இத்தகைய தீண்டப்படாத இன வேட்பாளர்களால் கைப்பற்றப்பட்ட தீண்டப்படாத இனத்திற்கான இடங் களையும் காங்கிரஸ் வெற்றி பெற்ற மொத்த இடங்களிலிருந்து கழித்துவிட வேண்டும். முற்றிலும் தீண்டப்படாத இன வாக்காளர்களின் உதவியால் வெற்றிபெற்ற தீண்டப்படாத இனத்திற்கான இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்றதாக உரிமை கொண்டாட முடியும். தாழ்த்தப்பட்ட இனத்தினருக்கான இடங்களின் விநியோகத்தை யும் காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்களையும், அதன் வெற்றிக் கான சந்தர்ப்ப சூழ்நிலையும் பின்கண்ட அட்டவணையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

அட்டவணை 11

காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கான சூழ்நிலைமைகள்

  காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்கள்  
  இந்து வாக்குகளின் ஆதரவுடன் இந்து வாக்குகளின் ஆதரவின்றி தாழ்த்தப்பட்ட வாக்குகள் பிளவு பட்டதன் காரணமாக தாழ்த்தப் பட்ட இன மக்கள் அக்கறை காட்டாததன் காரணமாக மொத்தம்
  (1) (2) (3) (4) (5)

ஐக்கிய மாகாணங்கள்

3 6 3 4 16

சென்னை

5 15 4 2 26

வங்காளம்

- 4 - 2 6

மத்திய மாகாணங்கள்

1 5 - 1 7

பம்பாய்

1 1 1 1 4

பீகார்

1 3 - 7 11

பஞ்சாப்

- - - - -

அசாம்

1 2 - 1 4

ஒரிசா

1 2 - 1 4
 மொத்தம் 13 38 8 19 78

இவைதாம் தேர்தல் முடிவுகளின் ஆய்வு வெளிப்படுத்தும் உண்மைகளாகும். இவை சர்ச்சைக்கிடமற்றவை, ஏற்றுக்கொள்ளப் பட வேண்டியவை. காங்கிரஸ் பெற்றுள்ள வாக்குகளைக் கொண்டு பார்க்கும்போது, காங்கிரஸ் தீண்டப்படாதோரைப் பிரதிநிதித்துவப் படுத்துவில்லை என்பதும், தீண்டப்படாதவர்கள் காங்கிரசை நிரா கரித்து விட்டார்கள் என்பதும் தெரியவரும். வெற்றி பெற்ற இடங் களைக் கொண்டு பார்க்கும்போது மொத்த 151 இடங்களில் காங்கிரஸ் 38 இடங்களைத் தான் கைப்பற்றியுள்ளது.

மேலும், 73 இடங் களில் வெற்றி பெற அது தவறிவிட்டது என்பதையும், இந்துக்களது வாக்குகளைக் கொண்டு 13 இடங்களில் அது வெற்றி பெற்றிருக் கிறது என்பதையும், காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட தீண்டப்படாத இன வேட்பாளரை எதிர்த்து ஏராளமான தீண்டப்படாத இன வேட் பாளர்கள் போட்டியிட்டதால் வாக்குகள் சிதறி 8 இடங்களை அது கைப்பற்றி இருக்கிறது என்பதையும், இதுவன்றி, தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கான தேர்தலில் தீண்டப்படாதோர் போதிய அக்கறை காட்டாது மதிகேடாக நடந்து கொண்டாதால் 19 இடங்களில் அது வெற்றி பெற்றிருக்கிறது என்பதையும் மேலே உள்ள அட்டவணையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த, பின்வரும் அட்டவனை எங்கு இத்தகைய விப ரீதங்கள் நடைபெற்றுள்ளன என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. அவை மூன்று தலைப்புகளில் வகை பிரிக்கப்பட்டு, மாகாணவாரி யாகக் காட்டப்பட்டுள்ளன; பின்னிணைப்பில் காட்டியுள்ளபடி அவற்றின் தொடரெண்களால் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

அட்டவணை – 12 

தாழ்த்தப்பட்ட இன மக்களின் தொகுதிகள்

மாகாணம்

இந்துவாக்குகளின் ஆதரவுடன் காங் கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளின் தொடரெண்கள் தாழ்த்தப்பட்ட இன மக்களின் வாக்குகள் பிளவுண்டதால் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளின் தொடரெண்கள் தாழ்த்தப்பட்ட இன மக்கள் தேர்தலில் அக்கறை காட்டாததால் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள் தொடரெண்கள்
ஐக்கிய மாகாணங்கள் 1,3, & 4 8,9 & 10 11,13,14, & 18

