பாம்பின் உமிழ்நீர்ப் பையில் சேமித்து வைக்கப்படும் எச்சில்தான் விஷமாக உருவாகிறது. தவளை, எலி போன்றவற்றைப் பிடிக்கும்போது, அவற்றை செயலிழக்கச் செய்ய இந்த விஷத்தை பாம்புகள் பயன்படுத்துகின்றன. இதை விஷம் மனிதன் போன்ற விலங்குகளை தற்காப்பின் பொருட்டு கடிக்கும்போது அவற்றைக் கொல்லவும் பயன்படுத்துகின்றன. விஷப்பாம்புகள் மனிதனைக் கடிக்கும்போது, அவற்றின் விஷம் இரத்தத்தில் கலந்ததும், நரம்பு மண்டலத்துக்குப் பரவி, நரம்புகளை செயலிழக்கச் செய்யும் வேலையில் ஈடுபடுகிறது. இதனையடுத்து கை, கால்கள் மரத்துப்போய், இரத்தம் உறைந்து மரணம் சம்பவிக்கிறது.

Pin It