நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் ஒரு முறை உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். அவரைப் பரிசோதித்த டாக்டர் ‘நாக்கை நீட்டுங்கள்’ என்றார். சாப்ளின் நாக்கை நீட்டினார். “நாக்கின் நிறம் மாறி விட்டதே” என்று பதறிய டாக்டர், நாக்கை கூர்ந்து கவனித்து விட்டு, “பத்து செண்ட் தபால் தலை அல்லவா நாக்கில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.” என்றார் நிதானமாக.

“டாக்டர் சார்! இத்தனை நேரம் அதைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். கண்டுபிடித்து தந்ததற்கு ரொம்ப நன்றி” என்று சாவாதானமாகக் கூறிய சாப்ளின் அந்த அஞ்சல் தலையை எடுத்து மேஜை மேல் இருந்த கவரில் ஒட்டத் தொடங்கினார்

Pin It