சென்னை

1,22,23,24 & 25

8,12,15 & 17

4 & 21

வங்காளம்

இல்லை

இல்லை

6 & 7

மத்திய மாகாணங்கள் 6 இல்லை 15

பம்பாய்

1

14

3

பீகார்

11

இல்லை

2,6,7.8, 9,10, & 13

பஞ்சாப்

இல்லை

இல்லை

இல்லை

அசாம்

1 இல்லை 4

ஒரிசா

6 இல்லை 2

தீண்டப்படாதவர்களை காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்து வதாக அது உரிமை கொண்டாடி வருவது ஆதிமுதல் அந்தம் வரை தவறு என்பது இவ்வாறு நிரூபணமாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது இது இட்டுக் கட்டப்பட்ட வெறும் புனைந்துரையே தவிர வேறல்ல என்பது முற்றிலும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 

தேர்தல் முடிவுகள் வேறுசில சுவையான தகவல்களையும் தந்துள்ளன. பின்கண்ட இரு அட்டவணைகளில் அவை தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன:

அட்டவணை 13

தாழ்த்தப்பட்ட இன மக்களின் இடங்களுக்கான தேர்தல்

மாகாணங்கள்

போட்டி நடைபெற்ற இடங்கள்

போட்டியிடப் படாத இடங்கள்

மொத்தம்

ஐக்கிய மாகாணங்கள் 15 5 20
சென்னை 26 4 30
வங்காளம் 28 2 30
மத்திய மாகாணங்கள் 19 1 20
பம்பாய் 14 1 15
பீகார் 6 9 15
பஞ்சாப் 6 2 8
அசாம் 6 1 7

ஒரிசா

4 2 6

 மொத்தம்

124

27

151

அட்டவணை 14

காங்கிரஸ் வெற்றி பெற்ற தாழ்த்தப்பட்டோருக்கான இடங்கள்

மாகாணங்கள் போட்டி போட்டு பெற்ற இடங்கள் போட்டியின்றிப் பெற்ற இடங்கள்  மொத்தம்

ஐக்கிய மாகாணங்கள்

14

2

16

சென்னை

24

2

26

வங்காளம்

 6

இல்லை

6

மத்திய மாகாணங்கள் 

 6

1

7

பம்பாய்

 3

1

4

பீகார் 

 4

7

11

பஞ்சாப்  இல்லை இல்லை இல்லை

அசாம்

 3

1

4

ஒரிசா

 4

இல்லை

4

மொத்தம்  64 14

78

தீண்டப்படாதோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக் கான தேர்தலில் எத்தகைய மிகுந்த ஆர்வமும் அக்கறையும் காட்டி யிருக்கிறார்கள் என்பதை அட்டவணை 13 காட்டுகிறது. மொத்த இடங்கள் 151ல் 121 இடங்களில் போட்டி போடப்பட்டிருக்கிறது. தீண்டப்படாதவர்களுக்கு அரசியல் கல்வியும் இல்லை, அரசியல் போதகரும் இல்லை, எனவே, அவர்களுக்கு அரசியல் உரிமை கள் வழங்குவது வீண்தான் என்று வழக்கமாகக் கூறப்படும் குற்றச் சாட்டை இது பொய்யாக்குகிறது. தீண்டப்படாதவர்கள் காங்கிரசை தங்கள் உற்ற நண்பனகாவும் உண்மையான தோழனாகவும் கருது வதற்குப் பதிலாக அதனை தங்கள் வைரியாக காண்பதை அட்ட வணை 14 புலப்படுத்துகிறது.

தீண்டப்படாதோருக்காக ஒதுக்கப் பட்ட இடங்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் போட்டியின்றி வெற்றி பெற அவர்கள் அனுமதிப்பது மிக மிக அரிது. தீண்டப்படாதவர் களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் ஒரு தீண்டப்படாத இன வேடபாளரை காங்கிரஸ் சார்பில் நிறுத் திய பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தீண்டப்படாதவர்களில் அந்த இடத்தை எதிர்ப்பின்றி காங்கிரசுக்கு தாரை வார்த்ததில்லை; அதற்குப் பதில் தங்கள் சொந்த வேட்பாளரை காங்கிரசல்லாதோர் சார்பில் நிறுத்தி, கடுமையாக போட்டியிட்டே வந்திருக்கின்றனர். தாழ்த்தப் பட்ட வகுப்பினருக்கான இடங்களுக்கு காங்கிரஸ் சார்பில் 78 இடங் களுக்கு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டபோது 64 இடங்களில் கடும் போட்டி நிலவிற்று.

