1.    இயற்கை சமைத்ததை மீண்டும் சமைக்காதீர்.

2.    உள்தோல் நீக்கிய – வேதிமுறையில் மெருகூட்டப்பட்ட தானிய மாவுகளை பயன்படுத்தாதீர்

3.    சத்துக்களை அவித்து வடிகட்டக் கூடாது.

4.    வாழும் மண்ணில் விளையாதது வேண்டாம்.

5.    உண்பவரின் தனித்தன்மைக்கு ஊறுபாடில்லாத உணவே உயர்ந்த உணவு.

6.    குளிர்பதனப் பெட்டியில் பதனப்படுத்துதல் பயனற்றது.

7.    எண்ணெயில் பொறித்தல் பொல்லாதது.

8.    மாட்டுப்பால் கன்றுக்குட்டிக்கு மட்டுமே நல்லது.

9.    புளி தேவையில்லை.

10.   வர மிளகாய் கூடாது.

11.   சத்தானது அனைத்தும் சுவையானதே.

12.   செயற்கை மணமூட்டி / சுவையூட்டிகளை தவிர்க்கவும்.

13.   வெள்ளை சீனி வேண்டாம்.

14.   பெருஞ்சூடு கேடு.

15.   உப்பு ரொம்பத் தப்பு.

16.   கடுகு தேவையில்லை.

17.   உணவை உருவாக்க இரண்டு மணி நேரம் அழிக்க நான்கு மணி நேரம்.

Comments

1 comment

1
இளம்பிறை
உணவே மருந்து என வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அடுக்களையே சிறந்த மருத்துவமனையாக விளங்கிய வீட்டினைக் கொண்டவர்கள் இவர்கள். ஆனால் தொ[ல்]லைக்காட்சி, செய்தித்தாள்கள் ஆகியவற்றில் விளம்பரங்களைப் பார்த்து நம் மக்கள் சோம்பேறியாகிவிட்டார்கள். சண்டேக்கு டாட்டா! வாருங்கள் ஃபாஷ்ட் ஃபுட் உண்ணலாம். உட்கார்ந்தே உண்ண உங்களுக்கே உணவகம் என்றெல்லாம் விளம்பரம் பார்த்து மக்கள் சமையலை மறந்து விட்டார்கள். நோய்களுக்குத் தன் உடலைத் தானமாகக் கொடுத்துவிட்டார்கள் எனச் சொல்லலாம். அந்த அளவு மக்களின் உடலும் மனமும் நல்ல உணவை மறந்து விட்டது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.