தேவையான பொருட்கள்:

குடை மிளகாய் - 10
கடலை மாவு - 4 மேஜைக்கரண்டி
அரிசிமாவு - 2 மேஜைக்கரண்டி
மைதாமவு - 2 மேஜைக்கரண்டி
சோடாஉப்பு - சிட்டிகை
காயப்பொடி - சிட்டிகை
சில்லி பவுடர் - கால் ஸ்பூன்
கலர் - சிட்டிகை
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 200 மில்லி 

செய்முறை:

குடை மிளகாயைப் பாதியாக கீறி விதை நீக்கி காம்போடு கழுவி வைக்க வேண்டும். எண்ணெய் தவிர அனைத்து பொருட்களும் சேர்த்து கெட்டியாக கரைத்து வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவில் மிளகாய் தோய்த்து போட்டு சிவக்க, எண்ணெய் கொதி அடங்கியதும் எடுக்க வேண்டும்.

Pin It