அட்டவணை 15

மாகாணம்

  ஒவ்வொரு 100 பொது இந்து வாக்காளர்களுக்கு தாழ்த்தப்பட்ட இன வாக்காளர்களின் வீதாசாரத்திற்கு ஏற்ப வகை பிரிக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை
பத்தும் அதற்குக் கீழேயும் 11-15

16-20

21-25

26-30

31-35

36-40

41-45

45-50

50க்கு மேல்

மொத்தம்

ஐக்கியமாகாணங்கள்

இல்லை

7

3

6

2

1

இல்லை

1

இல்லை

இல்லை

20

சென்னை இல்லை 5 6 10 3 3 1 1 1 இல்லை 30
வங்காளம் இல்லை இல்லை இல்லை 3 13 1 3 இல்லை 14 25 *  
மத்தியமாகாணங்கள் 5 5 1 2 இல்லை 1 1 1 1 3 20
பீகார் 4 5 2 2 2 இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை 15
பஞ்சாப் 1 1 இல்லை 1 2 இல்லை இல்லை 1 இல்லை 2 8
ஒரிசா 2 இல்லை இல்லை 2 இல்லை 2 இல்லை இல்லை இல்லை இல்லை 6
அசாம் 3 1 இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை 1 இல்லை 2 7
பம்பாய் 5 3 6 1 இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை 15
மொத்தம் 20 27 18 27 11 9 3 8 2 21 146

*தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து தொகுதிகள் இரண்டு இடங்களைப் பெற்றிருப்பதால் வாக்காளத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் மொத்தம் 30 ஆகிறது.

IV

தேர்தல் களத்தில் தீண்டப்படாதோர்களுக்கு எதிராக காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டது என்பதை 1937 ஆம் வருடத் தேர்தல் நிரூபிக்கவில்லை என்று கூறுகிறது. மெய்ம்மை நிலையைக் குறைத் தியம்புவதாகும் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் தீண்டப் படாதவர்கள் காங்கிரஸ் மீது வெற்றிவாகை சூடியுள்ளனர் என்றே கூறவேண்டும். இதனைப் பலர் ஏற்றுக்கொள்ளாதிருக்கலாம்; அவ் வாறு ஏற்றுக்கொள்ள இயலாமலோ அல்லது விருப்பமில்லாமலோ இருக்கலாம்; காங்கிரசுடன் நடைபெற்ற போட்டியில் தீண்டப்படாதவர்கள் எத்தகைய கொடிய துன்ப துயரங்களை, இன்னல் இடுக்கண்களை, இடர்ப்பாடுகளை முட்டுப்பாடுகளை சந்திக்க நேர்ந்தது என்பதை அவர்கள் அறியாததே இதற்குக் காரணம்.

இந்த இக்கட்டு கள் உண்மையிலேயே ஏராளமானவை, மிகப் பெரியவை, இவற்றை எல்லாம் இங்கு விவரிப்பது உசிதமானதாக, உகந்ததாக இருக்கும். அப்போதுதான் காங்கிரசுக்கும் தங்களுக்கும் ஒட்டும் உறவும் இல்லை என்பதையும், காங்கிரஸ் தங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்பதையும் மெய்ப்பிப்பதற்கு தீண்டப்படாதவர் கள் எத்துணை விடா உறுதியுடனும் நெஞ்சுரத்துடனும் போராடினார்கள் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இந்தத் துன்பங்களை இரண்டு தலைப்புகளில் வகைப் பிரிக்கலாம்: (1) ஸ்தாபனம் சம்பந்தப்பட்டவை, (2) தேர்தல்கள் சம்பந்தப்பட்டவை.

