இன்று புழக்கத்தில் உள்ள உடையான ஜீன்ஸின் கதை தெரியுமா உங்களுக்கு? 1873 ஆம் ஆண்டுகளிலேயே ஜீன்ஸ் தைக்கும் துணி கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது. அதனை லெவிஸ்டிராஸ் என்கின்ற ஜெர்மானியர் கண்டுபிடித்தார். கண்டு பிடித்த இடம் அமெரிக்கா. இந்த ஜீன்ஸ் துணி பிரான்ஸ் நாட்டிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பருத்தியை கொண்டு ‘செர்க் டெனிம்’ என்கின்ற முரட்டு துணி தயாரிக்கப்பட்டது. அதுவே ஜீன்ஸ் உடை தயாரிக்க பயன்படுத்தப்பட்டது.

இன்று யாரை கேட்டாலும் ஜீன்ஸ் உடை டெனிம் என்கின்ற முரட்டு துணியை கொண்டு தயாரிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். இந்த டெனிம் என்கின்ற பெயர் செர்க் டெனிம் என்கின்ற பெயரின் பின் பகுதியிலிருந்து வந்ததுதான். ஆரம்பத்தில் அமெரிக்காவில் டெனிம் துணியில் தைக்கப்பட்ட உடையை காவலர்கள் மட்டுமே அணிந்து வந்தனர். 1940 வாக்கில்தான் உலகம் முழுதும் இவ்வுடையை உற்று நோக்க ஆரம்பித்தினர். பெரும் புகழ் அடைந்து எல்லோரும் அணிய ஆரம்பித்தது 1980களில்தான்.

Pin It