உற்சாகத்தை பாய்ச்சுவதையும், சில உணவுகள் உங்களைத் தொய்ந்துபோக வைப்பதையும் உணர்ந்திருக்கிறீர்களா? சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டுமானால் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று நாம் அறிய வேண்டும்.

இனிப்பு உணவுகள்

 இனிப்பான கேக், பீட்சா, ஒயிட் பிரெட் சாட்விச், சாக்லேட் மற்றும் இனிப்பு வகைகளைச் சாப்பிடுவது உங்களின் ரத்த சர்க்கரை அளவைக் கூட்டி உற்சாக அளவில் ஒரு தாவலை ஏற்படுத்தும் ஆனால் அது தற்காலிகமானது. சட்டென்று ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவது மூளையின் உஷார்த்தன்மையை அதிகரிக்கும். ஆனால் சர்க்கரை அளவு குறையக் குறைய கடும் தளர்ச்சி ஏற்படும்.

மாற்று உணவு

 மேற்கண்டவற்றுக்கு பதிலாக, வேதிபொருட்கள் சேர்க்காத பனை வெல்லத்துடன் எள், பாதாம்பருப்பு, பரங்கி விதை ஆகியவற்றுடன் முழுக் கோதுமை அல்லது பல தானிய ரொட்டியுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

பொரித்த உணவுகள்

 அதிகமான கொலஸ்ட்ராலும், கொழுப்பும் உள்ள பொரித்த உணவுகளை விலக்க வேண்டும். பக்கோடா, பஜ்ஜி போன்றவை செரிமானம் ஆவதற்கு ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் ஆகிறது. செரிமானத்தின்போது உடம்பின் அதிகமான சக்தி அதற்கே செலவாவதால், அப்போது அதிக சோம்பல் உணர்வு ஏற்படுகிறது.

மாற்று உணவு

 சோயா செறிந்த நொறுக்குத் தீனிகள், கேழ்வரகுப் பண்டங்கள், ரவா இட்லி போன்றவற்றைச் சாப்பிடலாம்.

உற்சாக பானங்கள்

 உற்சாகமூட்டும் பானங்கள் (எனர்ஜி டிரிங்ஸ்) பல. அவற்றில் உள்ள அதிகமான சர்க்கரை மற்றும் காபீன் காரணமாக உடனடி சக்தி கிடைக்கின்றன. ஆனால் சில மணி நேரங்களிலேயே அந்தச் சக்தி வடியத் தொடங்கிவிடும். அப்போது மேலும் தளர்ந்த நிலை உண்டாகிவிடும். பரீட்சைக்கு படிக்கும்போது விழித்திருப்பதற்காக உற்சாகமூட்டும் பானங்களை பருகுவோரிடம் இதைக் காண முடியும். உற்சாக மூட்டும் பானங்கள் ஆரம்பத்தில் காபீன் உதவியால் மூளைச் சக்தியைக் கூட்டும். ஆனால் சற்று நேரத்துக்கு பின் அதிகக் களைப்பு ஏற்பட்டு விடும்.

மாற்று உணவு

 உங்களுக்கு பிடித்த எந்த பழத்தையும் சாப்பிடலாம்; ஒரு பெரிய கிளாசில் பழச்சாறு அருந்தலாம். இளநீர், கரும்புச் சாறு, எலுமிச்சை ஜீஸ் போன்றவற்றையும் பருகலாம்.

பதப்படுத்திய உணவுகள்:

 கிரீம் பிஸ் கட்டுகள், நூடுல்ஸ், உப் பிட்ட உருளைக் கிழங்கு சிப்ஸ், கிரீம் நிறைந்த சா லட், வெண்ணை வழியும் பீட்சா ஆகியவற்றில் நிறைய சோடியம் உள்ளது.