முதல் தலைப்பின்கீழ் இரண்டு அம்சங்களை விசேடமாகக் குறிப்பிட வேண்டும்:

முதல் அம்சம் வாய்ப்பு வளங்களில் காங்கிரசுக்கும் தீண்டப் படாதோருக்கும் இடையே உள்ள மலைக்கும் மடுவுக்குமான வேறு பாடாகும். காங்கிரஸ் மிகவும் செல்வ வளம் படைத்த அரசியல் கட்சி என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. 1937 ஆம் வருடத் தேர்தலில் காங்கிரஸ் எவ்வளவு பணத்தை தண்ணீர் பட்ட பாடாக வாரி இறைத்தது இதுவரை கணக்கிட முடியவில்லை.

இது சம்பந்தமாக ஒரு விசாரணை நடத்தினால், விளம்பரம் செய் வதற்காகவும், போக்குவரத்துக்காகவும், காங்கிரஸ் சார்பில் போட்டி யிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காகவும் செலவிடப் பட்ட பணம் சொல்லி மாளாது என்பது தெரியவரும். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தீண்டப்படாத இன வேட்பாளர்களுக்கும் இத்தனை வசதிகளையும் காங்கிரஸ் செய்து கொடுத்தது. அதேசமயம் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்ட தீண்டப்படாத இன வேட் பாளர்களுக்கோ இந்த வாய்ப்பு வசதிகளில் பத்து லட்சத்தில் ஒரு பங்குகூட இல்லை எனலாம். இவர்களில் சிலர் ஜாமீன் தொகை கட்டுவதற்குக் கூடக் கடன் வாங்க வேண்டியிருந்தது. விளம்பரம், பிரசாரம், போக்குவரத்து, வாக்கு சேகரிப்பு முதலிய எந்த உதவியும் இன்றி அவர்கள் தேர்தல்களில் போட்டியிட்டனர்.

இரண்டாவது அம்சம் காங்கிரசுக்கு வலுமிக்க கட்சி எந்திரம் இருந்ததும், தீண்டப்படாதவர்களுக்கு அத்தகைய கட்சி எந்திரம் இல்லாதிருந்ததுமாகும். கட்சி எந்திரம்தான் காங்கிரசின் உண்மை யான பலம் என்பதை அனைவரும் அறிவர். இத்தகைய ஒரு கட்சி எந்திரத்தை உருவாக்கித் தந்த பெருமை திரு. காந்தியைத்தான் சேரும். இந்த எந்திரம் கடந்த 20 ஆண்டுகளாகவே இருந்து வருகிறது; காங்கிரஸ் தன்னிடமுள்ள அபரிமிதமான வாய்ப்பு வளங்களைக் கொண்டு நன்கு எண்ணெயிட்டு, அந்த எந்திரத்தை அணுவளவும் குறைபாடற்றதாகப் பராமரித்து வருகிறது; ஒரு பொத்தானை அழுத் தினால் போதும்.

அது அசுரத்தனமாக செயல்பட ஆரம்பித்துவிடும். அது மிகப் பிரம்மாண்டமான எந்திரம்; நாட்டிலுள்ள ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் அது படர்ந்து பரவி வியாபித்திருக்கிறது. இந்த எந்திரத்தை இயக்குவதற்கான காங்கிரஸ் ஆட்கள் இல்லாத பகுதியே இல்லை என்று கூறலாம். காங்கிரஸ் சார்பில் போட்டி யிட்ட வேட்பாளர்களில் தேர்தல் பணி முழுவதையும் காங்கிரசின் இந்தக் கட்சி எந்திரம்தான் செய்தது. ஆனால் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்ட தீண்டப்படாதோருக்கு உதவ இத்தகைய கட்சி எந்திரம் ஏதுமில்லை.

தனிப்பிரதிநிதித்துவ முறை 1909 ஆம் ஆண்டில் தான் முதல் தடவையாக இந்திய அரசியலில் புகுத்தப்பட்டது. எனி னும் இதன் அனுகூலம் அப்போது ஒரே ஒரு சமூகத்துக்கு மட்டும் தான் அதாவது முஸ்லீம்களுக்கு மட்டுமே கிடைத்தது; அவர்கள்தான் இதில் பயனடைந்தனர். 1920ல் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப் பட்டது. இவ்விதம் திருத்தியமைக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்த சலுகை பிராமணரல்லாதோருக்கு விஸ்தரிக்கப் பட்டது. தீண்டப்படாதவர்கள் மீண்டும் கைகழுவப்பட்டனர். பல்வேறு மாகாண சட்டமன்றங்களில் நியமனத்தின் மூலம் ஒன்று அல்லது இரண்டு இடங்கள் அளித்து அவர்கள் சமாதானப்படுத்தப்பட்டனர்.

