சென்ற 12-12-2011 அன்று 40 வயதுள்ள துயரரை அவரின் மனைவி எனது கிளினிக்கிற்கு அழைத்து வந்தார்.  துயரர் பற்றி அவர் கூறியதாவது, “என் கணவருக்கு திடீரென காக்கை வலிப்பு வருகிறது.  கைகால்கள் விரைத்து விடுகின்றன.  கைகால்கள் இழுக்கின்றன.  வாய் இறுக மூடிக்கொள்கிறது.  பற்கள் கிட்டித்துக் கொள்கின்றன.  வலிப்பு வரும் அறிகுறி ஏதும் தெரியாமல் திடீரென வருகிறது.  வலிப்பின்போது சுயநினைவு இருக்காது. 

வலிப்பு நின்ற ஒரு மணி நேரத்திற்குப் பின்புதான் அவருக்கு நினைவு திரும்பும். வலிப்பிற்குப் பின்பு உடல் முழுவதும் வலிப்பதாகக் கூறுவார்.  தனக்கு என்ன நடந்தது எனக் கேட்பார்.  கடைசியாக 08-12-2011 அன்று மட்டும் 3 முறை வலிப்பினால் பாதிக்கப்பட்டார். அவர் வேலைக்கும் செல்ல இயலவில்லை.  அவரை வலிப்பு நோயிலிருந்து காப்பாற்றுங்கள்” என அழுது கொண்டே கூறினார்.

துயரரிடம் மேற்கொண்டு விளக்கங்களைக் கேட்டபொழுது தனக்கு கடந்த காலங்களில் சுரம், டைபாய்டு சுரம் வந்திருப்பதாகக் கூறினார்.  தன் உடல் நிலைப்பற்றி கவலையாய் இருப்பதாகவும், தன் இருமகள்களின் (வயது 9 மற்றும் வயது 12) எதிர்காலத்தைப் பற்றி கவலையாய் உள்ளதாகவும், தன் நோய் பற்றிய பயம் இருப்பதாகவும் கூறினார்.  அவரின் கடந்தகால நிகழ்வுகளைத் துருவி கேட்டபொழுது, 2002-ம் ஆண்டு தான் சாலையில் சைக்கிளில் சென்ற பொழுது, ஒரு வேன் தன் பின் பக்கம் வந்து தன்மீது மோதியதால் தான் சாலையில் விழுந்துவிட்டதாகக் கூறினார். 

வலது  பக்கத் தலையில் தனக்கு அடிப்பட்டு காயம் ஏற்பட்டாகக் கூறினார்.  தலைக் காயத்திற்கு தையல் போடப்பட்டு ஆங்கில மருத்துவத்தில் 1ணீ ஆண்டுகள் மருந்து மாத்திரைகள் தான் சாப்பிட்டு வந்ததாகக் கூறினார்.  நீண்ட கால இடை வெளிக்குப் பிறகு சென்ற 08-08-2007ந் தேதி மீண்டும் தனக்கு வலிப்பு வந்ததாகக் குறிப்பிட்டார்.  அன்றைய தேதியில் அவருக்கு எடுக்கப்பட்ட E.E.G.Report-ல் “THIS EEG IS NORMAL எனக் குறிப்பிட்டிருந் தது.  அந்த ரிப்போர்ட்டைக் காட்டினார்.  அது வரை ஏழெட்டு முறை அவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.  இறுதியாக 08-12-2011 அன்று மட்டும் மூன்று முறை அவருக்கு வலிப்பு வந்துள்ளதாகக் கூறினார்.

29-04-2009ல் எடுக்கப்பட்ட MRI-BRAIN PLAIN - ரிப்போர்ட்டின்படி “OLD CONTUSION CHANGES WITH GLIOSIS BILATERAL FRONTAL LOBE)” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  09-12-2011-ல் எடுக்கப்பட்ட CT-SCAN BRAIN-PLAIN ரிப்போர்ட்டில் “RIGHT FRONTAL FOCAL GLIOSIS” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட விவரங்களை எல்லாம் ஆராய்ந்தபின் துயரர் 2002-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் கீழேவிழுந்து தலையின் வலது பக்கத்தில் அடிப்பட்டு காயம் ஏற்பட்டதே அவரின் வலிப்பு நோய்க்கு காரணம் என முடிவுக்கு வந்தேன். 

அவருக்கு கீழ்க்கண்ட விவரப்படி மருந்தளிக்கப் பட்டது.

12-12-2011 :

1)நேட்ரம் சல்ப்யூரிகம் 1 M : காலை ஆகா. முன்

2)ஆர்னிகா 1 M  : மதியம் ஆகா. முன்

3)ஹைபரிகம் 200 : இரவு ஆகா. முன்

4)பயோ கூட்டு மருந்து எண் 24  :

தினசரி 2 வேளை ஆகா. பின்.

வாரத்தில் 4 நாட்கள் வீதம் 4 வாரங்களுக்கு தரப்பட்டது.

23-02-12 :

தன் உடல் நிலையில் முன்னேற்றம் தெரியவே, துயரர் ஒரு வாரம் வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபடலானார்.  21-02-2012 அன்று அமாவாசை நாள் இத்தகைய சூழ்நிலையால் அவருக்கு மீண்டும் பலமுறை வலிப்புகள் வந்தன.  மேலும் மஞ்சள் நிறத்தில் கசப்பு சுவையான பித்த வாந்தியும் எடுத்தார்.  வாந்தி எடுத்தபின் ஒரு வித மயக்க உணர்வுடன் ஒரு காரில் துயரர் அழைத்து வரப்பட்டார்.

அவருக்கு, பெல்லடொன்னா 30, குப்ரம் மெட் 30 மற்றும் நக்ஸ்வாமிகா 30 - இவற்றின் திரவ மருந்துகளில் ஒவ்வொன்றிலும் இரண்டு சொட்டுகள் 50 மிலி தண்ணீரில் கலந்து கொடுக்கப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பின் மயக்கம் தெளிந்து இயல்புநிலைக்கு வந்தார்.  தேவை ஏற்பட்டால் மட்டும் அவருக்கு  இதேபோல் இம்மருந்துகளை கொடுத்து வருமாறு கூறப்பட்டது.  மேலும், நேட்ரம் சல்ப்யூரிகம் 1 M ல் காலை ஒரு வேளையும், ஆர்னிகா 1 Mல் இரவு 1 வேளையும், வாரத்தில் 3 நாட்கள் வீதம் கொடுத்து வருமாறு கூறப்பட்டது.  பயோ கூட்டு மருந்து எண் 24- தினசரி 3 வேளை சில வாரங்களுக்குக் கொடுக்கப்பட்டது.

துயரருக்கு அதன்பின் இன்றைய தேதி வரை வலிப்பு தொந்தரவு ஏதுமின்றி நலமாக உள்ளார்.

Pin It