 சோடியமானது தண்ணீரை ஈர்த்துக் கொள்வதால் அவை நீர்வறட்சி, அமைதியற்ற நிலை, எளிதாக எரிச்சலுக்குள்ளாகும் தன்மை போன்றவற்றை ஏற்படுத்தும். பதப்படுத்திய உணவுகளின் தயாரிப்பின்போது அவை அதிக நாள் கெடாமல் இருப்பதற்காக ஹைட்ரேஷன் பிராசஸூக்கு உட்படுத்தப்படுகின்றன. அவை பல்வகை டிரான்ஸ்பேட்ஸை ஏற்படுத்துகின்றன. இந்தக் கொழுப்புகளைச் சாப்பிடுவது, குறிப்பிடத்தக்க அளவு சக்தியைக் குறைக்கும்.

மாற்று உணவு

 வறுத்த தானியங்களை சாப்பிடலாம். மனதுக்கும் உடலுக்கும் உற்சாகமும் சக்தியும் தரும். புரதம், தாதுச்சத்துக்கள் உடலுக்குக் கிடைக்கும்.

காபி

 சோர்வாக உணரும்போது சூடாக ஒரு கப் காபி குடிக்கத் தோன்றும். அது உடனடியாகத் தெம்பூட்டும் என்ற எண்ணத்தில், ஒரு கோப் பை ஸ்ட்ராங் காபி விழிப்பாக வைத்திருக்கும் என்பது உண்மை. ஆனால் அது சிறிது நேரத்துக்குத்தான். காபியில் உள்ள காபீன் உடலின் உள்ளமைப்பைத் தூண்டி சோர்வை விடுவிக்கிறது. ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் அது அடிமைத் தன்மையை ஏற்படுத்திவிடும். மேலும் அதிகமாகக் காபி பருகுவது எலும்புகளில் கால்சியம் அளவைக் குறைக்கும், தூக்கத்தைத் தொந்தரவுப்படுத்தும். நரம்புத்தளர்ச்சியை ஏற்படுத்தும்.

மாற்று உணவு

லெமன் டீ அல்லது காய்கறி சூப் சாப்பிடுவது ஆற்றலை மெருகேற்றும். எந்தக் கெடுதியும் ஏற்படுத்தாது.

வீடும் பள்ளியும் மாறவேண்டும்

 குழந்தைகளுக்கு ஆரம்பப்பள்ளியில் இருந்து உயர் பள்ளி வரை உணவு மற்றும் வாழ்வு முறை எளியமுறையில் ஆர்வமூட்டும் விதத்தில் கற்பிக்க வேண்டும்.

 வாரத்தில் 2-3 முறை 30-45 நிமிடம் உடற் கல்வி யோகா, மூச்சுப்பயிற்சி, சுகாதாரம் குறித்து தெளிவாகக் கற்றுத் தரவேண்டும்.

 உடற்கல்வி, உணவியல் அறிவியல் மற்றும் உடல் உழைப்பு பற்றி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அவசியம்.

 பள்ளிக் கூடங்களில், பள்ளிக்கூட வாசல்களில் இனிப்பு வகைகள், சாக்லேட் வகைகள் விற்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். அப்படி நடைபெற்றால் சட்ட ரீதியான தண்டனை வழங்க வேண்டும்.

 ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவு பற்றி விளம்பரங்கள் ஆரம்பப் பள்ளி மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு சென்றடையமையாமல் தடுக்க வேண்டும். அவைகளின் கேடுகள் குளித்து எச்சரிக்க வேண்டும்.

 உணவு விஷயத்தில் சகோதரர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் நல்ல வழிக் காட்டிகளாக அமைய வேண்டும்.

 உணவு உண்ணும் சமயம் குழந்தைகளிடம் கோபமாக நடந்து கொள்ளக்கூடாது. அன் போடும் மகிழ்ச்சியோடும் நடந்து கொள்ள வேண்டும்.

 சாக்லேட், பிஸ்கட், கேக், பொரித்த எண்ணெய் பண்டங்கள் போன்ற உணவுப் பொருட்களைப் பரிசுப் பொருளாகப் பயன்படுத்தக் கூடாது.

(மாற்று மருத்துவம் ஜூலை 2010 இதழில் வெளியானது)

Comments

1 comment

1
venkata jalapathi
payanuulla katturai. nandri. valtthukkal

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.