1935 ஆம் ஆண்டில்தான் முதல்முறையாக வாக்குரிமையையும், தேர்தல் மூலம் சட்டமன்றத்தில் இடம்பெறும் உரிமையையும் அவர்கள் பெற்றனர். வாக்குரிமை இல்லாததாலும், தேர்தல் களத் தில் அவர்கள் இறங்க வேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலை இல்லாத தாலும் இதுவரை அவர்கள் தங்களுக்கென ஒரு கட்சி எந்திரத்தைக்கட்டி உருவாக்கிக் கொள்ளாமல் இருந்துவிட்டனர். 1937ல் தேர்தல்களில் குதிக்கும்படி தீடீரென அவர்கள் அழைக்கப்பட்டபோது, தங்களை ஸ்தாபன ரீதியாக ஒன்று திரட்டிக் கொள்ளவும், ஒரு கட்சி எந்தி ரத்தை உருவாக்கிக் கொள்ளவும் அவர்களுக்குப் போதிய அவகாசம் இல்லாமல் போய்விட்டது.

இதனால் காங்கிரசுக்கும் தீண்டப்படாத வர்களுக்கும் இடையே நடைபெற்ற போராட்டம் நவீன ஆயுத வசதிகளுடன் கூடிய ராணுவத்துக்கும் நிராயுதபாணிகளான ஒரு கூட்டத் துக்கும் இடையே நடைபெற்ற போராட்டமாகத்தான் இருந்தது. இதேபோல் தீண்டப்படாதவர்கள் எதிர்கொள்ள நேர்ந்த தேர்தல் இடர்ப்பாடுகளும் ஏராளம்.

தீண்டப்படாதவர்களுக்காக இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பொதுத் தொகுதிகளில் இந்துக் களின் வாக்காளர் பலத்துக்கும் தீண்டப்படாதோர் இனத்தைச் சேர்ந்த வர்களது வாக்காளர் பலத்துக்கும் இடையே மிகப்பெரும் வேறுபாடு நிலவுகிறது; இது தேர்தல் விஷயத்தில் முதல் இடர்ப்பாடாகும். 15 ஆவது அட்டவணை இரு தரப்பினரது பரஸ்பர வாக்காளர் பலத்தைக் காட்டுகிறது.

பொதுத் தொகுதிகளில் தாழ்த்தப்பட்ட இன வாக்காளர்களை விட இந்து வாக்காளர்கள் எவ்விதம் மிக அபரிமிதமாக இருக்கிறார் கள் என்பதை இந்த அட்டவணையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். எண்ணிக்கையில் இந்துக்கள் எத்தகைய விகிதாசாரத்தில் தாழ்த்தப் பட்டவர்களை விஞ்சியிருக்கிறார்கள் என்பதை இங்கு விசேட மாகக் கவனத்திற்கொள்வது அவசியம்.

இந்த அட்டவணையைப் பார்த்தால், இந்து வாக்காளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது தாழ்த்தப்பட்ட இன வாக்காளர் எண்ணிக்கை 20 தொகுதி களில் 100க்கு 10 என்ற விகிதத்திலும், 27 தொகுதிகளில் 100க்கு 11 முதல் 15 என்ற விகிதத்திலும், 18 தொகுதிகளில் 100க்கு 15 முதல் 20 என்ற விகிதத்திலும், 27 தொகுதிகளில் 100க்கு 21 முதல் 25 என்ற விகி தத்திலும் 11 தொகுதிகளில் 100க்கு 20 முதல் 30 என்ற விகிதத்திலும் இருப்பதைக் காணலாம்.

இந்து வாக்காளர்களின் பெரும்பான்மை எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பதையும், இந்த அதிமிகை யான பெரும்பான்மை பலத்தைக் கொண்டு இந்துக்கள் தாழ்த்தப் பட்ட வாக்காளர்கள் மீது எவ்விதம் சவாரி செய்ய முடியும் என்பதை யும் இந்த அட்டவணை காட்டுகிறது. மேலும், தாழ்த்தப்பட்ட   இனத்தோருக்கான ஒவ்வொரு தொகுதியும் கூட்டு வாக்காளர் தொகுதி என்பதையும், இத்தொகுதியில் இருதரப்பு வாக்காளர்களுமே அதாவது தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த வாக்காளர் களும் இந்து வாக்காளர்களும் தாழ்த்தப்பட்ட இனத்தோருக்கான இடத்துக்கு வாக்களிக்க முடியும் என்பதையும், இதன் மூலம் அந்த இடத்தைக் கைப்பற்ற தீவிர முயற்சி நடைபெறும் என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். இருதரப்பினரது வாக்காளர் பலத்தில் நிலவும் தாரதம்மியம் தேர்தல் களத்தில் மிகுந்த தொகுதி யில் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவது போட்டியிடும் தரப்புகளின் வாக்காளர் பலத்தைப் பெரிதும் பொறுத்துள்ளது.

