தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் - 2
கடலைமாவு - 1/2 கப்
மிளகாய்த்தூள் - காரத்திற்கு ஏற்ப
சமையல்சோடா - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை -  தேவையான அளவு

செய்முறை

வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக பொடியாக நறுக்க வேண்டும். கறிவேப்பிலையை பொடியாக நறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, சமையல் சோடா, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து சிறிது தண்ணிர் தெளித்து பிசைய வேண்டும். பிசைந்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்கு பிரட்ட வேண்டும். வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பிரட்டிய வெங்காயத்தை உதிரியாகப் போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும்.

Pin It