நோய் நுண்மங்கள் (germs) நிறைந்த உலகில் நாம் வாழ்கிறோம். (microbes or micro-organisms) உயிர் நுண்மம் அல்லது நுண்ம உயிரினம் நமக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. இந்த நுண்ம உயிரினங்கள், உறுப்பியல் சார்ந்த பொருள்களில் வாழ்ந்து தம் வம்சத்தைப் பெருக்குவதை முன்னுரிமையாகக் கொள்கின்றன. ஆகையால் அவை உணவில் தொடர்பு கொள்ளாதபடி முடிந்த அளவு விலக்குதல் அறிவுடைமை ஆகும்.

நுண்ம உயிரினங்கள் எனப் பொதுவாகச் சொல்லப்படுபவை துன்பம் தராதவை. சில நன்மை களைக் கூடத் தருபவை. அப்படியல்லாத பிற, நோயை உண்டாக்கும், நோய்த் தோற்றவகை நுண்மங்கள் என அழைக்கப்படும் நுண்மங்கள் உடலை ஆக்கிரமித்துக் கொண்டு உடலின் இழைமங்களை உண்பதால் வாழும்.

சிறிய தனித்த உயிர்மத்தை உறுப்பில் கொண்ட நுண்ணுயிரிகள் (bacteria) தொண்டை அடைப்பான் (diphtheria), காலரா (Cholera), தொழுநோய் (leprosy), கக்குவான் (Whooping cough), நச்சுக் காய்ச்சல் (typhoid fever), நரம்பு இசிவு நோய் (telanus), செம்புள்ளி நச்சுக் காய்ச்சல் (scarlet fever) போன்ற நோய்களுக்குக் காரணமாகின்றன. நச்சுத் தன்மையுடைய தொற்றுகள் (viruses), பெரும் ஆற்றலுடைய மின்னாற்றலால் இயங்கும் நுண்பொருள் பெருக்காடியால் (Microsopes) அறிவிய லார்கள் மட்டும் பார்க்கக்கூடிய அளவில், மிக நுண்ணியவையாய் உள்ளன. அப்படி இருப்பினும் அவை மூக்குச்சளி முதல் வெறிநாய் நோய் வரையிலான மனிதர்களின் பெரும்பாலான நோய்களுக்குப் பொறுப்புடையனவாய் அமைகின்றன.

மருத்துவமனைகளில் உடல் நலம் பேணும் தரத்தைச் (hygiene) சீராக வைத்துக் கொள்வதற்காக நச்செதிர் நிலை (antisepsis), நச்சற்றவை (asepsis) என்பவை பயன்படுத்தப்படுகின்றன. ஏன்டிசெப்சிஸ் புண்ணில் ஏற்கெனவே இருக்கும் நோய் நுண்மங்களை வேதியியல் பொருள் களை இட்டு அழிக்க முனைகின்றன. தொற்றும் பொருள் செல்லும் மூலங்களாக இருப்பன வாகிய மருத்துவர் கைகள், மருத்துவக் கருவிகள், மருத்துவக் கட்டுத்துணிகள் ஆகியவற்றை ஏன்டிசெப்சீஸ் நோய் நுண்மத்தீர்வாக்கம் (Sterilization) செய்து அதன் வழியாகப் புண்களில் நோய்க்கிருமிகள் புகாதவாறு தடுத்துவிடுகின்றன.

நச்சரிநோய் நுண்மத்தடை (antiseptic system) முறையை அறுவைச் சிகிச்சையில் பிரெஞ்சு அறிவியலார் லூயிஸ் பாஷ்டர் (Louis Pasteur) (1822-95) என்பவர் முதலில் அறிமுகப்படுத்தினார். முதலில் தூய்மையான தொற்றொழி நீர்மப்பொருளை (Carbolic acid)ப் பயன்படுத்தினார். ஆனால் அப்பொருள் மிக வலுவாய் இருந்ததால் மனித இழைமங்களை அடிக்கடி சிதைவுறச் செய்தது. பின்பு தொற்றொழி பொருள்களுள் அதைவிடச் சிறந்தவை கண்டுபிடிக்கப்பட்டன.

கொதி நீராவியால் மருத்துவக் கருவிகள் நோய் நுண்மத்தீர்வாக்கம் செய்யப்படுவதே ஏன்டிசெப்சிஸ் முறையாகத் தொடங்கப்பட்டது. பென்சிலினும் மற்ற புதிய மருந்துச்சரக்குகளும் நோய் நுண்மங்களைக் கட்டுப்படுத்துவதன் தொல்லையைக் குறைத்தன.

Pin It