திண்டப்படாதவர்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பொதுத் தொகுதிகளுக்கு நிர்ணயிக்கப்படும் இடங்களின் எண் ணிக்கையிலிருந்து இரண்டாவது சிக்கல் எழுகிறது. இது சம்பந்த மாக பல்வேறு மாகாணங்களில் கைக்கொள்ளப்படும் முறையை பின்கண்ட பட்டியல் காட்டுகிறது.

அட்டவணை 16

தீண்டப்படாதவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்ட பொதுத்தொகுதிகளின் வகைப்பிரிவு

மாகாணம் தீண்டப்படாத வர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் இரு இடங்கள் கொண்ட தொகுதிகள் மூன்று இடங்கள் கொண்ட தொகுதிகள் ஒரு இடம் கொண்ட தொகுதிகள்
சென்னை  30  30  இல்லை  இல்லை
பம்பாய்  15  இல்லை  6  9
வங்காளம்  30  20  5  இல்லை
ஐ. மாகாணங்கள்  20  20  இல்லை  இல்லை

பஞ்சாப்

 8

 8

 இல்லை

 இல்லை

பீகார்

 15  15  இல்லை  இல்லை
ம. மாகாணங்கள்

 20

 20

 இல்லை

 இல்லை

அசாம்

 7

 6  1  இல்லை
ஒரிசா 6 6 இல்லை இல்லை

 மொத்தம்

 151

 125

 12

 9

தீண்டப்படாதவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்தமுள்ள 151 தொகுதிகளில் 130 தொகுதிகள் இரட்டை உறுப் பினர் தொகுதிகளாக இருப்பதை இந்த அட்டவணை காட்டுகிறது; இத்தகைய தொகுதிகளில் ஓர் இடம் தாழ்த்தப்பட்ட வகுப்பின ருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது; மற்ற இடம் பொது இடமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த இரட்டை உறுப்பினர் தொகுதி முறையில் தாழ்த் தப்பட்ட இன மக்களுக்கு ஒரு பெரிய அபாயம் பதுங்கியிருப்பதை பலர் அறியாதிருக்கக் கூடும். பொதுத் தொகுதியில் இந்துக்களதும் தாழ்த்தப்பட்ட இன மக்களதும் பரஸ்பர வாக்கு பலத்தைப் பரிசீ லித்துப் பார்த்தால் இந்த அபாயம் எவ்வளவு உண்மையானது என்பது தெரியவரும்.

இதுபற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம். இங்கு மற்றொரு விஷயத்தையும் கவனத்திற் கொள்ள வேண்டும்: அதாவது ஒரு தொகுதி பன்மை உறுப்பினர் தொகுதியாக – மூன்று அல்லது நான்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தொகுதி யாக – இருந்தால் அப்போது இந்துக்களின் அபரிமிதமான வாக்கு பலம் இந்துக்கள் ஒரே ஒரு வேட்பாளரை மட்டும் தேர்ந்தெடுக்கும் இரட்டை உறுப்பினர் தொகுதியில் இருப்பது போன்று அத்தனை அபாயகரமானதாக இருக்காது. பன்மை உறுப்பினர் தொகுதியில் அதிக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையில், பொது இடத்துக்கு நிறுத்தப்பட்டுள்ள தங்களது வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதில் இந்துக்கள் மும்முரமாக ஈடுபடும்போது, அவர்களது வாக்குகள் சிதறுகின்றன; இதனால் அவர்களிடம் உபரி வாக்குகள் இருப்பதில்லை; இதன் காரணமாக இத்தகைய தொகுதி யில் அவர்களது மிகையான வாக்குபலம் தாழ்த்தப்பட்ட வகுப்பின ருக்கு அபாயமாக இருக்காது.

