மரங்களில் மீதும் நிலங்களின் மீதும் காளான் தன்மை கொண்ட பொருள்கள் வளர்வதைப் போல ரொட்டி, வெண்ணெய் மற்றும் பிற உணவுப் பொருள்களில் திடீரெனக் கடல் பஞ்சு போன்ற பூஞ்சைக்காளான்கள் (Mouldy) படிந்திருப்பதை நாம் காண்கிறோம். காற்றில் உள்ள சில நுண்ணுயிர்ப் பொருள்கள் ரொட்டி போன்ற பொருள்களில் தமக்குத் தேவையான ஈரப்பசை (Moist) கிடைக்கும் போது பூஞ்சைக்காளான்கள் அவற்றின் மீது தோன்றுகின்றன.

bread_370பஞ்சு போன்ற இப்பூஞ்சாணங்கள் அவைகளில் தன்மைக்கேற்றவாறு நன்மையும் தீமையும் செய்வதால் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு குறிப்பிட்ட பச்சைப் பூஞ்சைக்காளான் மருத்துவ சிகிச்சை செய்யப் பெருமளவில் நன்மை செய்துள்ளதாக நிறுவப்பட்டுள்ளது. சர் அலெக்சாண்டர் பிளமிங் (Sir Alexander Fleming) என்பவர் 1928 ஆம் ஆண்டில் குறிப்பிட்ட நுண்ணுயிர்களின் (bacteria) வளர்ச்சியை நிறுத்திவிடும் தன்மை கொண்டது அந்தப் பச்சைப் பூஞ்சக்காளான் எனக் கண்டுபிடித்தார். பென்சிலின் என்று (Pencillin) டாக்டர்களும் உயிர் எதிரி (antibiotics) என்று பிறரும் அழைக்கும் இந்தப் பச்சைப் பூஞ்சைக்காளானைப் பயன்படுத்தி மருத்துவர்கள் நோய்களுக்குக் காரணமான வன்மையான நுண்ணுயிரிகளைக் கொன்றழித்து மக்களை வாழவைக்கின்றனர். ஈடில்லா நோய் நீக்கு ஆற்றலைத் தரும் பூஞ்சைக்காளான்கள் பிரமாண்டமான அளவில் பயிர் செய்யப்படுகின்றன.

மேலும் பல பயன்களைப் பூஞ்சைக்காளான்கள் தருவனவாய் உள்ளன. சில பூஞ்சைக்காளான்கள் பீரை (Beer) கலக்கி உருவாக்கத் தேவையான புளித் தெழுப்பும் தன்மையைத் தோற்றுவிக்கின்றன. சில காளான்கள் கொழ முந்திரிப் பழச்சாற்றை ஒயின் (Wine) ஆக மாற்றும் தன்மை கொண்டனவாய் உள்ளன. ரொட்டி செய்யவும் சுவையான பல்வகை வெண்ணெய்ப் பொருள்களை உண்டாக்கவும் உதவுகின்றன. உதிர்ந்த இலைகளையும் இறந்த விலங்கினங்களின் உடல்களையும் மக்கவைத்து நிலத்திற்குப் பயன் மிக்க உரப்பொருளாக மாற்றும் முக்கிய செயல்திறன் கொண்டனவாகவும் உள்ளன பூஞ்சாணங்கள்.

Pin It