தேவையான பொருட்கள்:

கடலைமாவு - 1 கப்
சின்ன வெங்காயம் - 10
பச்சைமிளகாய் - 1
கீரை - அரை கப்
கறிவேப்பிலை - 1 கொத்து
சமையல் சோடா - 1 சிட்டிகை
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் கடலைமாவுடன் எண்ணெய் தவிர அனைத்தையும் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு கலந்து வைக்க வேண்டும்.

வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்தவுடன் மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து போண்டாவாக போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும். இப்போது கீரை போண்டா தயார்.

Pin It