ஆனால், அவர்கள் வெற்றிபெற வேண் டியது ஒரே ஓர் இடமாக மட்டும் இருக்கும்போது, அவர்கள் வாக்கு கள் சிதறும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. அதிலும் காங்கிரஸ் போன்ற ஸ்தாபன ரீதியாக நன்கு ஒருங்கமைக்கப்பட்ட கட்சி அமைப்பு முறை யில் இவ்விதம் சிதறும் வாக்குகள் பூஜ்யம் என்றே சொல்ல வேண்டும். இவ்வாறு உபரியாக மிஞ்சும் வாக்குகளை தங்களது கைப்பொம்மையாக இருப்பதற்கு மறுத்து சுயேட்சையாகப் போட்டி யிடும் தாழ்த்தப்பட்ட இன வேட்பாளரை எதிர்த்து தங்கள் சார்பில் போட்டியிடும் தாழ்த்தப்பட்ட இன வேட்பாளருக்கு இந்துக்கள் வாக்களித்து அவரை ஆதரிக்க முடியும். இந்துக்கள் தங்களது உபரி வாக்கு களைக் கொண்டு எத்தகைய விபரீதத்தை, பயங்கர சேதத்தை உண்டு பண்ண முடியும் என்பதை தேர்தல் முடிவுகள் துலாம்பரமாகக் காட்டுகின்றன.

பொதுத் தொகுதிகளில் கைக்கொள்ளப்படும் வாக்களிப்பு முறையையும், இத்தொகுதிகளில் நிர்ணயிக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையையும், வாக்கு பலத்தைப் பகிர்ந்தளிக்கும் நடை முறையையும் கருத்திற்கொண்டு பார்ர்க்கும்போது தீண்டப்படாத வர்களை ஏமாற்றுவதற்கு இதைவிட தந்திரமான, குயுக்தியான, வஞ்சகமான தேர்தல் முறை வேறு ஏதும் இருக்க முடியுமா என்பது சந்தேகமே. தாழ்த்தப்பட்ட இனத்தவர் மீது திணிக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டுத் தொகுதி முறையானது 1832 ஆம் வருட சீர்திருத்த சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த ராட்டன் பரோ முறை போன்றது. இந்த ராட்டன்பரோ முறையின்படி தேர்ந் தெடுக்கப்பட்ட வேட்பாளர் உண்மையில் பரோவின் தலைவரால் நியமிக்கப்பட்டவரே ஆவார்.

இதேபோன்றுதான் கூட்டுத்தொகுதித் தேர்தல் முறையின்படி சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் தாழ்த்தப்பட்ட இன வேட்பாளர் உண்மையில் இந்துக்களால் நிய மிக்கப்படுவர் என்றே கூறவேண்டும். கூட்டுத் தொகுதித் தேர்தல் முறையின்பால் திரு. காந்தி மிகுந்த ஈடுபாடு கொண்டதற்கு இதுவே காரணம்.

முஸ்லீம் லீக் நாளுக்கு நாள் வளர்ந்து வலுப்பெற்று வருவது பற்றி நிறைய பேசப்படுவதைக் கேட்கிறோம். ஆனால் தனி வாக் காளர் தொகுதித் தேர்தல் முறையின் காரணமாக முஸ்லீம் லீக் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதை வெகுசிலரே அறிவர். காங்கிரஸ் அபாயத்திலிருந்தும் சூழ்ச்சியிலிருந்தும் அவர்கள் விடு பட்டுப் பாதுகாப்பாக இருக்கின்றனர். தீண்டப்படாதவர்கள் அத் தகைய நிலையில் இல்லை.

காங்கிரசின் பணபலம், காங்கிரசின் வாக்குகள் பலம், காங்கிரஸ் பிரசார பலம் என்னும் வன் சூறாவளி யால் அவர்கள் முழு அளவுக்குப் பாதிக்கப்படுகின்றனர். போதிய வாய்ப்பு வளங்கள் இல்லாத போதிலும், ஒரு வலுமிக்க கட்சி எந்திரம் இல்லாத போதிலும், தேர்தல் முறைகள் அவர்களுக்குப் பல வகைகளிலும் இடையூறாக இருந்தபோதிலும் இந்த இக்கட்டுகளை எல்லாம் அவர்கள் சமாளித்ததானது காங்கிரஸ் மீது அவர்கள் பெற்ற வெற்றியையும், தங்களது சுயேச்சையை, சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அவர்கள் கொண்டுள்ள ஆர்வத்தையும் தெள்ளெனப் புலப்படுத்துகிறது.

  ("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, இயல் 6)

Pin It